மிதுன
ராசி அன்பர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 6-ல் இருந்த ராகு இப்போது 5-ஆம் இடத்துக்கும் (துலா ராசிக்கும்); 12-ல் இருந்த கேது இப்போது 11-ஆம் இடத்துக்கும் (மேஷ ராசிக்கும்) மாறியிருக்கிறார்கள். ராகுவும் கேதுவும் ஏற்கேனவே இருந்த இடங்கள் யோகமான இடங்கள்தான். அதற்காக இப்போது மாறியுள்ள இடங்கள் யோகமில்லை என்று அர்த்தமல்ல. இவையும் நல்ல இடங்கள்தான். குறிப்பாக ராகு மாறியுள்ள இடத்தைவிட கேது மாறியுள்ள இடம் மிகமிக யோகமான இடம் என்று குறிப்பிடலாம்.
ராகு- கேதுக்களுக்கு 3, 6, 11-ஆம் இடங்களும், 1, 4, 7, 10 ஆகிய கேந்திர ஸ்தானங்களும் யோகம் செய்யும் இடங்கள். பாப கிரகங்கள் கேந்திரத்திலும் சுப கிரகங்கள் திரிகோணத்திலும் வலுப்பெறுவார்கள். இதன்படி ராகு ஏற்கெனவே இருந்த 6-ஆம் இடத்தைவிட இப்போது மாறியுள்ள 5-ஆம் இடம் (திரிகோணம்) மிகச்சிறப்பான இடமென்று சொல்லமுடியாவிட்டாலும் பாதகம் பண்ணாது. ஐந்து- ஒன்பதுக்கதிபர் பாபர் சுபரானாலும் பொன் போன்ற சுபமே செய்வர் என்பது சந்திர காவிய விதி! அதுபோல ஏற்கெனவே கேது இருந்த 12-ஆம் இடத்தைவிட இப்போது மாறியுள்ள 11-ஆம் இடம் மிகமிக அற்புதமான இடம்! தவிரவும் ராகுவும் கேதுவும் தலையும் வாலுமாகும். இதில் யாராவது ஒருவர் நல்ல இடத்தில் இருந்தாலும் இன்னொருவரும் நல்ல பலனே செய்வார் எனலாம். எனவே கடந்த காலத்தில் நடந்த யோகமும் நன்மையும் இந்த ராகு- கேது பெயர்ச்சிக்குப் பின்னும் தொடர்ந்து நடக்குமென்று நிம்மதியடையலாம். அந்த காலம் குரு 11-ல் இருந்ததும் ஒரு அனுகூலம். இப்போது 12-ல் குரு மாறியிருப்பதால் அந்த யோகம் தொடருமா என்ற சந்தேகம் ஏற்படலாம். ஆனால் மிதுன ராசிக்கு பாதகாதிபதி 12-ல் மறைவதால் கெடுதல் குறையும் என்பதோடு குருவின் பார்வை 4-ஆம் இடத்துக்குக் கிடைப்பதால் பூமி, வீடு, வாகன யோகம் உண்டாகும். அது சம்பந்தமான சுபவிரயம் ஏற்படுமென்று கணக்கிடலாம்.
5-ஆம் இடம் என்பது மக்கள், திட்டம், மனது, உபதேசம், தாய்மாமன், பாட்டனார், பூர்வ புண்ணியம், தெய்வ வழிபாடு முதலியவற்றைக் குறிக்கும் இடம். அங்கு ராகு வந்திருக்கிறார். அவருடன் மிதுனராசிக்கு 9-க்குடைய சனி உச்சம் பெற்று சேர்ந்திருக்கிறார். ராகு- கேதுவுக்கு சொந்த வீடு இல்லையென்பதும் எந்த வீட்டில் இருக்கிறாரோ அந்த வீட்டுப் பலனையும், யாரோடு சேர்ந்திருக்கிறாரோ அவருடைய பலனையும் செய்வார் என்பது நீங்கள் அறிந்ததே! அதன்படி பிள்ளைகள் வகையில் நல்ல பலன்களைச் செய்வார். படிப்பு, வேலை, திருமணம், வாரிசு யோகம் போன்ற பலன்கள் பிள்ளைகளுக்கு நடக்கும். அதேபோல குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். ராகு, சனி 5-ல் நிற்க, குரு அவர்களுக்கு 8-ல் ராசிக்கு 12-ல் மறைவதால் பிரசவ நேரத்தில் ஆபரேசன் போன்ற சிக்கல் உண்டாகும். அந்த மாதிரி கட்டத்தில் திருச்சி தாயுமானவ சுவாமிக்கும் கும்பகோணம் குடவாசல் சேங்காலிபுரம் தத்தாத்ரேயருக்கும் பிரார்த்தனை செய்து காணிக்கை முடிந்து வைத்தால் எல்லாம் எளிமையாக நிறைவேறும்.
9-ஆம் இடம் தகப்பனார் ஸ்தானம். 5-ஆம் இடம் பிள்ளைகள் ஸ்தானம். பெற்றோர்- பிள்ளைகளுக்கு இடையில் கடந்த காலத்தில் நிலவிய பனிப்போர் விலகி அன்யோன்னியமும் இணக்கமும் நெருக்கமும் உண்டாகும். ஒருவருக்கொருவர் அனுசரணையாகவும் ஆதரவாகவும் இருப்பார்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் இருந்த சிக்கலும் தீர்ந்துவிடும்.
பிள்ளைகளின் உத்தியோக வகையில் உள்ள சங்கடங்களும் சஞ்சலங்களும் தீர்ந்து பதவி உயர்வு, ஊதிய உயர்வு முதலிய நன்மை உண்டாகும். அதுமட்டுமல்ல; உள்ளூரில் படிப்புக்கும் திறமைக்கும் ஏற்ற வேலையோ சம்பளமோ இல்லாதவர்களுக்கு வெளிநாட்டு வேலையும் கைநிறைய சம்பளமும் கிடைக்கும். அத்துடன் என்.ஆர்.ஐ கடன் வாங்கி சொந்த ஊரில் வீடு கட்டும் திட்டமும் நிறைவேறும். தாய்மாமன் அல்லது பெண்கொடுத்த மாமனார் வகையில் கசப்பு நீங்கி இனிப்பு ஏற்படும். கருத்து வேறுபாடுகள் நீங்கி கருத்தொற்றுமை ஏற்படும். கொடுக்கல்- வாங்கல் நாணயம் கெடாதபடி செயல்படும். தடைப்பட்ட காரியங்கள் கைகூடும். ஏற்கெனவே இழந்த இழப்புகளை ஈடுசெய்யலாம்.
ராகுவுக்கு ஆதரவாக கேது 11-ல் நின்று ஜென்ம ராசியையும் 5-ஆம் இடம், 9-ஆம் இடங்களையும் பார்ப்பதால் தொழில் லாபம், வரவு- செலவு, பணப்புழக்கம் தாராளமாக அமையும். தெய்வப் பிரார்த்தனைகள் நிறைவேறும். குலதெய்வ வழிபாடு முறையாகச் செயல்படும்.
கடந்த காலத்தில் 6-ல் இருந்த ராகுவாலும் 12-ல் இருந்த கேதுவாலும் தொழில் முறையாக நடந்து, வருமானம் சரியாக அமையாததால், கடனுக்குமேல் கடன் வாங்கி வட்டித் தொகையும் அதிகமாகி, வட்டிகட்டவும் கடன் வாங்கி பெரும்பள்ளத்தில் உங்களைத் தள்ளிவிட்டது. அதிகமான மின்வெட்டு காரணத்தால் தொழில் உற்பத்தியும் சரிவர அமையவில்லை. இதெல்லாம் கடந்தகால அனுபவங்கள். இந்த ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு இந்த அவல நிலைக்கு நல்ல தீர்வு உண்டாகும். மின்பற்றாக்குறை நீங்கும். தொழில் உற்பத்தி சரியாகும். தயாரிப்புக்குமேல் விற்பனையும் அதிகமாகும். சிலர் ஏற்றுமதித் துறையிலும் தீவிர கவனம் செலுத்தலாம். சிலர் வெளிமாநில வர்த்தகத் தொடர்பால் கணிசமான லாபம் பார்க்கலாம்.
தொழில் மந்தம், வேலையாள் ஒத்துழைப்புக் குறைவு, சிப்பந்திகள் பிரச்சினை என்று வேதனைப்படுகிறவர்கள் கும்பகோணம் குடவாசல் சேங்காலிபுரம் சென்று தத்தாத்ரேயர் கோவிலில் கார்த்த வீர்யார்ஜுன யந்திரத்துக்கு பூஜை போட வேண்டும். தென்னிந்தியாவில் இங்கு மட்டுமே கார்த்த வீர்யார்ஜுன யந்திரம் இருக்கிறது. அதேபோல உலகத்திலேயே கார்த்த வீர்யார்ஜுனருக்கு சிலையும் தனிச் சந்நிதியும் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மட்டுமே உள்ளது. கார்த்தவீர்யார் ஜுனருக்கு ஆயிரம் கைகள். ஆரம்பத்தில் தீவிர சிவபக்தனாக விளங்கிய கார்த்தவீர்யார்ஜுனன், தத்தாத்ரேயர் அவதாரத்துக்குப் பிறகு தத்தாத்ரேயரின் சீடனாக மாறிவிட்டான். தத்தாத்ரேயரை வழிபட்டால் ஜென்ம வினைகளும் பாவங்களும் போகும். புத்திர பாக்கியம் உண்டாகும். மனதில் மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படும். மனோவியாதியும் குணமாகும். கார்த்தவீர்யார்ஜுனரை வழிபட்டால் திருடுபோகாது. களவுபோன பொருள்களும் காணாமல்போன பொருள்களும் கிடைக்கும். தொழில் துறையில் நல்ல வேலைக்காரர்களும், விசுவாசமும் உண்மையும் உள்ள ஊழியர்களும் அமைவார்கள்.
தத்தாத்ரேயர் மந்திரம்
"ஓம் ஆம் ஹ்ரீம் க்ரோம் ஏஹி
தத்தாத்ரேயா நமஹா.'
கார்த்தவீர்யார்ஜுன மந்திரம்
"ஓம் கார்த்த வீர்யார்ஜுனோ நாமராஜா
பாஹூ ஸஹஸ்ரவான் தஸ்ய ஸ்மரண
மாத்ரேண கதம் நஷ்டம் ச லப்யதே ஓம்.'
11-ஆம் இடத்துக் கேது கடல் கடந்து வேலைக்குப் போய் சம்பாதிக்கும் யோகத்தையும் தருவார். அயல்நாட்டு வர்த்தகத் தொடர்பால் வியாபாரிகள் அதிக லாபத்தை அடையவும் வழிவகுப்பார். 11-ஆம் இடம் உபயகளஸ்திர யோகத்தையும் மூத்த சகோதரத்தையும் குறிக்கும். தாரம் இழந்தவர்களுக்கு மறுமணம் நடக்கும். தாரம் உள்ளவர்களுக்கும் சின்ன வீடு செட்டப் ஆகும். தசாபுக்திகள் சாதகமாக அமைந்தால் விதவைத் திருமணமும் அதனால் தனலாபமும் ஏற்படும். ஷேர் மார்க்கெட்டில் எதிர்பாராத லாபம் உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டு லாட்டரி பரிசும் கிடைக்கலாம்.
துலா ராகு 3-ஆம் பார்வையாக மிதுன ராசிக்கு 3-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக 11-ஆம் இடத்தையும்; 11-ஆம் பார்வையாக 7-ஆம் இடத்தையும் பார்க்கிறார். 3-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சகோதர- சகோதரி வகையில் சகாயங்களையும் உதவிகளையும் நன்மைகளையும் எதிர்பார்க்கலாம். ஜாதக தசா புக்தி பாதகமாக இருந்தால் உடன்பிறந்தோர் வகையில் பிரச்சினைகளையும் சஞ்சலங்களையும் விரயத்தையும் சந்திக்க நேரும். அதற்கேற்ற பரிகாரங்களை செய்துகொள்ளவும். ராகு முஸ்லிம் கிரகம்; கேது கிறிஸ்துவ கிரகம் என்பதால், முஸ்லிம் அல்லது கிறிஸ்துவ நண்பர்களின் ஆதரவும் உதவியும் எதிர்பார்க்கலாம்.
ராகு 11-ஆம் இடத்தைப் பார்க்கும் பலனை முன்னரே குறிப்பிட் டோம். 7-ஆம் இடத்தை ராகுவும் சனியும் பார்ப்பதால் நாக தோஷம், சனி தோஷம். திருமணத் தடை, தாமதமாகும். பருவ வயதைக் கடந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமணம் ஆகாமல் இருந்தால் ஆண் களுக்கு கந்தர்வராஜ ஹோமமும், பெண்களுக்கு பார்வதி சுயம்வரகலா ஹோமமும் செய்தால் ராகுவும் சனியுமே திருமணத் தடைகளைப் போக்கி கல்யாணத்தை நடத்தி வைப்பார்கள். ஜாதகத்தில் செவ்வாய், சனி சேர்க்கை, ராகு- கேது சம்பந்தம் ஏற்பட்டால் கலப்புத் திருமணம், காதல் திருமணம் எனப்படும். அந்த மாதிரி இருந்தால் ஆணானாலும் பெண்ணானாலும் காமோகர்ஷண ஹோமம் செய்து கலச அபிஷேகம் செய்யலாம். இவையெல்லாம் எனது குருநாதர் பள்ளத்தூர் குருக்கள் அய்யா சாஸ்திரங்களில் இருந்து கண்டுபிடித்து பல ஹோமங்கள் நடத்தி பலன்கள் கிடைத்ததை எங்களுக்கு உபதேசித்துள்ளார். அதைப் பின்பற்றி பள்ளத்தூர் அருள் நந்தி ஆசிரமத்திலும் காரைக்குடி செஞ்சை நாகநாத சுவாமி கோவிலும் செய்து வருகிறார்கள். இது தவிர தேவிப்பட்டினத்தில் மொட்டையர் மகன் சக்தி சீனிவாச சாஸ்திரிகளும் வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்திலும் மேற்படி பரிகார பூஜைகள் செய்கிறார்கள். யாருக்கு எது அண்மையோ- வசதியோ அங்கு அவரவர் விருப்பப்படி செய்து கொள்ளலாம்.
கேது ஜென்ம ராசியையும், 9-ஆம் இடத்தையும், 5-ஆம் இடத்தையும் பார்ப்பதால் உங்களுக்கு செல்வாக்கு, மதிப்பு, மரியாதை உண்டாகும். ஆன்மிகம்- ஆலயத் திருப்பணி, அறக்கட்டளை, தர்மகர்த்தா பொறுப்பு போன்ற பதவிகளும் அமையும். கௌரவம் ஏற்படும். குரு 5-க்கு 8-ல் மறைவதால், வாரிசு இல்லாதவர்கள் ஜாதகரீதியாகவும் உடல்ரீதியாகவும் இனி வாரிசுக்கு இடமில்லையென்றால் ஸ்வீகாரமாகவோ அல்லது அபிமான புத்திரராகவோ ஏற்றுக்கொள்ளலாம்.
ஒரு அனுபவ கதை! நகரத்தார் சமூகத்தில் வாலிப பருவத்திலும் பிள்ளையைக் கூட்டுவார்கள். அப்படி ஒரு செட்டியார் 24 வயதில் ஒரு ஜாதகரை, பெற்ற தாய்- தந்தைக்கு லட்ச ரூபாய் கொடுத்து தத்து எடுத்துக்கொண்டார். செட்டியாருக்கு கோடிக்கணக்கில் சொத்து. ஆண் வாரிசு இல்லை. ஒரே பெண்தான். அந்தப் பெண்ணுக்கு பருவ வயதில் ஒரு மகள். சுவீகார புத்திரனுக்கு மகள் வயிற்றுப் பேத்தியை மணம் முடித்துவிட்டால் சொத்து வெளியில் போகாது. தமக்குள்ளேயே இருக்குமென்பது செட்டியார் திட்டம். என் குருநாதரிடம் வந்து பேத்தி ஜாதகத்தையும் சுவீகார மகன் ஜாதகத்தையும் பொருத்தம் பார்த்தார். பெண் ஜாதகமும் பையன் ஜாதகமும் பொருத்தம் இருக்கிறது. ஆனால் பையன் ஜாதகத்தில் சில குறை- பெண் ஜாதகத்திலும் திருமண யோகம் தாமதமாகிறது. ஒருசில பரிகாரம் செய்துவிட்டு திருமணம் செய்தால் சிறப்பாக இருக்கும் என்றார். செட்டியாரோ செலவு செய்ய விருப்பம் இல்லாதவர். மகன் மாப்பிள்ளையிடம், "அய்யர் பணத்துக்கு ஆசைப்பட்டு பரிகாரம் அது இது என்று சொல்லுகிறார். பொருத்தம்தான் இருக்கிறதே, கல்யாணத்தை நடத்தி விடுவோம்' என்று தன் இஷ்டப்படி பஞ்சாங்கத்தில் முகூர்த்த நாளைப்பார்த்து 5-8 வரும் தேதியில் ஆடம்பரமாகச் செலவு செய்து திருமணத்தை நடத்தி விட்டார். சாந்திமுகூர்த்த நேரத்தில் பேத்தி அழுது கொண்டே வெளியில் வந்து அம்மாவிடம், "பாழும் கிணற்றில் தள்ளிவிட்டீர்களே. அவனுக்கு ஆண்மை இல்லையே' என்று கூறிவிட்டாள். செட்டியாருக்கு ஆத்திரம். இரண்டு லட்சம் போய்விட்டது. அவனை அடித்து போலீசில் ஒப்படையுங்கள் என்று கத்த ஆரம்பித்துவிட்டார். உடன் இருந்தவர்கள் சட்டப்படி தத்து எடுத்துவிட்டீர்கள். போலீசுக்குப் போனாலும் நீங்கள்தானே ஜாமீன் எடுக்கவேண்டும் என்று சமாதானம் கூறிவிட்டார்கள். ஜோதிடர் சொன்ன பரிகாரத்தைச் செய்ய செலவுக்கு யோசனை பண்ணி எவ்வளவு பெரிய கேவலத்தை இழப்பைத் தேடிக்கொண்டார் பாருங்கள்.
மொத்தத்தில் ராகு- கேது பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு அனுகூலமும் ஆதரவும் காட்டும். அம்மா அடித்தால் அப்பா அணைப்பதும் அப்பா அடித்தால் அம்மா அடைக்கலம் தருவதுமாக ராகுவால் ஏற்படும் துன்பங்களை கேது துடைப்பார்; கேதுவால் ஏற்படும் கெடுதல்களை ராகு போக்குவார்.
மிருகசீரிட நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த ராகு- கேது பெயர்ச்சி வெற்றியையும் முன்னேற்றத்தையும் தரும். மிருகசீரிடம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் வீட்டில் 11-ல்தான் கேது நிற்கிறார்; ராகு பார்க்கிறார். வில்லங்கம் விவகாரத்திலும், வழக்குகளிலும் சாதகமான தீர்ப்பு எதிர்பார்க்கலாம். வைத்தீஸ்வரன் கோவில் சென்று முத்துக்குமார சுவாமியை வழிபடவும்.
திருவாதிரை நட்சத்திரக்காரர்களுக்கு:
திருவாதிரை ராகுவின் நட்சத்திரம். எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு எல்லா வகையிலும் பொல்லாப்புகளை விலக்கி பூரிப்பையும் யோகத்தையும் தரும். புத்திர பாக்கியம், திருமண யோகம் ஆகிய நற்பலன்களையும் செய்வார். கும்பகோணம் அருகில் திருநாகேஸ்வரம் சென்று வழிபடவும்.
புனர்பூச நட்சத்திரக்காரர்களுக்கு:
இந்த ராகு- கேது பெயர்ச்சி முற்பகுதியில் சுமாரான பலன்களையும் பிற்பகுதியில் யோகமான பலன்களையும் செய்யும். புனர்பூசம் குருவின் நட்சத்திரம். குரு மிதுன ராசிக்கு 12-ல் மறைகிறார். ராகுவுக்கு 8-ல் மறைகிறார். கேதுவுக்கு 2-ல் இருக்கிறார். எனவே எதிர்பாராத தனப்ராப்தியும் ஏற்படும். எதிர்பாராத செலவுகளும் உண்டாகும். காரைக்குடி திருப்பத்தூர் அருகில் பட்டமங்கலம் சென்று அட்டமாசித்தி தட்சிணாமூர்த்தியை வழிபட வேண்டும்.

No comments:
Post a Comment