தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் முடிய)

ராசி அன்பர்களே!
இதுவரை உங்கள் ராசிக்கு 12-ல் இருந்த ராகு இப்போது 11-ஆம் இடத்துக்கும்; 6-ல் இருந்த கேது இப்போது 5-ஆம் இடத்துக்கும் மாறுகிறார்கள்.
கடந்த காலத்தில் 6-ல் இருந்த கேது உங்களுக்கு நல்ல பலன்களைத் தந்தார் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். 10 என்பது தொழில், வாழ்க்கை ஸ்தானம். அதற்கு பாக்கிய ஸ்தானம். 9-ஆம் இடம்தான் ராசிக்கு 6-ஆம் இடம். அதிலிருந்த கேது தொழில்மாற்றம், இடமாற்றம், ஊர் மாற்றங்களை ஏற்படுத்தியது எனலாம். குறிப்பாக கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெற்றோரின் கட்டாயத்தினால் வெளிநாட்டில் செய்த நல்ல வேலையையும் நல்ல சம்பளத்தையும் விட்டுவிட்டு தாய்நாடு வந்தார்கள். இங்கு திருப்தியான வேலை அமையாமல், பல இடங்களில் முயற்சி செய்து மனதுக்குப் பிடிக்காமல், கடைசியில் ஒரு வேலையில் உட்கார வைத்தது. அதுவும் முழு நிறைவு என்று சொல்லமுடியாது. சர்க்கரை இல்லாத ஊரில் இலுப்பைப்பூ சர்க்கரை என்ற மாதிரி பரவாயில்லை.
12-ஆம் இடத்து ராகுவும் ஊர்மாற்றம், இடமாற்றம் ஏற்படச் செய்தது! வெளிநாட்டில் 50 ஆயிரம் சம்பளம் வாங்கியவரை 5000 சம்பளத்துக்கு வேலைக்கு சேரச்சொல்லி அழைத்தார்கள். போங்கடா போங்க என்று மூஞ்சியில் எச்சில் துப்பாமல் வரச்செய்தது. சிலரை ஐந்தாறு மாதம் பொழுது போகாமல் "போர்' அடிக்க வைத்தது. கடைசியில் "அய்யோ பாவம்' என்று அனுதாபம் காட்டி, சம்பளம் குறைவு என்றாலும் மதிப்புள்ள வேலையில் உட்காரவைத்தது.
இந்த ராகு- கேது பெயர்ச்சிக்குப் பிறகு மேற்கண்ட இருதரப்பின ருக்கும் முன்னேற்றகரமான திருப்பங்களைக் கொடுக்கும். தொழில்துறையில், வேலையில் உத்தியோகத்தில் மனநிறைவும் மகிழ்ச்சியும் உருவாகிவிடும்.
ஒரு சிலருடைய அனுபவத்தில் 12-ஆம் இடத்து ராகு தொட்டதெல்லாம் துயரம்- விட்டதெல்லாம் விரயம் என்ற ரீதியாக, எல்லாவற்றிலும் விரயம், செலவு, ஏமாற்றம், வீண் அலைச்சலாக இருந்தது. "சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம்' என்று வீண் விரயமும் வெட்டிச் செலவும் ஏராளம். சொந்தம், சுற்றம் என்றும் நண்பர், நட்பு என்றும் கைமாற்றுக் கடன் வாங்கிப் போனவர்கள் எல்லாம் குறிப்பிட்டபடி திருப்பித் தராத வகையிலும் விரயம், ஏமாற்றம்! அதுமட்டுமல்ல; முதலாளிகளை நம்பி சம்பளத்தை மொத்தமாகச் சேர்த்துவைத்து வாங்க ஆசைப்பட்ட சிலர், மாடாய் உழைத்து விட்டு கடைசியில் முதலாளி நஷ்டப்பட்டு கடனாளியாகி கடையை மூடிவிட்டு ஓடிப்போன வகையிலும் நஷ்டம்! மாதமாதம் வாங்கியிருந்தால் பாக்கி இல்லாமல் உழைத்த கூலி வந்து சேர்ந்திருக்கும். மொத்தமாக சேர்த்து வாங்கி ஏதாவது இடம் பொருளில் போடலாம் என்ற ஆசையிலும் மோசம் வந்துவிட்டது. இன்னும் சிலர் பிள்ளைகளை நல்ல கல்லூரி களில் படிக்கவைத்து ஆளாக்கிவிட்டால் பிற்காலத்தில் நமக்கு உதவு வார்கள் என்ற நம்பிக்கையால், தொழில்துறையில் உருட்டு புரட்டு பண்ணி செலவழித்துவிட்டு கடன்காரர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்தவர்களும் உண்டு.
மகள் கல்யாணம்- அடுத்து மகன் கல்யாணம் என்று கையில் புரண்ட அடுத்தவர் காசை வைத்து செலவழித்துவிட்டு, மொய் பணத்தில் எல்லோர் பாக்கியையும் திருப்பிக்கொடுத்துவிடலாம் என்று திட்டமிட்டவர்கள் சிலர்! எதிர்பார்த்தபடி மொய்வராமல் வந்த பணத்தை உப்பு, புளி, பலசரக்கு, கல்யாண மண்டபத்துக்கே கொடுத்துவிட்டு, ஆசாரியிடம் நகை பணத்துக்கு சமாதானம் சொல்லும்படி ஆகிவிட்டது. கைநிறைய சம்பாதிக்கும் இளையபிள்ளைகளும் சொன்னபடி உதவாமல் உங்களைக் கிறங்க வைத்து விட்டார்கள். வேறு சிலர் அரசு வேலைக்கு ஆசைப்பட்டு, கடன் உடன்பட்டு லட்சக்கணக்கில் அரசியல்வாதிகளிடம் லஞ்சம் கொடுத்து நாளும் பொழுதும் வேகமாக ஓடிவிட்டது. இந்த மாதம் முடிந்துவிடும்- அடுத்தமாதம் முடிந்துவிடும்- இன்னும் கொஞ்சநாள்தான்' என்று சொல்லிச் சொல்லி, இதற்கிடையில் அரசும் மாறிவிட்டது; எதிர்கட்சி ஆட்சியும் அமைந்து விட்டது. வேலையும் இல்லை பணமும் இல்லை என்று ஆகிவிட்டது. அதேபோல இரண்டு லட்ச ரூபாய் செலவு செய்து ஒரு நண்பர் தன் பையனை அரபு நாட்டுக்கு வேலைக்கு அனுப்பிவைத்தார். அங்கு போனதிலிருந்து அவன் உடல்நிலை சரியில்லாமல், ஊர் ஒத்துக்கொள்ளவில்லை; வெயில் தாங்கமுடியவில்லை என்று பத்து நாட்களில் திரும்பி வந்துவிட்டான். மீண்டும் வெளிநாடு போகமாட்டேன் என்று கூறிவிட்டான். ஏற்கெனவே கடன் கவலையோடு இந்த இரண்டு லட்சம் ரூபாயும் சேர்ந்துகொண்டது. இப்படி 12-ஆம் இடத்து ராகு ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் பாடாய்ப் படுத்திவிட்டது!
இப்போது ராகு வந்துள்ள 11-ஆம் இடம் மிகமிக நல்ல இடம். அதை விளக்கும் ஜோதிடப்பாடல்- "ராகு பன்னொன்று மூன்று ஆறாம் இடத்திற்சேறின் தேன் பாலும் பழமும் வற்றாத தனமும் உண்டாம்; ஆகும் காரியங்கள் உண்டாம்; வாகுமறு மணமுண்டாம்; வரத்துமேல் வரத்துண்டாம்' என்றபடி எல்லா சௌபாக்கியங்களும் உண்டாகும். அதிலும் ராகுதசையோ அல்லது ராகுபுக்தியோ நடந்தால் நிச்சயமாக மேற்படி யோகம் நடக்கும் என்பது உறுதி.
6-ல் இருந்த கேது 5-ஆம் இடத்துக்கு மாறியிருப்பதும் கெடுதியில்லை. 5-என்பதும் பூர்வபுண்ய ஸ்தானம்; 9-ஆம் இடமும் பூர்வ புண்யஸ்தானம். அதாவது 5-க்கு 5ஆம் இடம் 9-ஆம் இடம். அங்கு ஞானகாரகன் வந்திருப்பதால், முன்ஜென்மத்தில் செய்த பாவதோஷம் எல்லாம் விலகி உங்களைப் புனிதப் படுத்தும். சாபவிமோசனமும் உண்டாகும். முன்னோர்கள், தாத்தா, பாட்டனார் வகை சொத்துகளில் இருக்கும் பிரச்சினைகளும் தீர்வாகும். பிதுரார்ஜித சொத்துகள் ஏதுமில்லை யென்றால், அதற்குச் சமமான அளவு சுயமுயற்சியால் தேடிச் சேர்க்கலாம். ஆன்மிகம், ஜோதிடம், வைத்தியம், தெய்வீகம் போன்றவற்றில் ஈடுபாடும் பெருமையும் உண்டாகும். சிலர் அருள் நிலைபெற்று அருள்வாக்குச் சொல்லலாம்.
செல்வாக்குள்ள பிரமுகர்களின் தொடர்பு கிடைக்கும்; பாராட்டும் கிடைக்கும். வீடுகட்டுவது, ஆசிரமம் அமைப்பது, அறச்சாலை நிறுவுதல், டிரஸ்ட் ஏற்படுத்துவது, ஆலயத் திருப்பணி செய்வது, குல தெய்வத்துக்கு கோவில் எழுப்புவது போன்ற புண்ணிய காரியங்களில் இறங்கி பெருமை சேர்க்கலாம். உங்களின் நீண்டகாலக் கனவுகளும் திட்டங்களும் லட்சியங்களும் நிறைவேறும்.
ருதுவாகி பதினெட்டு ஆண்டுகள் ஆகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கும், 36 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாத ஆண்களுக்கும் இந்த ராகு-கேதுப்பெயர்ச்சி திருமணத் தடைகளையும் தோஷங்களையும் போக்கி மணைவாழ்க்கையைத் தரும். அதேபோல் 18 வயதாகியும் ருதுவாகாத பெண்களுக்கும் இந்த ராகு- கேது பெயர்ச்சி பெரிய மனுஷியாகும் யோகத்தைச் செய்துவிடும். இவற்றுக்காக சிறப்பு பரிகாரம் எதுவும் தேவையில்லை. ஏலச்சீட்டு, மாதக் குலுக்கலில் எடுக்காமலேயே இருந்துவிட்டால்- கடைசி சீட்டு வட்டியும் முதலுமாக கட்டிய பணத்தைவிட அதிகமாகவே கிடைப்பதுபோல ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு மண வாழ்வை மகிழ்ச்சி வாழ்க்கையாக மலரச் செய்யும் அதுமட்டுமல்ல; திருமணமாகி 18 ஆண்டுகளாக புத்திரபாக்கியம் இல்லாமல் ஏங்கிக்கொண்டிருந்தவர்களுக்கும் இந்த ராகு-கேது பெயர்ச்சி வாரிசு யோகத்தை வழங்கும். அதாவது மேஷம்- ராசி மண்டலத்தில் முதலாவது ராசி. அதில் கேது 18 ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறார். ராகு- கேது 12 ராசிகளை ஒருமுறை சுற்றி வருவதற்கு 18 வருடங்கள் பிடிக்கும். அதே மாதிரி சனி ஒரு சுற்று சுற்றி வருவதற்கு 30 வருடம் ஆகும். குரு ராசிமண்டலத்தை சுற்றி வருவதற்கு 12 வருடம் ஆகும். இப்படி 12 வருடம், 18 வருடம், 30 வருடம் என்று மனித வாழ்க்கையில் சில மாற்றங்களையும் திருப்பங்களையும் ஏற்படுத்தும். அதே மாதிரி மேஷத்தில் ராகு வரும்போதும் அதிலிருந்து 18 வருடம் கணக்கிடலாம்.
ராகு 11-ல் (துலா ராசியில்) நின்று 3-ஆம் பார்வையாக சிம்ம ராசியை தனுசு ராசிக்கு 9-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக தனுசு ராசிக்கு 5-ஆம் இடம் மேஷ ராசியையும்; 11-ஆம் பார்வையாக தனுசு ராசியையும் பார்க்கிறார்.
கேது 5-ல் (மேஷராசியில்) நின்று 3-ஆம் பார்வையாக தனுசு ராசிக்கு 3-ஆம் இடத்தையும்; 7-ஆம் பார்வையாக தனுசு ராசிக்கு 11-ஆம் இடத்தை துலாராசியையும், 11-ஆம் பார்வையாக தனுசு ராசிக்கு 7-ஆம் இடத்தை மிதுனத்தையும் பார்க்கிறார்.
இதன் பலனாக சகோதர சகாயம், நண்பர்களின் உதவி, நட்பின் பெருமை, அருமை எல்லாம் இனிமையாக இருக்கும். ஏற்கெனவே உடன் பிறப்புக்கள் வகையில் பிரச்சினைகளும் கசமுசாக்களும்; ஒட்டுதல் உறவு இல்லாமல் வீதியில் பார்த்தால்கூட யாரோ போகிறார்கள் என்று பார்த்தும் பார்க்காமலே போனவர்களும், இந்த ராகு-கேது பெயர்ச்சிக்குப் பிறகு சகோதர பாசத்தோடும் அன்போடும் இணைந்து ஒருவருக்கொருவர் உறவோடு உபசரித்து உதவிகள் புரியலாம். அதற்கு ஏற்ற மாதிரி குடும்பத்தில் ஏதாவது ஒரு சுபமங்கள நிகழ்ச்சி நடக்கும். அதைவைத்து பிரிந்தவர்கள் இணைவார்கள்.
திருமணத்தடை விலகும். நல்ல வாழ்க்கைத் துணை அமையும். வாரிசு யோகமும் உண்டாகும். சிலர் மனைவிபேரிலும் அல்லது மனைவி வகை உறவினர்களோடும் சேர்ந்து கூட்டுத்தொழில் ஆரம்பிக்கலாம். ராகு- கேது பெயர்ச்சிக்கு முன்னதாக இப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கியவர்கள், "அவசரப்பட்டு தொழில்துறையில் முதலீடு செய்துவிட்டோமோ-அது சரி வருமா- தொடர்ந்து நடத்தலாமா அல்லது சட்டி சுட்டதடா கைவிட்டதடா என்று இதோடு தப்பித்துக்கொள்ளலாமா' என்றெல்லாம் குழப்பமடைவார்கள். அந்தக் குழப்பத்தையெல்லாம் இந்த ராகு-கேது பெயர்ச்சி தீர்த்து வைத்து இனிமேல் நம்பிக்கையும் தைரியமும் உருவாக்கும். தொடர்ந்து தொழிலை நடத்த ஆர்வம் உண்டாகும். அதே வேகத்தோடும் விறுவிறுப்பாகவும் செயல்பட்டு இனிமேல் நிறைய சம்பாதிக்கலாம். அதைக்கொண்டு பழைய கடன்களையெல்லாம் 2014 -டிசம்பருக்குள் சனி உச்சமாக 11-ல் இருக்கும் காலத்திற்குள் அதிகபட்சமாக அடைத்து விடலாம். 11-ஆம் இடம் லாபஸ்தானம், வெற்றி ஸ்தானம். வழக்கு, வில்லங்கம் விவகாரத்தில் உள்ளவர்களுக்கும் இந்தப் பெயர்ச்சிக்கு வெற்றியும் அனுகூலமான தீர்ப்பும் எதிர்பார்க்கலாம். ஜாதக தசாபுக்தி யோகமாக இருந்தால் சமரசமாகவும் சமாதானமாகவும் உடன்பாடு ஏற்பட்டு செட்டில் ஆகிவிடலாம்.
தனுசு ராசிநாதன் குரு 2013- மே மாதம் வரை ராசிக்கு 6-ல் இருப்பார். அதுவரை கடன் ஆதிக்கத்தில் இருந்து விடுபட வழியில்லை. என்றாலும் உங்களுடைய கௌரவம், மதிப்பு, மரியாதைக்கு எந்தவிதமான குந்தகமும் வராது. குரு 7-ல் மாறி ராசியையும் பார்ப்பார். ராகுவையும் சனியையும் பார்ப்பார். அப்போது அசலும் குறையும்; வட்டியும் அடைபடும்.
10-ஆம் இடத்தில் சனியும் செவ்வாயும் இருந்த சமயம் சிலருக்கு உத்தியோகத்தில் மேலதிகாரிகள் வகையில் திருப்தியில்லாத பல அனுபவங்கள் ஏற்பட்டு டென்ஷன் இருந்தது. செவ்வாயும் சனியும் விலகி விட்டார்கள். இப்போது ராகு- கேது பெயர்ச்சியும் ஆகிவிட்டது. ஆகவே வேலையில் இருந்த சஞ்சலம், சங்கடம் எல்லாம் இனி இருக்காது. மேலதிகாரிகளிடம் நற்பெயர் உண்டாகிவிடும். சரபேஸ்வரர் மந்திரத்தை தினசரி ஜபம் செய்தால் உங்களைப் பிடிக்காத மேலதிகாரிகளின் அன்பைப் பெறலாம். அல்லது உங்கள் பாதையில் குறுக்கிடாமல் அவர்கள் மாறிவிடலாம்.
சரபர் மந்திரம்
"ஓம் கேம் காம் கம் பட்
ப்ராண க்ரஹாஸி ஹும் பட் ஸர்வ சத்ரு
ஸம்ஹரணாய ஸரப சாலுவாய
பக்ஷிராஜாய ஹும் பட் நமஹா:

சரபர் காயத்ரி
"ஓம் ஸ்ரீ சாலுவேசாய
வித்மஹ பக்ஷிராஜாய தீமஹி
தந்நோ சரப ப்ரசோதயாத்.'
5, 9-ஆம் இடங்களுக்கு ராகு-கேது சம்பந்தம் இருப்பதால் பிள்ளைகளின் திருமணம், சடங்கு, காதணிவிழா போன்ற சுபகாரியங்களை முன்னிட்டு இதுவரை நிலவிய பங்காளிப் பகை, மைத்துனர் வருத்தம், சம்பந்திகள் சண்டை எல்லாம் விலகிவிடும். ஒன்று சேரும் அமைப்பும் உருவாகிவிடும். உங்கள் தரப்பிலும் எதிர் தரப்பிலும் ஈகோ உணர்வு பெரிதாக இருந்தாலும், "மறப்போம் மன்னிப்போம்' என்று பெருந்தன்மையோடு நடந்துகொண்டால் எல்லாம் நல்லபடி நடந்துவிடும். "குற்றம் பார்க்கின் சுற்றமில்லை' என்ற கருத்துப்படி நடக்கலாம். பங்காளிச் சண்டையால் பல வருடங்களாக பூட்டிக் கிடந்த குலதெய்வக் கோவிலும் திறக்கப்பட்டு, பூஜை விழாக்களை நடத்தலாம். பிரார்த்தனைகளையும் நிறைவேற்றலாம்.
மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு யோகமான பெயர்ச்சியாகவும், லாபகரமான பெயர்ச்சியாகவும் அமையும்.
மூல நட்சத்திரக்காரர்களுக்கு:
மூல நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரம். கேது ராசிக்கு 5-ல் இருந்து நல்ல இடங்களைப் பார்ப்பதால், உங்கள் கனவுத் திட்டங்கள் யாவும் நனவாகும். கலகலப்பான நல்ல சேதிகளைக் கேள்விப்படுவீர்கள். சுபகாரியப் பேச்சுக்கள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வாழ்க்கையில் நிலவிய தொய்வுகள் எல்லாம் நீங்கிவிடும். புத்துணர்ச்சியோடு செயல்படலாம். பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகரை வழிபடவேண்டும். மயிலாடுதுறை அருகில் சித்தமல்லியில் கல்யாண விநாயகர் கோவில் இருக்கிறது. அருகில் சுப்ரமணிய சாஸ்திரி ஜீவ சமாதியும் உண்டு. அங்கும்போய் வழிபடலாம்.
பூராட நட்சத்திரக்காரர்களுக்கு:
பூராடம் சுக்கிரனின் நட்சத்திரம். சுக்கிரனின் வீடான துலா ராசியில்தான் ராகுவும் சனியும் இருக்கிறார்கள். சுக்கிரன் வீடான ரிஷப ராசியில்தான் குரு இருக்கிறார். எனவே, உங்களுக்கு ராகு- கேது பெயர்ச்சி அற்புதப் பலன்களைத் தரும். குரு ரிஷபத்தில் இருக்கும் வரை சில காரியங்களில் தாமதம், சுணக்கம் ஏற்படலாம். என்றாலும் தோல்வியில்லை. அதாவது வெயிட்டிங் லிஸ்டில் இருப்பதற்குச் சமம். குரு மாறியதும் கன்பர்மேஷன் ஆகிவிடும். குருபார்வை ராசி, ராகு, சனி மூன்றுக்கும கிடைக்கும் என்பது அணுகூலம் ஆகும்! கும்பகோணம் ஆடுதுறை அருகில் கஞ்சனூரும், ராஜபாளையம் வாசுதேவநல்லூர் அருகில் தாருகாபுரமும் சுக்கிரனுடைய ஸ்தலம் ஆகும். இங்கு சென்று வழிபடலாம். தொண்டி செல்லும் சாலையில் திருவாடானை அருகில் திருவொற்றியூர் என்ற தலத்தில் பாகம்பிரியாள், வன்மீகநாத சுவாமி கோவில் உண்டு. நாகதோஷ நிவர்த்தி ஸ்தலம். புற்றுநோய்க்கும் பரிகாரஸ்தலம் ஆகும். அங்கு சென்றும் வழிபடலாம்.
உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:
உத்திராடம் சூரியன் நட்சத்திரம், தனுசு ராசிக்கு சூரியன் பாக்கியாதிபதி. அவர் வீட்டை ராகு பார்க்கிறார். சூரியனின் உச்ச ராசியான மேஷத்தில் கேது இருக்கிறார். எனவே ராகு- கேது பெயர்ச்சி உங்களுக்கு அனுகூலமாகவும் நன்மையாகவும் அமையும். உங்களைக் கொண்டு உங்களைச் சார்ந்தவர்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வார்கள். உறவினர்கள் வகையிலும் சம்பந்தக்காரர்கள் வகையிலும் உங்களுக்கு முக்கியத்துவம் உண்டாகும். சென்னை செங் குன்றம் அருகில் ஞாயிறு கோவில் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை கருப்பு உளுந்தில் வடை தயாரித்து நரசிம்மமூர்த்திக்குப் படையில் செய்து வழிபட்டால் நாகதோஷம் விலகுவதாக ஐதீகம்.
No comments:
Post a Comment