Showing posts with label கர்மவினை. Show all posts
Showing posts with label கர்மவினை. Show all posts

Friday, October 4, 2019

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச இராசிகளென வகை படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்களை எந்த வகையில் யாருக்கு செய்தோம் அதன் விளைவாக இப்பிறப்பில் நாம் என்னென்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்கிறோம் என்பதை எல்லாம் இந்த கால புருஷ தத்துவ இராசிகளை கொண்டு நாம் கணித்து அறிய முடியும். இதில் இராசி நிலைகள் குறிக்கும் தத்துவ நிலைகளை இணைபில் வரும் படம் விளக்கும்.
தர்ம இராசிகள்: #மேஷம்#சிம்மம்#தனுசு.
தர்மத்தில் நல்லது கெட்டது என இரண்டு வகையுண்டு. உதாரணத்திற்கு கோவில் திருவிழாவில் அன்ன தானமிடுவதையும், ஆபாச நடன கச்சேரி வைப்பததையும் சொல்லாம், நாம் செய்யும் தர்மம் பிறரை வாழ வைக்கவும் நல்வழிப்படுத்தவும் அமையுமானல் அது நல்ல தர்மமாகும். அதுவே நம் தர்மம் பிறரை கெடுத்தால் அது பாவக் கணக்காகவே நம்மிடம் சேர்ந்துக் கொள்ளும்.
கர்ம இராசிகள்: #ரிஷபம்#கன்னி#மகரம்.
கர்மம் என்பது தொழிலை குறிக்கும். பிறருக்கு தீங்கு நேரா வண்ணமும் நன்மை தரும்படியும் நம் தொழில் அமைந்தால் அதன் பலனாக யோகத்தையும், நற்பலன்களையும், நல்ல சந்தோஷமான வாழ்வும் அமையும். இதே நியாய தர்மங்களை புறந்தள்ளி விட்டு நாம் செய்யும் தொழிலின் வாயிலாக பிறருக்கு தீமை செய்தால் அதன் விளைவாக கெடுபலன்களையும், கொடிய தோஷங்களையும் பெற்று துன்பகரமான வாழ்வு அமையும்.
காம இராசிகள்: #மிதுனம்#துலாம்#கும்பம்.
இங்கு காமம் என்பது ஆசையை குறிப்பதாகும். ஆசைகளிலே நல்லதுமுண்டு, தீயதுமுண்டு. நல்வழியில் பொருளீட்டி செல்வந்தனாகி குடும்பத்தை காப்பற்ற வேண்டுமென்பது நல்ல வகைப்பட்ட காமம். பிறன் மனையாளை தீண்டியே தீர வேண்டுமென்ற ஆசை கெட்ட காமமாகிறது. இதன் படியே நம் வாழ்வின் அனைத்து பலாபலன்களும் உருவாகின்றன.
மோட்ச இராசிகள்: #கடகம்#விருச்சிகம்#மீனம்.
நம் மூதாதையர்களை அவர்கள் வாழும் காலத்தில் நல்லவிதமாக வாழவைத்து அவர்கள் இறந்தால் உரிய சடங்குகள் செய்து வருடந்தோறும் திதி தர்ப்பணம் முதலியவற்றை செய்து வாழ்வது நல்மோட்சமாகும். இதுவே பெரியோர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களை உதாசீனப்படுத்துவதும், உணவளிக்காமலிருப்பதும், மருத்துவம் பார்க்கமல் நோயால் தவிக்க விடுவதும், இறுதி சடங்குகள் செய்யாததும், திதி தர்ப்பணம் தராததும் நம் முன்னோர்களை மோட்சமடையாமல் தடுக்கும். இதுவே நம் வாழ்வில் துன்பங்கள் தோன்றி நம்மை வாட்ட ஏதுவான துர்மோட்சமாகும்.
மேற்கண்ட இராசிகளில் உள்ள கிரகங்களின் தன்மையை பொறுத்து நாம் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின் சாரத்தை அறிந்து கொள்ளலாம். இந்த கட்டங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து தோஷங்களை தருமானால் அது நம் முற்பிறவியில் நாம் செய்த பாவம் என்று அறிக. தகுந்த பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

"எழாமல் வாசனையை கொன்றோன் ஞானி
ஏகாமல் வாசனையை அடித்தோனே சித்தன்"
-சட்டை முனி நாதர்
இங்கு வாசனை என்பது கர்மவினை, இதன் இயல்பாவது பிறவிதோறும் தொடர்ந்து வருவது. #ஞானியானவன் இப்பிறவியில் இக்கர்மவினை #ஆன்மாவை பற்றா வண்ணம் தடுத்துக்கொள்பவன். ஆனால் சித்தனானவன் எப்பிறப்பிலும் தன்னை #கர்மவினை அனுகாத வண்ணம் விரட்டியடிப்பவன் ஆவான்.
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும் நம்மில். #பாபா#சாய்பாபா#ரமணமகரிஷி#வேதத்திரிமகரிஷி#யோகிராம்சுரத்குமார்#பகவான்ரஜனீஷ் (#ஓஷோ), #சுவாமிவிவேகானந்தர் ஆகிய அனைவருமே ஞானிகள் என கொண்டாடப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் இப்பிறப்பில் தங்களுடைய கர்மாவின் சூட்சுமத்தை அறிந்து கர்மவினையானது தன்னை பற்றிக் கொள்ளா வண்ணம் தடுத்துக் கொண்டவர்கள். இதை போல நம் சித்தர்கள் கர்மவினை எக்காலத்திலும் எப்பிறப்பிலும் தன்னை பற்றிக்கொள்ள முடியாதபடி விரட்டியவர்கள்.
கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல கர்மாவை இயக்கும் தெய்வம் உண்டு, அதை பற்றிக் கொண்டோமானால் கர்மாவில் இருந்து விடுபடலாம், இங்கு ஓர் மிகப்பெரும் உண்மையினை சுட்டிக்காட்டினால் உங்களுக்கு புரியும். கோவில்கள் நிறைந்த கேரளாவில் பிறந்த #ஆதிசங்கரர் எதற்காக தமிழகத்தில் #காஞ்சிபுரம் வந்து காமட்சியை பற்றினார், சிவ #ஸ்தலங்கள் நிறைந்த திருச்சுழியில் பிறந்த #ரமணமகரிஷி எதற்காக #திருவண்ணாமலை ஈசனை பற்றினார், #விவேகானந்தரின் குரு #இராமகிருஷ்ணர் எதற்காக #பத்ரகாளியை பற்றினார். இவர்கள் எல்லாம் யாரை நாம் பற்றிக்கொண்டால் நம் கர்மாவை கட்ட முடியும் என்று உணர்ந்த மகா ஞானிகள். பிறவிப்பயனை அடைந்து விடவும் இன்னல்களை தீரவும் தொழ வேண்டிய தெய்வ இரகசியத்தை தெரிந்து கொண்டவர்கள். ஆனால் இவர்கள் அறிந்து கையாண்ட உண்மையை இவர்களின் வழிவந்த சீடர்களுக்கோ பக்தர்களுக்கோ சொல்லித்தரவில்லை. தற்போதுள்ள ஞானிகளும் இந்த உண்மையினை உணர்ந்து தான் தங்களின் கர்ம #அதிதெய்வம் உள்ள இடங்களில் பீடம் அமைத்து பூஜித்து வாழ்வில் வளமடைகின்றனர். பக்தர்கள் மேலும் மேலும் அங்கு சென்று பூஜைகள் யாகங்கள் செய்வதால் சக்தி பலமடங்கு பெருகி அவ்விடம் சிறக்கிறது. அவர்களும் உயர்கிறார்கள். ஆனால் அங்கு வழிபட்ட உங்கள் கர்மா மறியதா.?

கர்ம தெய்வத்தினை பற்றி இன்னும் புரியும்படி சொன்னால், நம் நண்பர்களின் அன்னையரை நாம் அன்னையாகவே பாவிப்போம், வயது முதிர்ந்த பெண்களை அம்மா என்றே அழைப்போம். நண்பனின் இல்லம் சென்றால் ஒருவேளை உணவும் தேனீரும் நிச்சயம் கிடைக்கும், விஷேச நாட்கள் எனில் இரண்டொரு நாட்கள் கூட கிடைக்கும். ஆனால் தினந்தோறும் நண்பனது அம்மாவிடம் உணவு கிடைத்து விடுமா?. நீயும் எனக்கொரு பிள்ளை மாதிரி என்றுகூட சொல்லி இருப்பார்கள், ஆயினும் நிரந்தரமில்லை. ஏதேது விட்டால் ஆஸ்தியில் பங்கு கேட்பான் போல என்று துரத்தப்படுவோம். மாறாக நம்மை பெற்ற அன்னையிடம் அதை நாம் எதிர்பார்க்கலாம், தன் குருதியை பாலாக்கி தந்தவள் அல்லவா அவளது அனைத்துமே நாம் தானே. அது போலவே நாம் வழிபடும் தெய்வங்களும் அந்த நாளைக்கோ அந்த வேளைக்கோ பலன் தரலாம் ஆயுள் முழுவதும் நிரந்தர பலன் தர இயலாது, அந்த நற்பலன்களை தருவது இப்பிறவியில் உங்களது கர்மாவினை இயக்கி ஆளும், மேலும் ஈன்ற அன்னையை போல உங்களை படைத்து வழி நடத்தக்கூடிய கர்ம அதிதெய்வம் மட்டுமே.
நண்பர்களே, கர்மாவை பற்றியும் கர்மவினையின் இயக்கங்களை பற்றியும் ஜோதிட ரீதியில் கர்மவினைகளை எவ்வாறு கண்டுணர முடியும் என்பதெல்லாம் விரிவாக பார்த்தோம். இருப்பினும்
"குரு தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது"
மற்றும்
"குருவருள் இன்றி திருவருள் வாய்க்காது"
என்பதனை உணர்ந்து குருவின் ஆலோசனை பெற்று கர்ம வினை பரிகார நிவர்த்தி செய்து கொள்வது நலம். இதைபற்றி மேலும் அறியவும் தகுந்த இலவச ஆலோசனைகளை பெறவும் தொடர்பு கொள்ளவும்
பாலசுப்ரமணியன்
9176256190
கர்மவினை பலன்களை கொடுக்கும் பணியை #நவகிரகங்கள் செய்கின்றன, நவ கிரங்களையும் இயக்கும் #அதிதெய்வங்கள் உண்டு, நவ கிரகங்களை வழிபடுவதால் எந்த பலனையும் நவ கிரகங்கள் தாமாக மாற்றிவிட இயலாது, நவ கிரகங்களை இயக்கும் அதிதெய்வங்கள் மட்டுமே உங்கள் கர்ம பலனை மற்ற இயலும். இங்கு ஒரு உண்மையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எந்த சித்தர்களும், ஞானிகளும் வந்து நவ கிரகங்களை வழிபடவில்லை என்பது உண்மைதானே.

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..1

#கடவுளும் பிரபஞ்சமும் கர்மவினையும் :
இங்கு நாம் அனைவரும் முதலில் கடவுள் தன்மையையும் பிரபஞ்ச இயக்கத்தையும், #கிரகங்களின் #சஞ்சாரத்தையும் முழுமையாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. இந்த பூவுலகத்தில் எத்தனை கோடி பிறப்புகள் உயிர்வாழ்கின்றன, அத்துனை கோடி ஜீவராசிகளுக்கும் இந்தந்த விநாடியில் இந்த பலன் தான் நிகழ வேண்டுமென்று படைத்த #பிரம்மாவோ காக்கும் #விஷ்ணுவோ உட்கார்ந்து தீர்மானித்துக் கொண்டிருக்க இயலுமா.?
இயலாது என்பதே உணமை. சரி அப்படியென்றால் நமக்கு உண்டாகும் இன்பமோ துன்பமோ எப்படி நம்மை வந்தடைகிறது. ஒன்று புரிந்து கொள்ளவும், நம் முன்னோர்களும், #சித்தர் பெருமக்களும் மற்றும் #ஞானிகளும் முட்டள்தனமாக எந்த விஷயத்தையும் சொல்லிச் செல்லவில்லை, நாம் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.


"நன்மையும் தீமையும் பிறர்தர வாரா"
உங்களுக்கு உண்டாகும் #நல்ல பலன்களும், தீய பலன்களும் பிறரால் உங்களுக்கு வந்ததல்ல, இவை அனைத்துமே நீங்கள் உண்டாக்கியது தான். புரியும்படி சொன்னால் கடந்த #பிறவிகளில் நீங்கள் செய்த #பாவ #புண்ணியங்களின் வித்தே இப்பிறவியில் கர்மவினை என்ற பெயரில் வினைப்பயன் எனும் #விருட்சமாக வளர்ந்து உங்களை வந்தடைகிறது.

இன்னும் சற்றே விளக்கமாக பார்தோமேயானால், கடந்த பிறவிகளில் செய்த #தொழிலில் நீங்கள் செய்த பாவம் அல்லது #புண்ணியம் இருக்குமானால் இப்பிறவியில் தொழிலின் வாயிலாக அந்த பலனை திரும்ப பெறுவீர்கள். அதாவது முற்பிறவியில் #தொழில் வஞ்சம் புரிந்திருந்தால் இப்பிறவியில் தொழில் அமையாமை, தொழிலில் விருப்பமில்லாமை, #தொழிலில் #நஷ்டம், #கடன், பழி மற்றும் அவமானங்களை சந்தித்தல் போன்ற அவதிகளை அடைய நேரிடும். இதே முற்பிறவியில் நல்முறையில் தொழில் செய்திருந்தால் இப்பிறவியில் தொழில் இடையூறு இல்லாமல் வாழலாம். கடந்த பிறவியில் தம்பதியருக்குள் பாவம் செய்திருந்தால் இப்பிறவியில் அவர்கள் மூலமே துன்ப துயரங்கள் மிகுந்திருக்கும். இவ்வாறே உடலில் உண்டாகும் தீராத வியாதிகளும் கூட கர்ம வினையினால் உண்டான தொந்தரவே! இதன்மூலம் நம்முடைய #சுகதுக்கங்கள் தீர்மானிக்கப்படுவது கடந்த பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களினால் எழுந்த கர்மவினையே என்பது உறுதியாகிறது.
நாளைய தலைப்பு...#கர்மாவும் #பிரபஞ்சமும் ஜோதிடமும்
மீண்டும் …நாளை ….தொடர்வோமா?
என்றும் அவன் அடிமை
பாலசுப்ரமணியன்
9176256190

கர்மவினையை வெல்ல


#கர்மவினை :
நம் அனைவரின் மனதிலும் அடிக்கடி தோன்றும் ஆயிரமாயிரம் #அர்த்தமுள்ள மற்றும் அர்த்தமில்லா கேள்விகள் ???
நான் தினமும் கடவுளை வழிபடாமல் இருந்தது இல்லை....
நான் தெய்வீக #யாத்திரை சென்று புனித ஸ்தலங்களையும், #புனித மலைகளையும் தொடர்ந்து தரிசித்து வருகிறேன்....
என்னால் இயன்ற அளவு #தான #தருமங்கள் செய்துவருகிறேன்....
நான் குறிப்பிட்ட #சித்தரையோ #ஞானியையோ குருமார்களையோ #குருவாக ஏற்று வழிபட்டு வருகிறேன்....
#யோகா #தியானம் முதல் #வாசியோகம் வரை எல்லாம் முறையாக செய்து வருகிறேன்...
மந்திர உபதேஷங்களைப் பெற்று வருடக்கணக்காக #மந்திரங்கள் உச்சாடனம் செய்து வருகிறேன்

இத்தனை நான் செய்தும் இந்த கடவுளுக்கு என்மேல் கருணையே இல்லையா ?
என்னுடைய கண் முன்னே பல கொடியவர்கள் கூட நன்றாக வாழ்கிறார்களே...
இவ்வாறு இத்தனை நற்காரியங்களை #புண்ணியங்களை நான் செய்தும் என் வாழ்வில் பல இன்னல்களை தினம்தோறும் சந்தித்து வருகிறேன், 
உதாரணமாக சரியான உத்தியோகமோ இல்லை வியாபரமோ அமைவதில்லை,போதிய வருமானம் கிடைக்கவில்லை,சீராக குடும்பத்தை நடத்த முடியாமல் திண்டாடுகிறேன், தீராத வியாதிகளால் துன்பப்படுகிறேன், மருத்துவ செலவுகள் உண்டாகி வாட்டுகிறது. கடனாளியாகிறேன், குடும்பத்தில் தேவையற்ற சண்டை சச்சரவுகள் வந்து பிரிவினைகள் உண்டாகி பிரிந்து வாழும் சூழ்நிலை,
நானும் பல ஜோதிடர்களை அணுகி அவர்கள் சொல்லும் தோஷங்களுக்கு உரிய #பரிகாரங்களும் செய்தேன். #ஏழரைசனி#கண்டகசனி#அஷ்டமசனி#அர்த்தாஷ்டமசனி என்று விடாமல் #ஜோதிடர் சொன்ன அனைத்து விதமான பரிகார நிவர்த்தியும் செய்தாகிவிட்டது, ஆனாலும் இன்றுவரை ஒரு சிறு முன்னேற்றமும் நம்வாழ்வில் வரவில்லையே. துன்பங்களே போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனவே, என இப்படி நம் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் ஆயிரமாயிரம் கேள்விகளுக்கு விடைதான் என்ன ???
கடவுளும் #பிரபஞ்சமும் கர்மவினையும்
மீண்டும் …நாளை ….தொடர்வோமா?
என்றும் அவன் அடிமை
பாலசுப்ரமணியன்
9176256190

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...