மகரம்
(உத்திராடம் 2-ஆம் பாதம் முதல், திருவோணம், அவிட்டம் 2-ஆம் பாதம் முடிய)

மகர
ராசி அன்பர்களே!
இதுவரை மகர ராசிக்கு 11-ல் விருச்சிக ராசியில் இருந்த ராகு இப்போது 10-ஆம் இடத்துக்கும்; 5-ல் இருந்த கேது இப்போது 4-ஆம் இடம் மேஷத்துக்கும் மாறியிருக்கிறார்கள்.
ஏற்கனவே ராகு இருந்த இடம் சூப்பரோ சூப்பரான இடம். கேது இருந்த இடமும் திரிகோண ஸ்தானம், நல்ல இடம்தான். அதனால் உங்களுக்கு முன்னேற்றத்தையும் வெற்றியையும் லாபத்தையும் தந்திருக்கும். அடிப்படை வாழ்க்கை வசதிகளுக்கும் சௌகர்யங்களுக்கும் கேடு கெடுதியில்லாத யோகத்தையும் கொடுத்திருக்கும். பிள்ளைகளுக்கு நல்லது, வீடு, வாசல், வாகன யோகம், தொழில், சம்பாத்தியம் ஆகிய யோகங்களையும் செய்திருக்கும்.
அதேபோல 5-ஆம் இடத்துக் கேதுவும் கடந்த காலத்தில் மனமகிழ்ச்சியையும், மனத்திருப்தியையும், மனதில் நீண்டகாலமாக வகுத்த திட்டங்களை நிறைவேற்றியும் உங்களை சந்தோஷப் படுத்தி யிருப்பார். பொதுவாழ்வில் ஈடுபட்டவர்களுக்கும், அரசியலில் இருந்தவர்களுக்கும் ஓரளவு சத்துருக்களின் இடையூறுகள் விலகி- தொல்லைகள் நீங்கி எதிர்ப்பில்லாத சூழ்நிலையில் வெற்றிப்பயணம் போயிருக்கலாம்.
மேற்கண்ட யோக பலன்கள் எல்லாம் மகர ராசியில் பிறந்த சிலருக்கு நடந்தது உண்மைதான். ஆனால் பலருக்கு சனியும் குருவும் இருந்த நிலை அனுகூலமாக இல்லாததால், வசதி வாய்ப்புகள் இருந்தும்-அன்ன ஆடை தரித்திரம் இல்லாதிருந்தும்- மற்ற வகையில் மன அமைதியும் திருப்தியும் சந்தோஷமும் இல்லாத நிலையைச் சந்தித்தவர்களும் உண்டு. நல்ல படிப்பு இருந்தும் அதற்கேற்ற வேலையில்லாமலும், வேலையிருந்தும் வேலைக்கேற்ற சம்பளம் இல்லாமலும், வேலையும் சம்பளமும் இருந்தும் வேலையில் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்க முடியாதபடி கெடுபிடியும் டென்ஷனுமாக சில ஆதங்கத்தை அடைந்தவர்கள் உண்டு. வேறுசில ஆண்களுக்கு அல்லது பெண்களுக்கு பருவ வயதாகியும் திருமணம் கூடாமல் தள்ளிப் போனதால் உள்ளத்தில் வேதனை! வேறுசிலருக்கு பெற்றோர்களைப் புறக்கணித்துவிட்டு தங்கள் இஷ்டத்துக்கு வேற்று ஜாதியில் காதல் திருமணம்- கலப்புத்திருமணம் செய்துகொண்டு வெளியேறிய பிள்ளைகளால் குடும்ப கௌரவக்குறைவு-தலைக்குனிவு! சில பிள்ளைகள் வகையில், வயதுக்கு மீறிய பிள்ளைகளுக்கு காலாகாலத்தில் கல்யாணம் செய்துவைத்து கடமையை முடித்துவிட்டு கண்ணை மூடலாம் என்று வயதான பெற்றோர்கள் நினைக்க, கல்யாணமே வேண்டாம் என்று, கல்யாணப் பேச்சை எடுத்தாலே எரிந்துவிழும் பிள்ளைகளின் நிலையினால் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவிப்பு! வயது நாற்பதைக் கடந்தும் "தனக்கு திருமணம் வேண்டாம்; தம்பிக்கு பெண் பார்த்து முடித்து வையுங்கள்' என்று சொல்லும் அண்ணனை நினைத்துக் கவலை! அழகு இருக்கு; படிப்பு இருக்கு; வசதி வாய்ப்பு இருக்கு. எல்லாம் இருந்தும் பெண்ணை பார்த்துவிட்டுப் போகிற மாப்பிள்ளைவீட்டார், ஆயில் நட்சத்திரம், மூல நட்சத்திரம் என்றும்; சகுனங்கள் சரியில்லையென்றும் எந்த பதிலும் சொல்லாமல் போய்விடுவதால் குழப்பம்! இப்படி 5-ஆம் இடத்து கேதுவும் அவரைப் பார்த்த ராகுவும் கடந்த காலத்தில் பலரை நொந்து நோகடிக்கச் செய்தார்கள்.
இப்போது 4-ல் வந்திருக்கும் கேதுவும், 10-ல் வந்திருக்கும் ராகுவும் இந்தக் கவலைகளைப் போக்குவார்களா? கடந்த காலத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்து போடுவார்களா என்றெல்லாம் நீங்கள் எதிர்பார்க்கலாம்.
10-ஆம் இடம் என்பது தொழில், வாழ்க்கை ஸ்தானம். அந்தஸ்து, மதிப்பு, மரியாதை, செய்முயற்சிகளையும் குறிக்கும். 4-ஆம் இடம் என்பது பூமி, வாகனம், வீடு, கல்வி, தேக சுகம், தாயார் ஆகியவற்றைக் குறிக்கும் இடம். 4, 7, 10 கேந்திர ஸ்தானம் ஆகும். சுபகிரகங்களுக்கு திரிகோண ஸ்தானங்களும், பாபகிரகங்களுக்கு கேந்திர ஸ்தானங்களும் பலமான இடங்கள் ஆகும். ராகுவும் கேதுவும் பாபகிரகங்கள் என்பதால் கேந்திர ஸ்தானங்கள் (4, 10) அவர்களுக்கு உகந்த இடங்கள் என்பதை ஏற்றுக் கொள்ளலாம். எனவே மகர ராசிக்காரர்களுக்கு ராகு-கேது பெயர்ச்சி நல்லதாக அமையும் என்பது உண்மைதான்.
10-ல் ராகு இருப்பதோடு, அவரோடு மகர ராசிநாதன் சனி உச்சமாக சேர்ந்துள்ளார். எனவே தொழில் துறையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளும் கைகூடும். தொழில் அதிபர்கள் சங்கத்தில்- அல்லது வர்த்தர்கள் சங்கத்தில்- லயன்ஸ் கிளப்- காஸ்மோபாலிடன் கிளப்- ரோட்டரி கிளப்- உற்பத்தியாளர்கள் சங்கத்தில் முக்கிய பொறுப்புகள் ஏற்கும்படி உயர்வு ஏற்படும். ஜாதக தசாபுக்தி யோகமாக இருந்தால் கௌரவப் பட்டமும் பாராட்டும் கிடைக்கும். 10-ல் உள்ள ராகுவால் மருத்துவ சேவையில் இருப்பவர்களுக்கு வெளிநாட்டுப் பட்டம், பாராட்டு அல்லது மேற்படிப்புக்காக வெளிநாட்டுப் பயணம் போவது போன்ற நற்பலன்கள் உண்டாகும்.
சம்பளத்துக்கு வேலை பார்க்கும் சிலர் பொறுப்புகளைச் சுமந்து, கடமை உணர்ச்சியோடு பணியாற்றி மேன்மையடையலாம். ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர் மாவு தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பணியாற்றினார். சாதாரண வேலையில் சேர்ந்தவர் தமது விசுவாசமான உழைப்பால் படிப்படியாக உயர்ந்து தயாரிப்பு, வெளியூர் ஆர்டர், விற்பனை என்று எல்லாப் பொறுப்புகளையும் கவனித்தார். முதலாளியின் மகன்கள் இருவரும் பேருக்கு நிர்வாகத்தில் பணப்பொறுப்பை கவனித்துக் கொண்டார்கள். அவருடைய திறமையால் வாடகைக்கு இருந்த அரவை மில்லை சொந்த மில்லாக்கி, கடையும் சொந்தக் கடையாகி, முடிவில் ஒரு பார்ட்னராகி விட்டார். முதலாளிக்கு ஒரே மகள். அவரையும் அவருக்குத் திருமணம் முடித்து, சில ஆண்டுகளில் தமிழ்நாடுமட்டுமல்ல; வடநாட்டிலும் பிரபலமாகி வேன் வைத்து சப்ளை பெரிதாகி விட்டது! அவர் சொந்தவீடு கட்டி கிரகப்பிரவேசமும் செய்துவிட்டார். முதலாளி (மாமனார்) வீடு பழைய வீடு. மருமகன் பங்களா டைப்பில் புதிய வீடு கட்டி ஆடம்பரமாக கிரகப்பிரவேசம் செய்துவிட்டார். அதுதான் பிரச்சினை. அவர் மைத்துனர்கள் தங்கள் தகப்பனாரிடம் இல்லாததையும் பொல்லாததையும் சொல்லிக்கொடுத்து தொழிலைப் பிரிக்கும்படி செய்துவிட்டார்கள். பஞ்சாயத்து வந்து விட்டது. கடை மைத்துனர்களுக்கு- வியாபாரம் மருமகனுக்கு என்று முடிவாகி, பழைய விலாசத்திலேயே அவர் தொழிலை நடத்தி கோடீசுவரர் ஆகிவிட்டார். சொந்தத்தில் மாவு மில்லும் கட்டிவிட்டார். இப்படி ஒரு யோகம் உங்களுக்கும் வரலாம். ராகுவும் சனியும் அந்த அதிர்ஷ்டத்தை வழங்கலாம்.
4-ஆம் இடத்து கேது உங்களுக்கு சொந்த இடம், வீடு, வாகன யோகத்தைத் தருவார். ஏற்கெனவே வாங்கிப் போட்ட காலி இடம் இப்போது பல மடங்கு விலை ஏற்றத்தால் மதிப்பு கூடிவிடும். சில பகுதியை நல்ல விலைக்கு விற்று மீதிப் பகுதியில் சொந்த வீடு கட்டலாம். கேது 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால் அது சம்பந்தமாக கடன் வாங்க நினைத்தாலும் அத்திட்டம் நிறைவேறும்; கடன் கிடைக்கும். வீட்டுக்கடன், கார் கடன், தொழில் கடன் போன்றவையெல்லாம் கிடைக்கும்.
கேது நிற்பது செவ்வாயின் வீடு. செவ்வாய் பூமிகாரகன். ராகு நிற்பது சுக்கிரன் வீடு. சுக்கிரன் வாகனகாரகன். ஆடை, அலங்கார, ஆடம்பரப் பொருள்காரகன். அதனால் ரியல் எஸ்டேட், பில்டிங் காண்ட்ராக்ட், பிரமோட்டர்ஸ் போன்றவர்களுக்கும் இந்த ராகு- கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் யோகத்தையும் லாபத்தையும் தரும். கோவையில் ஒரு பிரமோட்டர் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதாக பத்திரிகை செய்தி! கேது ஞானகாரகன். பெரிய நாயக்கன் பாளையத்தில் பி.எஸ்.பி. பேரவையில் உள்ள ஒருவர் ஜோதிட ஆராய்ச்சிக்காகவே செவாலியர் விருது வாங்கியிருக்கிறார். அமரர் தென்காசி மிஸ்டிக் செல்வத்துக்கும் கௌரவ டாக்டர் பட்டம் கிடைத்தது. அவருக்கு மிஸ்டிக் செல்வம் என்று பெயர் அமைத்துக் கொடுத்தது அடியேன்தான். வாலாஜா பேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீட நிறுவனர் முரளீதர சுவாமி களுக்கும் இத்தாலியப் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். இப்படி ராகு கேது உங்களை கௌரவிக்கும்.
அடியேனுக்கும் ஜோதிட சேவையைப் பாராட்டி பல விழாக்களில் பாராட்டும் பட்டமும் கொடுத்து இருக்கிறார்கள். தெத்துப்பட்டி ராஜ காளியம்மன் கோவிலிலும் துரை நடராஜனார் அவர்கள் பாராட்டி ராஜகாளி விருது கொடுத்திருக்கிறார். இவையெல்லாம் ராகு-கேது அனுக்கிரகம் இருந்தால்தான் கிடைக்கும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கும் சுக்கிரன் அதிபதி என்பதால், சுக்கிரன் வீட்டில் ராகு இருப்பதால் பாராட்டும் பட்டமும் விருதும் கிடைக்கும்.
மகர ராசிக்கு 5-ல் குரு இருப்பதால் உங்கள் பிள்ளைகளுக்கும் இப்போது பேரும் புகழும் பெருமையும் கிடைக்கும். அவர்களுடைய திறமையாலும் அது கிடைக்கும்; உங்கள் பெருமையாலும் அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். உதாரணத்துக்கு ஜோதிட உலகில் பெரிய சாதனை படைத்தவர் பி.எஸ்.பி அவர்கள். அவருக்கென்று தமிழகம் முழுவதும் மாணவர்களும் பேரவையும் இருக்கிறது. அவர் ஒரே மகன் விஜய்பாலா- அவருக்குப் பிறகு அவர் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து நடத்தி பி.எஸ்.பி பேரவையை பல ஊர்களில் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறார். தந்தைக்குப் பிறகும் பிள்ளையின் பெருமை தொடருகிறது.
புராணத்தில் தந்தை பரமசிவனுக்குச் சமமாக புகழ்பெற்றவர் முருகன். தந்தைக்கே உபதேசித்தவர். இதிகாசத்தில் தந்தை ராமரின் புகழையும் மிஞ்சியவர்கள் லவகுசன். சரித்திரத்தில் மோதிலால் நேரு-அவர் மகன் ஜவஹர்லால் நேரு- அவர் மகள் இந்திரகாந்தி- அவர் மகன் ராஜிவ்காந்தி! இன்றைய நிலையில் அரசியல் உட்பட எல்லாத்துறையிலும் வாரிசு யோகம் வந்துவிட்டது. ஆனால் அந்தப் பெருமையும் திறமையும் தொடருகிறதா நிலைக்கிறதா என்பது சந்தேகம்தான். ஒருசிலருக்கே யோகம் அமைகிறது.
10-ல் உள்ள சனியும் ராகுவும் வெளிநாட்டு வர்த்தகத்தொடர்பை ஏற்படுத்தும். டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட்ஸ், மெஷனரி, யந்திர சம்பந்தமான தொழில், லேத்துபட்டறை, மெடிக்கல் ஸ்டோர்ஸ், மெடிக்கல் ஏஜென்ஸி (பார்மெசூடிகல்ஸ்) போன்ற தொழில்களில் இருப்பவர்களுக்கும் இக்காலம் யோகம் உண்டாகும். குறிப்பாக சனிதசை, சனி புக்தி, ராகு தசை, ராகுபுக்தி நடந்தால் மேற்கண்ட தொழில் வகையில் முன்னேற்றமும் லாபமும் அடையலாம். அது சம்பந்தமான முதலீடுகளும் சுபவிரயங்களும் ஏற்படும். 12-ஆம் இடத்தை ராகுவும் சனியும் பார்க்கும் பலன் அதுதான்!
8-ஆம் இடத்தையும் ராகு பார்க்கிறார். அதனால் அபகீர்த்தி, சஞ்சலம், தன் பயம், பீடை, கவலை, அவமானம் போன்ற 8-ஆம் இடத்துக்குரிய பலன்களையெல்லாம் விரட்டியடிப்பார். ஜாதகத்தில் 6, 8-க்குடைய தசாபுக்திகள் நடந்தால் அவர்களுக்கு 8-ஆம் இடத்தைப் பார்க்கும் ராகுவால் சங்கடங்களும் சஞ்சலங்களும் சலனங்களும் ஏற்படும். அப்படியிருந்தால் ஜாதக தசாபுக்திகளுக்கேற்ற பரிகாரங்களைச் செய்துகொள்ள வேண்டும். அத்துடன் காரைக்குடி நகர சிவன்கோவிலில் உள்ள சரபருக்கு ஞாயிற்றுக்கிழமை சரபர்ஹோமம், அபிஷேகம் செய்யலாம். தொடர்புக்கு சோமு குருக்கள், தொலைபேசி: 9943819133. கும்பகோணம் அருகில் திருபுவனத்திலும் சரபேஸ்வரர் சன்னதி உண்டு. அங்கும் செய்யலாம். தேவகோட்டையில் பட்டுக்குருக்கள் நகரில் பிரத்தியங்கிரா தேவி கோவிலில் பிரத்தியங்கிரா ஹோமம் செய்யலாம். கருப்புக் குருக்கள், தொலைபேசி: 9443619550.
மேஷ கேது மகர ராசிக்கு 2-ஆம் இடத்தைப் பார்ப்பதால் சொல்வாக்கும் செல்வாக்கும் குறையாது என்றாலும், பணச்சேமிப்பும் கையிருப்பு ரொக்கமும் இருக்காது! தேவைகள் நிறைய இருக்கும். வரவுகள் வந்தாலும் அவற்றை நிறைவேற்றுமளவு உபரியாக பணவரவு இருக்காது! கடைசிக் கட்டத்தில் அக்கம் பக்கம் புரட்டித்தான் அரும்பாடுபட்டுத்தான் தேவைகளை நிறைவேற்ற வேண்டும். அதே கேது 6-ஆம் இடத்தையும் பார்ப்பதால், கடன் உண்டாக்கும். எதிரி, போட்டி, பொறாமை, வைத்தியச் செலவுகளையும் சிலருக்கு உருவாக்குவார். பலருக்கு 6-ஆம் இடத்துக் கெடுபலன்களையும் விலக்குவார். ஒரே கிரகம் இரண்டையும் செய்யும். அது அவரவர் ஊழ்வினைப் பயனைப் பொறுத்தது! தீக்குச்சி தீபம் ஏற்றவும் பயன்படும்; ஒரு குடிசையைக் கொளுத்தவும் பயன்படும்.
ஆக ராகு-கேது பெயர்ச்சி உங்களை பழைய பிரச்சினைகளில் இருந்து விடுவித்து வாழ்வையும் முன்னேற்றத்தையும். தரும், ராசிநாதன் சனி உச்சமாக இருக்கவும், குரு 5-ல் இருந்து ராசியைப் பார்க்கவும் இருப்பதால் ராகு கேதுவுக்கு பச்சைக்கொடி காட்டி ஆதரவு தருவார்கள்.
உத்திராட நட்சத்திரக்காரர்களுக்கு:
உத்திராடம் சூரியன் நட்சத்திரம், சூரியன் உங்கள் ராசிக்கு அட்டமாதிபதி என்பதால், சில காரியத் தடைகளையும் கௌரவப் பிரச்சினைகளையும் உருவாக்கினாலும், குரு ராசியைப் பார்ப்பதால் எல்லாவற்றையும் சமாளித்து விடலாம். இன்னொரு வகையில் ராசிநாதன் சனி உச்சம் பெறுவதும் ஒரு காரணம். சென்னை செங்குன்றம் அருகில் ஞாயிறு என்ற ஊரில் சிவன் கோவில் உள்ளது. அங்கு நரசிம்ம மூர்த்திக்கு கருப்பு உளுந்து வடை செய்து நைவேத்தியம் படையல் போட்டு அர்ச்சனை செய்தால் ராகு- கேது தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
திருவோண நட்சத்திரக்காரர்களுக்கு:
திருவோண சந்திரன் நட்சத்திரம், மகர ராசிக்கு 7-க்குடையவர். எனவே திருமணத் தடை விலகும். பிறந்த குடும்பம் ஒன்று சேரும். வாரிசு உருவாகும். உபதொழில் அல்லது கூட்டுத்தொழில் அமையும். ராசிநாதன் சனி உச்சம் பெற்று 7-ஆம் இடத்தைப் பார்ப்பதும் நன்மையைத் தரும். மனைவி பேரில் தொழில் அல்லது சொத்து சுகங்களை ஏற்படுத்தலாம். தென் திருமுல்லைவாயில் என்ற தலத்தில் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சந்திர பகவான் தன் நோயைப் போக்கிக் கொண்டதாக ஐதீகம். அங்கு சென்று வழிபடலாம்.
அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு:
அவிட்டம் செவ்வாயின் நட்சத்திரம். செவ்வாய் மகர ராசிக்கு 4, 11-க்குடையவர். மேலும் செவ்வாய் வீடான மேஷத்தில் கேது நிற்க, ராகு, சனி பார்ப்பதால் பூமி, வீடு, வாகனம், சுகம் ஆகிய 4-ஆம் இடத்துப் பலனையும்; லாபம், வெற்றி, ஜெயம் ஆகிய 11-ஆம் இடத்துப் பலனையும் ராகு- கேது பெயர்ச்சி தரும். புதுக்கோட்டை அருகில் குமரமலை என்ற ஊரில் பாலதண்டபாணி திருக்கோவில் உள்ளது. அங்கு சென்று செவ்வாய்க்கிழமை வழிபடவும்.

No comments:
Post a Comment