மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய) மீன ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த ராகு இப்போது 8-ஆம் இடத்திலும்; 3-ல் இருந்த கேது இப்போது 2-ஆம் இடத்திலும் மாறியிருக்கிறார்கள். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை என்றே சொல்லவேண்டும். அதனால் ஒரு சில தடை தாமதமான பலன்களையும் காரியத்தடைகளையும் தவிர, பெரிய பாதிப்புகளைச் சந்திக்கவில்லை என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் ஒரு சில மீன ராசிக்காரர்களுக்கு சில நல்ல காரியங்களையும் கடந்த கால ராகுவும் கேதுவும் செய்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஒரு சிலருக்கு சொந்த இடம், வீடு, வாசல், மனை, புதிய வாகன யோகத்தையும் தந்துள்ளது. ஒரு சிலருக்கு நீண்டகாலமாகத் தடைப்பட்ட பிள்ளையின் கல்யாணமும் நடந்துள்ளது. நல்ல மருமகள், நல்ல மருமகன் ஆகிய பலனையும் சந்தித்துள்ளனர். ராகு-கேது இவற்றுக்கு துணை செய்வதுபோலவும் ஆதரவு காட்டுவது போலவும் 2-ஆம் இடத்து குருவும், 7-ஆம் இடத்துச் சனியும் நல்ல இடத்தில் இருந்து நல்ல இடங்களைப் பார்த்தார்கள். ஏற்கெனவே கேது இருந்த மூன்றாமிடம் அற்புதமான இடம்- ய