Sunday, December 29, 2013

சிம்மம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்



சிம்ம ராசிச் சிங்கங்களே, முதல் அரையாண்டில் நீங்கள் வேறுபட்ட சாதகமான பலன்களைப் பெறப் போகிறீர்கள். 2014 ஜாதகத்தின்படி உங்கள் குடும்ப உறுப்பினர்கள் முதல் அரையாண்டில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2014-இல் வருமானம் வரும் வழிகள் அதிகரிக்கும். நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடம் இருந்தும் உறுதியான ஆதரவு கிடைக்கும். 2014 ஜாதகத்தின்படி, குழந்தை பாக்கியம் மற்றும் கல்விக்கு இது சாதகமான நேரம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சனி ஐந்தாம் வீட்டில் இருப்பதால் குழந்தை பாக்கியம் தொடர்பான குழப்பங்கள் ஏற்படும்; இருப்பினும், எல்லாப் பிரச்சினைகளும் அந்தந்த நேரத்தில் முடிவுக்கு வரும். நல்ல உடல் ஆரோக்கியம் நிலவும். 2014 ஜாதகத்தின்படி காதல் மற்றும் தாம்பத்தியத்திற்கு இது சிறப்பான காலமாக இருக்கும். 2014 ஜாதகத்தின்படி இலாபகரமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில் முறையில் உங்கள் திறமை வெளிப்படும். 2014 ஜாதகத்தின்படி பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் தாங்கள் விரும்பிய நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவார்கள். இருப்பினும், இரண்டாவது அரையாண்டில் செலவினங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்திற்கு இது சாதகமான நேரம் இல்லை. தேவையற்ற பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும். அரசஞ்செடி ஒன்றை நட்டுத் தண்ணீர் ஊற்றி வருவது நலம்.

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...