Sunday, December 29, 2013

கன்னி இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்

 


கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த 2014 மொத்தத்தில் ஒரு இலாபகரமான ஆண்டு. இந்த 2014-இல், வீட்டில் ஒரு சுமூகமான சூழ்நிலை நிலவும். ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும். இருப்பினும், உங்களுக்குச் சொல்ல விரும்பும் ஒரு ஆலோசனை என்னவெனில் நீங்கள் உங்கள் நாவைக் கட்டுப் படுத்தவேண்டும் என்பதே. மேலும், தேவையற்ற செலவினங்களைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, இரண்டாவது அரையாண்டில் உங்களுடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 2014 ஜாதகத்தின்படி, உங்கள் தொழிலில் அசாதாரணமாக ஏதாவது சாதிப்பீர்கள். பதவி உயர்வு கிடைக்கும். 2014-இல் இன்னும் அதிக வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும், சனியும் இராகுவும் இரண்டாம் வீட்டில் இருக்கின்றனர். ஆகவே, பணம் சேமிப்பது என்பது சற்று சிரமமானதாக இருக்கும். ஆனாலும், ஜுலை மாதத்தில் இராகு இடம் மாறுவதால் சேமிப்புக்கு அது உதவியாயிருப்பதோடு உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. 2014 ஜாதகக் கணிப்பின்படி மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். முன்நெற்றியில் செந்தூரக் குங்குமம் இடுவது உங்களுக்குச் சாதகமானது.

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...