Sunday, December 29, 2013

மீனம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்



மீனம் ராசிக்காரர்களே இந்த 2014 உங்களுக்கு ஆதாயமுள்ளதாக அமையும். சனி தசையினால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும், வியாழனின் அனுக்கிரகம் உங்களுடன் இருக்கும். வீட்டில் இணக்கமான சூழல் நிலவும். உங்களின் ஆரோக்கியம் சீராக இருக்கும். புதியதாக வீடு அல்லது வாகனம் வாங்க நேரம் கூடிவரும். 2014 ஜாதகக் கணிப்பின்படி ஆண்டின் இரண்டாவது பகுதியில் காதல் மற்றும் திருமண விஷயங்கள் சாதகமானதாக அமையும். ஆனால், ஜூலைக்குப் பிறகு இராகு உங்களுடைய ஏழாம் வீட்டிற்கு வருவதால், திருமண வாழ்க்கையில் அழுத்தம் ஏற்படும். 2014 ஜாதகக் கணிப்பின்படி உங்களுடைய சொந்தத் தொழில் முன்னேற்றத்திற்காக பணம் செலவிட வேண்டி வரும். வயதில் மூத்தவர்களின் உதவி கிடைக்கும். உங்கள் திட்டங்களை செயல்படுத்துகிற அதே நேரத்தில் புதிய விஷயங்களையும் தொடங்குவீர்கள். வருமான உயர்வுக்கு வாய்ப்புகள் இருப்பதை நட்சத்திரங்கள் காட்டுகின்றன. கூட்டுத் தொழிலில் இருந்தால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருப்பது நலம். மாணவர்களுக்கு, 2014 ஜாதகக் கணிப்பின்படி இந்த நேரம் நல்லதாக இருக்கும். மேற்கல்வி பயில விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் இன்னும் சாதகமாக இருக்கும். ஒரு சதுரமான வெள்ளித் துண்டை உங்கள் பையில் எப்போதும் வைத்திருப்பது நல்ல பலன்களைக் கொண்டுவரும்.

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...