Thursday, September 6, 2012

சிவம்



நாம் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்துவது - சிவசொரூபம். சிவனுடைய ஜாடமுடியிலிருக்கும் பிறை சந்திரன், நம்முடைய இன்பமும், துன்பமும் மாறி மாறி வளர்பிறை, தேய்பிறையாக வருவதை குறிக்கும்.
சிவனுடைய சிரசிலிருக்கும் கங்கை:
மனதை, கங்கை போல, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கங்கையில் எத்தனை அழுக்குகள் வந்து சேர்ந்தாலும் அதன் தூய்மை கெடுவதில்லை. அதுபோல, ஆசாபாசங்கள் நம்மை வழித்தவறி போகச் செய்தாலும், நாம் தூய்மையை விட்டு அகலக்கூடாது.
ஒவ்வொரு நிமிடமும் பாவக்குழியிலே தள்ள நச்சுப்பாம்பாக சூழ்நிலை நமக்கு காத்திருக்கிறது. இதையே சிவனுடைய கழுத்தில் இருக்கும் பாம்பு எச்சரிக்கிறது.
மிருக உணர்ச்சிகள் நம்மை பாதிக்கா வண்ணம் உயர்ந்த உள்ளத்தோடு நாம் வாழவேண்டும் என்பதை சிவனுடைய புலித்தோல் ஆடை உணர்த்துகிறது. உடல் முழுவதும், சாம்பலை பூசியிருப்பது மனிதனுடைய முடிவு, பிடிசாம்பல்தான் ஆகவே அகங்காரத்தை விட்டொழிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஈசன் தன் உடம்பின் ஒரு பாகத்தில் தேவியை வைத்திருப்பது. வாழ்வில் நாம் காமத்தை வென்று, மோட்சத்தை அடையவேண்டும் என்பதற்காகத்தான்.

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...