Skip to main content

சாதுக்களோடு பழகினால்…


நல்லவர்களின், மகான்களின் சகவாசம் வைத்திருந்தால், நமக்கும் நல்லவர்களின் புத்தி ஏற்படும். அதனால் தான், “மகான்களை அண்டி இரு…’ என்றனர். மகான்களை தரிசித்தாலும், அவர்கள் இருந்த இடத்தில் இருந்தாலும், அந்த மகான்களின் குணங்கள் நமக்கும் ஏற்படும். கெட்டவர்களோடு சேர்ந்திருந்தால் கெட்ட புத்தி தான் ஏற்படும்.
காட்டு வழியே போய் கொண்டிருந் தான் ஒருவன். அவனை துரத்தியது ஒரு புலி. பயந்து ஓடி ஒரு மேடையை அடைந்தான். புலியும் அவனை துரத்தியபடி அந்த மேடைக்கு வந்தது. ஆனால், ஒன்றும் செய்யாமல், சாதுவாக அங்கே படுத்துக் கொண்டது. இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். புலியும் அவன் கூடவே இறங்கி, அவனைத் துரத்த ஆரம்பித்தது. மீண்டும் அந்த மேடையில் ஏறினான். புலி அவனைப் பின் தொடர்ந்து வந்து மேடையில் ஏறியது. ஆனால், அவனை ஒன்றும் செய்யாமல், சாதுவாக மேடையில் படுத்துக் கொண்டது.
இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது… “இந்த புலி கீழே இறங்கினால் நம்மைத் துரத்துகிறது; மேடைக்கு வந்ததும் சாதுவாக இருக்கிறதே… அப்படியானால், இந்த மேடையில் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும்…’ என்று எண்ணி, மேடை மீதிருந்த செடி, கொடிகளையும், கல், குப்பைகளையும் அகற்றிப் பார்த்தான். அந்தப் புதரை விலக்கி பார்த்தபோது, அங்கே ஒரு மகானின் சமாதி இருப்பதை கண்டான்…
“ஓஹோ… இந்த சாதுவின் சமாதிக்கு அருகில் வரும் போது, புலியும் சாதுவாகி விடுகிறது. சமாதியை விட்டு கீழே இறங்கினால், மீண்டும் துரத்துகிறது. சாதுக்களின் சமாதி அருகில் வரும்போதே, சாதுவான புத்தி வந்து விடுகிறது. அப்படியானால் சாதுக்களோடு சேர்ந்திருந்தால் எந்த ஆபத்தும் வராது…’ என்று எண்ணி, அந்த மேடையிலேயே உட்கார்ந்திருந்தான்.
புலி கொஞ்ச நேரம் சாதுவாக அங்கே உட்கார்ந்து விட்டு, கீழே இறங்கி இரை தேடப் போய் விட்டது.
“ஆஹா… இந்த சமாதிக்கு அருகில் நாம் இருந்ததால், புலியிடமிருந்து தப்பினோம். சாதுக்களின் சகவாசம் இருந்தால் எவ்வளவு நல்லது என்பது இப்போது புரிகிறது…’ என்று நினைத்தான். அன்று முதல் சாதுக்களை தேடிப் போய், அவர்களது பக்கத்தி லேயே இருக்கலானான்; சவுக்கியமாகவும் இருந்தான்.
அதனால், நாம் எப்போதும் சாதுக்களின் சங்கமத்தையே விரும்ப வேண்டும்; அவர்களுடனே பழக வேண்டும். கெட்ட சகவாசம் பிராண சங்கடம் என்பர். நல்ல சகவாசத்தை நாம் தேடிக் கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

மாந்திரீகமும், காமமும்

                          மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன் வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல் போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண் வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது.           காம இயல் நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல் நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும்,   ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள் கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய   மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில் உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின் மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம்

காதல் வெற்றிக்கு.....

காதல் வசப்படுபவர்களில் நிறைய பேர்   தங்களின் காதல் வெற்றி பெற வசியம் செய்பவர்களை தேடி செல்வதை அதிகம் பார்க்க முடிகிறது . வசியம் என்பது ஏதோ மிகப்பெரிய சக்தி   வாய்ந்தது போலவும் யாரை   வேண்டுமென்றாலும் வசியம் செய்து   விடலாம் என்பது போலவும் ஒரு   மாயை நிலவுகிறது . உண்மையில்   வசியம் செய்வதற்க்கு சில   விதி முறைகளை   ஸ்ரீ தேவி யட்சினி மகாத்மியம்   சொல்கிறது அதன்படி ...... திருமணமாகி கணவனுடன் இருக்கும் பெண்ணை வசியம் செய்ய கூடாது வேறு ஒரு ஆணுடன் காதல் வயப்பட்டபெண்ணை வசியம் செய்யகூடாது உறவு முறையற்ற பெண்ணை வசியம் செய்ய கூடாது தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணை வசியம் செய்ய கூடாது அடைக்கலம் தேடிவந்த பெண்ணை வசியம் செய்ய கூடாது அறிமுகம் இல்லாத பெண்னை வசியம் செய்ய முடியாது சிம்ம லக்னம் கொண்ட பெண்னை வசியம் செய்ய முடியாது வைஜயந்தி உபாசனை செய்யும் பெண்ணை வசியம் செய்ய முடியாது இத்தகைய பெண்களை தவிர்த்துத்தான் வசியத்தை பிரயோகிக்க முடியும் . அதே போல பெண்களும் . திருமணமான ஆண்களை வசியம் செய்ய

கேரள மாந்திரீக முறைகள்

           கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள். ஒரு காலத்தில் கேரள ஆன்மீகமும், மாந்திரீகமும் பின்னிக் கிடப்பதை நாம் காண முடியும், இந்தியாவிலேயே அதிக கல்வி கற்ற மாநிலம் என்றாலும் மாந்திரீகத்தில் நாட்டம் அதிகம் உள்ளனர். அவர்கள் ஆன்மீகத்தையும், மாந்திரீகத்தையும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எண்ணி அமானுட வழக்கங்களையும்,  அமானுட நம்பிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இந்த மாந்திரீக தாக்கம் அவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இந்த மாந்திரீகம் அன்றில் இருந்து இன்றுவரையில் அவர்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் ஊறிகிடக்கிறது.            அவர்கள் இந்த மாந்திரீக முறைகளை ஒரு தொழில் முறைக் கலையாகவே கருதுகின்றனர். கேரளாவில்  65  சதவிகித மக்கள் கடவுள் மற்றும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் கண்திர்ஷ்டி என்ற பார்வை மூலமாக பெறப்படும் தீய பலனை அவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய பார்வையினால் வரும் கண்திர்ஷ்டியை திசை திருப்ப பல இடங்களில் கொடும்பாவி பொம்மைகள் வைத்திருப்பதை கேரளாவில