கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை
நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள். ஒரு காலத்தில் கேரள ஆன்மீகமும்,
மாந்திரீகமும் பின்னிக் கிடப்பதை நாம் காண முடியும், இந்தியாவிலேயே அதிக கல்வி
கற்ற மாநிலம் என்றாலும் மாந்திரீகத்தில் நாட்டம் அதிகம் உள்ளனர். அவர்கள்
ஆன்மீகத்தையும், மாந்திரீகத்தையும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எண்ணி
அமானுட வழக்கங்களையும், அமானுட நம்பிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இந்த
மாந்திரீக தாக்கம் அவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இந்த மாந்திரீகம் அன்றில் இருந்து
இன்றுவரையில் அவர்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் ஊறிகிடக்கிறது.
அவர்கள் இந்த மாந்திரீக முறைகளை ஒரு தொழில் முறைக் கலையாகவே கருதுகின்றனர்.
கேரளாவில் 65 சதவிகித மக்கள் கடவுள் மற்றும் மாந்திரீகத்தில்
நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் கண்திர்ஷ்டி என்ற பார்வை மூலமாக
பெறப்படும் தீய பலனை அவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய பார்வையினால் வரும் கண்திர்ஷ்டியை
திசை திருப்ப பல இடங்களில் கொடும்பாவி பொம்மைகள் வைத்திருப்பதை கேரளாவில்
பார்க்கமுடியும். மேலும் கேரள மக்களிடையே தீய மொழி கூறும் மக்களுக்கு மிகப்
பயப்படுவார்கள். அதாவது சாபத்தையும், ஏக்கத்துடன் பேசும் பேச்சையும் அவர்கள்
முழுவதும் நம்புகின்றனர். மாந்திரீக சடங்குகள் அங்கு உள்ள கோயில்களில் சர்வ
சாதாரணமாக பார்க்கமுடியும். மேலும் அவர்கள் இத்தகைய எதிர்மறையான சக்திகளில்
இருந்து விலகுவதற்கு தீ மிதித்தல், உடலில் ஊசியால் துளை இடுதல், தூக்கு மரத்தில்
தொங்குதல் போன்ற காரியங்களில் ஈடுபடுவர்.
குட்டிச்
சாத்தான் என்ற தெய்வத்தை அவர்கள் மாந்திரீகத்திற்கு முழுவதும் நம்புகின்றனர்.
குட்டி என்றால் சிறிய, சாத்தான் என்றால் குழந்தை என்று அர்த்தம். குட்டிச்
சாத்தான் சிவனின் மைந்தன் என்றும் அழைக்கின்றனர். குட்டிச் சாத்தான் தீய ஆவிகளை
செயல்படாதபடி காக்கும் தன்மை வாய்ந்தது என்று கருதுகின்றனர். மாந்திரீகத்திற்கு
கேரள மாநிலம் பேர் பெற்ற மாநிலம் என்று கருதுகின்றனர். இவர்களும் மஞ்சள்பாவை,
மாப்பாவை, போன்றவைகள் செய்து அதன் மூலமாக பூஜைகள் நடத்தி தங்கள் அபிலாசைகளை
நிறைவேற்ற முடியும் என்று எண்ணுகின்றனர். வேறு சிலர் குட்டிச்சாத்தான் உயர்ந்த
ஜாதி என்று கூறப்படும் நம்பூதிரிக்கும் குறைந்த ஜாதி பெண்ணுக்கும் ஏற்பட்ட கள்ள
உறவால் பிறந்த குழந்தையே குட்டிச்சாத்தான் என்று கூறுகின்றனர். மேலும் சிலர்
குட்டிச்சாத்தான் சிவனுக்கும் தாழ்வான குலம் சார்ந்த ஒரு பெண்ணுக்கும் பிறந்த
குழந்தைதான் குட்டிச்சாத்தான் என்ற கதையும் உண்டு. குட்டிச்சாத்தானுக்கு எருமையே
வாகனம். நான் ஒரு குட்டிச்சாத்தானின் சிலையை பார்க்க நேர்ந்தது. அந்த குட்டிச்சாத்தான்
விகார உருவத்துடன் வவ்வாலில் பறந்து வருவதுபோல் உருவாக்கப்பட்டிருந்தது. கேரளாவில்
இந்த குட்டிச்சாத்தான் பற்றி பல கதைகள் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுவாக கேரளாவிற்கு பலர் மாந்திரீகம் செய்பதற்காக செல்வதுண்டு. ஏன்? தமிழகத்தில்
உள்ள அரசியல் வாதிகள் அங்கு சென்று ஏமாந்து வருவதும் உண்டு. அவர்கள் மாந்திரீகத்தை
ஆரம்பிப்பதற்க்கு முன்னால் பூக்களாலோ, அல்லது பல வண்ணக் கோலப்பொடிகளாலோ,
சக்கரங்கள் வரைவர். பின்னர் தன்னம்பிக்கையுடன் அழுத்தமாக மந்திரங்கள் சொல்வர்.
பின்பு மாந்திரீகத்திற்காக உபயோகப்படுத்தப்படும் பொருள்களை உபயோகிக்காது வெளியே
வீசி விடுவர். கேரளா மாந்திரீவாதிகளிடம் கூட நச்சுப் பொருள்களைக் கொடுத்து
அவர்களை பல வழியில் செயல்படுத்தாமல் இருக்க வைப்பதே அதிகம் காண முடிகிறது. இத்தகைய
வைப்பு முறைகள் மிகக் கொடுமையாகவும், ஈவு இரக்கமற்றதாக இருப்பதை காண முடிகிறது.
அவர்களிடம் மந்திர தந்திர உபாசனையும் உண்டு.
அவர்கள்
மந்திரங்களை ஆறு விதமாக உபயோகிப்பதாக கூறுகிறார்கள்.
1) சாந்தி:- ஒருவர்
மாந்திரீகத்தின் மூலம் பாதிக்கப்பட்டவரை சரி செய்வதாகும்.
2) தாக்குதல்:-
ஒருவரை மந்திரக்கிரிகைகள் மூலம் செயல்படாமல் தாக்குவதாகும்.
3) ஸ்தம்பிக்க
வைத்தல்:- இவர்கள் மந்திரக்கிரிகைகள் மூலம் ஒருவரை செயல்படாமல் ஸ்தம்பிக்க
வைப்பதாகும்.
4)
பிரித்தல்:- நேர்மையற்ற தொடர்புகளை பிரித்து கணவன் மனைவியை ஒன்று சேர்த்தல் ஆகும்.
5)
வெளியேற்றுதல்:- ஒருவருக்கு மந்திரக்கிரிகைகள் மூலம் ஒரு வீட்டில் இருந்தோ
ஊரில் இருந்தோ வெளியேற்றுவதாகும்.
6) அழித்தல்:-
ஒருவரை பொருளாதார உயர்வில் இருந்தோ, தார்மீக உயர்வில் இருந்தோ அளிப்பதாகும்.
அவர்கள்
மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவர்களை பலவாறு அறிந்து கொள்ள குறியீடுகள்
வைத்துள்ளனர்.
1) சோர்ந்த
குழிவிழுந்த கண்கள்,
2) உடலில்
நல்லமணம் அல்லது நாற்றம் ஏற்படுதல்,
3)
பாதிகப்பட்டவரைக் கண்டு பசுமாடு மிரளுதல்,
4) வாயில்
இருந்தும், பிறப்பு உறுப்புகளிலும் அழுகிய
நாற்றம் ஏற்படுத்துதல்
5)
மனரீதியில் பாதிப்பு அடைதல்,
6) உடல் ரீதியில் மருத்துவதாலும் சரி செய்ய முடியாத
துன்பங்கள் போன்ற பல அளவீடுகள் வைத்துள்ளனர்.
இப்பொழுது கூட பல வெளி நாட்டினர் அங்கு சென்று
மாந்திரீக காரியங்களுக்காக பணம் செலவு செய்து ஏமாறுபவர்களை
பார்த்துள்ளேன். ஆகவே இவ்வாறு ஏமாற வேண்டாம் என்று கூறுகின்றேன்.
This is my problem solver thing, i had a good experience here, my all the financial problems got sorted
ReplyDeleteHow did you solve it? Like to talk to you..9944189668..
DeleteSir help me
ReplyDeleteHelp me sir
ReplyDeleteNEOPl
ReplyDeleteNEOPLIYAN
ReplyDelete