#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..2
கர்மா :
நம் #வேதங்களில் "கர்மா" என்ற சொல்லுக்கு நாம் செய்யும் "செயல்" என்பது பொதுவான பொருளாகும். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் செயல் உலகத்தில் உண்டு. இதனை #நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஆங்கிலத்தில் "To Every Action There is an #Equal and #Opposite #Reaction" என்று சொல்வார்கள். நம் நம்பிக்கைகளிலும் நாம் செய்த வினைகளைக் குறிக்க கர்மா என்ற சொல் பயன்படுத்தபடுகிறது. கர்மவினை என்றும் வினைப்பயன் என்றும் நாம் புழக்கத்தில் சொல்வது இந்த நியூட்டனின் மூன்றாம் விதியைத்தான்.
"ஒருவன் எப்படி செயல்படுகிறானோ அவனும் அதைப்போலவே ஆகின்றான்"
#யஜூர்வேதம்: பிரகதாரண்ய உபநிஷத் 4.4.5
கர்மா என்பது ஒருவனுக்கு #இறைவனால் எழுதப்பட்ட #தலையெழுத்து இல்லை, #முற்பிறவிகளில் அவரவர் செய்த வினைகளின் (செயல்களின்) பதிவு ஆகும். முற்பிறவிகளில் நல்ல கர்மங்களை (செயல்களை) செய்திருப்பின் அதன் பலனாக இப்பிறவியில் நல்ல எதிர்வினை உருவாகி அதன் பயனாக நனமை தரும் #பலன்கள் கிடைக்கும். இதே ஒருவர் முற்பிறவியில் கெட்ட கர்மங்கள் கூடிய செயல்களை செய்திருப்பின் அதன் பலனாக இப்பிறவியில் துன்பமும் துக்கமும் அடைந்திருக்கும் நிலை ஏற்படும். ஒவ்வொரு மனிதனின் நல்வினை மற்றும் தீவினைகளின் தொகுப்பே கர்மா எனப்படும், இது பிறவிதோறும் தொடரும் மற்றும் கணக்கிடப்படும் அதாவது மிகச்சரியாக கணிக்கப்பட்டு தொடர்ந்து வந்துகொண்டிருக்கும். பின்வரும் பாடலில் இது புரியும்.
"கருவமைப்பின் வழிவந்த வினைப்பதிவு #சஞ்சிதமாம்
உருவெடுத்தபின் கொண்ட வினைப்பதிவு #பிராப்தமாம்
இருவினையும் கூடியெழும் புகுவினையே #ஆகாமியமாம் - இங்கே
ஒருவினையும் வீண்போகா, உள்ளடங்கிப் பின்விளைவாம்"
-யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி
மேற்கண்ட பாடலின்படி மனிதன் தன் பிறப்புகள் தோறும் மூன்று வகையான கர்மவினைப் பயன்களைப் பெற்று அனுபவிக்கிறான், அவை முறையே
இவற்றில் முதலாவதான "சஞ்சித கர்மா" எனப்படுவது நாம் கருவில் உருவாகும் போதே உடன் உருவாவது. அதாவது முன் ஜென்மங்களில் நாம் செய்த பாவ புண்ணிய வித்து, இந்த ஜென்மத்தில் நம்மை பற்றிக்கொள்ளும் கர்மவினை இதுவாகும். இந்த வினைப்பயனாவது தொடர்ந்து வரும் பிறவிகளிலும் செயல்படும். அதாவது இந்த சஞ்சிதகர்மாவினால் உண்டாகும் வினைப்பயன் முழுதும் இப்பிறவியில் செயல்படாமல் அனைத்து பிறவிகலுக்குமானதாய் இது இருக்கும்.
இரண்டாவதான "பிராப்த கர்மா" எனப்படுவது இப்பிறவியில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சஞ்சித கர்மாவின் ஒரு பகுதியாகும். அதாவது நாம் இப்பிறவியில் உடலெடுத்து வாழுங்காலத்தில் நம் ஜீவிதத்திற்க்காக நாம் செய்யும் வினையின் காரணமாக பிறருக்கு ஏற்படும் நன்மை தீமைகளால் உண்டாகப்போகின்ற கர்மவினை, இந்த கர்மாவால் விளையும் பலனையும் நாம் இப்பிறவியிலேயே அனுபவிக்க வேண்டி வரும்.
மூன்றாவதாக "ஆகாமிய கர்மா" எனப்படுவது இப்பிறவியில் நாம் வாழுங்காலத்தில் நம் ஆசைகளால் (காம, குரோத, லோப, மத மற்றும் மாச்சர்யங்களால்) பிற உயிர்களுக்கு நேரடியாக செய்யும் அல்லது மறைமுகமாக செய்யும் நன்மை தீமைகளின் தொகுப்பாகும். இந்த வினைகளின் பலனை இப்பிறவியிலேயே அடையலாம் அல்லது நமது சஞ்சித கர்மத்தோடு சேர்க்கப்பட்டு எதிர்வரும் பிறவிகளிலும் அனுபவிக்க நேரிடலாம்.
இவ்விதமாக மூன்று விதமான கர்மங்களும் அதற்குண்டான வினைகளும் நம்மை என்றும் சூழ்ந்துள்ளன என்பதை மறவாதீர். இந்த கர்மவினை சங்கிலிப் பிணைப்பிலிருந்து யாரும் தப்பிவிட இயலாது. அனைத்து உயிர்களும் ஆத்மாக்களும் கர்மவினையில் சிக்கி உழன்றாக வேண்டியதுதான்.
நாம் நம் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், விரயங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், முடக்கங்கள், நோய்கள், கஷ்டங்கள், துன்ப துயரங்கள். அதேபோல சந்தோசங்களும், இன்பமும், செல்வமும், நல்தொழிலும், ஆரோக்கியமும், நல்வாழ்வும் என இவையனைத்துமே மேற்குறிப்பிட்ட கர்மவினைகளின் பலன்களாகும். இந்த கர்மாவை களைய நம்மில் பலர் பல ஆலயங்களுக்கு சென்று பலவிதமான பரிகார நிவர்த்திகளை செய்தும் வினைப்பலன் மாறவில்லை, நம் வேதனை தீரவில்லை, கடன்களும் குறையவில்லை. அப்படியென்றால் நம் கர்மவினையை தீர்க்க வழியே இல்லையா.?
சரி ஜோதிடத்தின் வாயிலாக சற்றே கர்ம ஸ்தானகளைப் பற்றியும் அவற்றின் செயல்பாட்டையும் அலசுவோம். ஜோதிட சாஸ்த்திரத்தில் சஞ்சித கர்மாவைக் குறிக்கும் ஸ்தானங்கள் 1, 5 ,9 ஆகிய திரிகோண இராசிகளாகும். இந்த சஞ்சித கர்மத்தின் பலனை தேவாதி தேவர்கள் கூட அனுபவித்தே தீர வேண்டுமென்கிறது கர்ம சாஸ்த்திரம். ஏனென்றால் 1ம் இடம் லக்கினம், ஒருவருடைய உருவ அமைப்பு, குணாதிசயம், செயல்படும் திறன், தலைமைப் பண்புகள் இவைகளை குறிப்பிடும் இடம் லக்கினமாகும். இதை விளக்கி கூறினால் யாரொருவரும் பிறக்கும் போதே விஞ்ஞானியாகவோ, கண்டுபிடிப்பாளராகவோ அல்லது உலக பெரும் பணக்காரனாகவோ பிறக்க இயலாது, விரும்பிய உடலமைப்போ முக அமைப்போ தீர்மானித்து பிறக்க இயாலாதல்லவா, எனவே சஞ்சித கர்மாவையும் மாற்ற இயலாது, பிறப்பிடம், தாய் தந்தை, உடலழகு இவையனைத்தையும் இதுவே தீர்மானிக்கும். அதேபோல 5ம் இடமென்பது புத்திர மற்றும் அதிர்ஷ்ட ஸ்தானம், இதை சொல்ல வேண்டுமெனில் யாராலும் தனக்கு விரும்பிய நிறம், குணம், மனம் கொண்டு குழந்தை பெற்றுக்கொள்ள இயலாதல்லவா, அதுபோலவே அதிர்ஷ்டமென்பதும் நம் கையில் இல்லை தானே. இவ்விரண்டு இடங்களைப் போலவே 9ம் இடம் பூர்வ புண்ய ஸ்தானமாகும் நம் பரம்பரையை குறிப்பிடுவதாகும், இதை எடுத்துக் கொண்டோமானால் எந்தவொரு ஆன்மாவாவது இன்னார்க்கு மகனாக இன்னாருடைய வம்சத்தில் பிறக்க வேண்டுமென்று தீர்மானித்து பிறக்க இயலுகிறதா, இல்லவே இல்லைதானே. அதனாலே தான் இந்த 1, 5, 9ம் பாவங்கள் (சஞ்சித கர்மா) தரும் பலன்களை தேவாதி தேவர்களும் மாற்ற இயலாது என்கின்றனர். இதனை நாம் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.
ஜோதிட சாஸ்த்திரத்தில் பிராப்த கர்மாவிற்குரிய ஸ்தானகளாக 4, 7, 10 ம் பாவங்கள் ஆகிய கேந்திர இராசிகளாகும். இதில் 4ம் இடம் சுகஸ்தானம், அதாவது ஒருவர் நன்றாக சாப்பிட்டேன், நிம்மதியாக தூங்கினேன் என்பதில் ஆரம்பித்து வீடு, வாசல், வாகனம், செல்வம், சொத்துபத்து எனும் வாழ்வில் அடையும் அனைத்து இன்பங்களுக்கும் காரணம் சுகஸ்தானமே ஆகும். 7ம் இடம் என்பது களத்த்திர ஸ்தானம், இதுதான் உங்களின் வாழ்க்கைத்துணை அவரால் அடையும் இன்பம் முதலியவற்றைக் குறிக்கும். 10ம் இடமானது கர்ம ஸ்தானம் ஆகும், அதாவது தொழில் ஸ்தானம், இது உங்களின் தொழில் வியாபாரம் அதனால் உண்டாகக் கூடிய வருமானம் சுகம் முதலியவற்றைக் குறிக்கும். ஜோதிட சாஸ்த்திரப்படி இந்த பிராப்த கர்மா ஸ்தானங்களில் ஏற்படும் கர்மரீதியான கெடுபலன்களை சரியான பரிகாரங்களை செய்வதின் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இவற்றைப் போலவே ஆகாமிய கர்மாவிற்க்குரிய ஸ்தானங்களாக ஜோதிட சாஸ்த்திரம் குறிப்பிடுவது 2, 8, 11ம் பாவங்களான கர்ம இராசிகளாகும். இதில் 2ம் இடம் தன, குடும்ப மற்றும் வாக்கு ஸ்தானமாகும். 8ம் இடம் யோகஸ்தானம் எனவே இது புதையல், அதிர்ஷ்டம், லாட்டரி, ரேஸ் போன்ற எதிர்பாராத நிலையில் அடையும் நன்மைகளாகும். 11ம் இடம் லாபஸ்தானமாகும். இந்த மூன்று பாவங்களும் ஒருவரின் செல்வ செழிப்பை நிர்ணயிக்கும் சக்தி படைத்தவை. இவற்றில் ஏதேனும் கர்மவினை பாதிப்புகள் இருந்தால் உரிய பரிகாரங்கள் செய்து கொள்வதினால் பலன் உண்டாகுமென ஜோதிடம் சொல்கிறது.
கர்மாவும் தெய்வமும் :
கர்மாவும் தெய்வமும் :
உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவரவர்களின் கர்மவினையை இயக்கும் கர்மதெய்வம் ஒன்று உண்டு. அந்த கர்ம தெய்வத்தின் தாள் பற்றி தொழுது வந்தாலே கர்மவினையால் விளையும் கெடுபலன் குறைந்து நன்மைகள் நடக்கத் துவங்கும். நமக்கு வரும் கர்மவினை பலங்கள் நம்முடைய எந்த தவறினால் வந்தது யாருக்கு எந்த வகை தீமை செய்ததால் வந்தது என்றறிந்து அதற்கு இப்பிறவியில் எந்த வகையான பூஜைகள், தானங்கள், பரிகார நிவர்த்திகள் செய்ய வேண்டுமென்பதையும் எப்படி செய்ய வேண்டுமென்பதையும் பற்றி இனி விரிவாக காண்போம்.
நாளைய தலைப்பு..#காலபுருஷதத்துவமும் கர்மாவும்
மீண்டும் …நாளை ….தொடர்வோமா?
என்றும் அவன் அடிமை
பாலசுப்ரமணியன்
9176256190
என்றும் அவன் அடிமை
பாலசுப்ரமணியன்
9176256190
No comments:
Post a Comment