Friday, October 4, 2019

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..1

#கடவுளும் பிரபஞ்சமும் கர்மவினையும் :
இங்கு நாம் அனைவரும் முதலில் கடவுள் தன்மையையும் பிரபஞ்ச இயக்கத்தையும், #கிரகங்களின் #சஞ்சாரத்தையும் முழுமையாக அறிந்துகொள்வது அவசியமாகிறது. இந்த பூவுலகத்தில் எத்தனை கோடி பிறப்புகள் உயிர்வாழ்கின்றன, அத்துனை கோடி ஜீவராசிகளுக்கும் இந்தந்த விநாடியில் இந்த பலன் தான் நிகழ வேண்டுமென்று படைத்த #பிரம்மாவோ காக்கும் #விஷ்ணுவோ உட்கார்ந்து தீர்மானித்துக் கொண்டிருக்க இயலுமா.?
இயலாது என்பதே உணமை. சரி அப்படியென்றால் நமக்கு உண்டாகும் இன்பமோ துன்பமோ எப்படி நம்மை வந்தடைகிறது. ஒன்று புரிந்து கொள்ளவும், நம் முன்னோர்களும், #சித்தர் பெருமக்களும் மற்றும் #ஞானிகளும் முட்டள்தனமாக எந்த விஷயத்தையும் சொல்லிச் செல்லவில்லை, நாம் தான் சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே நிதர்சனம்.


"நன்மையும் தீமையும் பிறர்தர வாரா"
உங்களுக்கு உண்டாகும் #நல்ல பலன்களும், தீய பலன்களும் பிறரால் உங்களுக்கு வந்ததல்ல, இவை அனைத்துமே நீங்கள் உண்டாக்கியது தான். புரியும்படி சொன்னால் கடந்த #பிறவிகளில் நீங்கள் செய்த #பாவ #புண்ணியங்களின் வித்தே இப்பிறவியில் கர்மவினை என்ற பெயரில் வினைப்பயன் எனும் #விருட்சமாக வளர்ந்து உங்களை வந்தடைகிறது.

இன்னும் சற்றே விளக்கமாக பார்தோமேயானால், கடந்த பிறவிகளில் செய்த #தொழிலில் நீங்கள் செய்த பாவம் அல்லது #புண்ணியம் இருக்குமானால் இப்பிறவியில் தொழிலின் வாயிலாக அந்த பலனை திரும்ப பெறுவீர்கள். அதாவது முற்பிறவியில் #தொழில் வஞ்சம் புரிந்திருந்தால் இப்பிறவியில் தொழில் அமையாமை, தொழிலில் விருப்பமில்லாமை, #தொழிலில் #நஷ்டம், #கடன், பழி மற்றும் அவமானங்களை சந்தித்தல் போன்ற அவதிகளை அடைய நேரிடும். இதே முற்பிறவியில் நல்முறையில் தொழில் செய்திருந்தால் இப்பிறவியில் தொழில் இடையூறு இல்லாமல் வாழலாம். கடந்த பிறவியில் தம்பதியருக்குள் பாவம் செய்திருந்தால் இப்பிறவியில் அவர்கள் மூலமே துன்ப துயரங்கள் மிகுந்திருக்கும். இவ்வாறே உடலில் உண்டாகும் தீராத வியாதிகளும் கூட கர்ம வினையினால் உண்டான தொந்தரவே! இதன்மூலம் நம்முடைய #சுகதுக்கங்கள் தீர்மானிக்கப்படுவது கடந்த பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியங்களினால் எழுந்த கர்மவினையே என்பது உறுதியாகிறது.
நாளைய தலைப்பு...#கர்மாவும் #பிரபஞ்சமும் ஜோதிடமும்
மீண்டும் …நாளை ….தொடர்வோமா?
என்றும் அவன் அடிமை
பாலசுப்ரமணியன்
9176256190

No comments:

Post a Comment

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...