#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3
#காலபுருஷதத்துவமும் கர்மாவும் :
கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச இராசிகளென வகை படுத்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நாம் செய்த பாவ புண்ணியங்களை எந்த வகையில் யாருக்கு செய்தோம் அதன் விளைவாக இப்பிறப்பில் நாம் என்னென்ன யோகங்களை அல்லது தோஷங்களை அனுபவிக்கிறோம் என்பதை எல்லாம் இந்த கால புருஷ தத்துவ இராசிகளை கொண்டு நாம் கணித்து அறிய முடியும். இதில் இராசி நிலைகள் குறிக்கும் தத்துவ நிலைகளை இணைபில் வரும் படம் விளக்கும்.
தர்மத்தில் நல்லது கெட்டது என இரண்டு வகையுண்டு. உதாரணத்திற்கு கோவில் திருவிழாவில் அன்ன தானமிடுவதையும், ஆபாச நடன கச்சேரி வைப்பததையும் சொல்லாம், நாம் செய்யும் தர்மம் பிறரை வாழ வைக்கவும் நல்வழிப்படுத்தவும் அமையுமானல் அது நல்ல தர்மமாகும். அதுவே நம் தர்மம் பிறரை கெடுத்தால் அது பாவக் கணக்காகவே நம்மிடம் சேர்ந்துக் கொள்ளும்.
கர்மம் என்பது தொழிலை குறிக்கும். பிறருக்கு தீங்கு நேரா வண்ணமும் நன்மை தரும்படியும் நம் தொழில் அமைந்தால் அதன் பலனாக யோகத்தையும், நற்பலன்களையும், நல்ல சந்தோஷமான வாழ்வும் அமையும். இதே நியாய தர்மங்களை புறந்தள்ளி விட்டு நாம் செய்யும் தொழிலின் வாயிலாக பிறருக்கு தீமை செய்தால் அதன் விளைவாக கெடுபலன்களையும், கொடிய தோஷங்களையும் பெற்று துன்பகரமான வாழ்வு அமையும்.
இங்கு காமம் என்பது ஆசையை குறிப்பதாகும். ஆசைகளிலே நல்லதுமுண்டு, தீயதுமுண்டு. நல்வழியில் பொருளீட்டி செல்வந்தனாகி குடும்பத்தை காப்பற்ற வேண்டுமென்பது நல்ல வகைப்பட்ட காமம். பிறன் மனையாளை தீண்டியே தீர வேண்டுமென்ற ஆசை கெட்ட காமமாகிறது. இதன் படியே நம் வாழ்வின் அனைத்து பலாபலன்களும் உருவாகின்றன.
மோட்ச இராசிகள்: #கடகம், #விருச்சிகம், #மீனம்.
நம் மூதாதையர்களை அவர்கள் வாழும் காலத்தில் நல்லவிதமாக வாழவைத்து அவர்கள் இறந்தால் உரிய சடங்குகள் செய்து வருடந்தோறும் திதி தர்ப்பணம் முதலியவற்றை செய்து வாழ்வது நல்மோட்சமாகும். இதுவே பெரியோர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களை உதாசீனப்படுத்துவதும், உணவளிக்காமலிருப்பதும், மருத்துவம் பார்க்கமல் நோயால் தவிக்க விடுவதும், இறுதி சடங்குகள் செய்யாததும், திதி தர்ப்பணம் தராததும் நம் முன்னோர்களை மோட்சமடையாமல் தடுக்கும். இதுவே நம் வாழ்வில் துன்பங்கள் தோன்றி நம்மை வாட்ட ஏதுவான துர்மோட்சமாகும்.
நம் மூதாதையர்களை அவர்கள் வாழும் காலத்தில் நல்லவிதமாக வாழவைத்து அவர்கள் இறந்தால் உரிய சடங்குகள் செய்து வருடந்தோறும் திதி தர்ப்பணம் முதலியவற்றை செய்து வாழ்வது நல்மோட்சமாகும். இதுவே பெரியோர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்களை உதாசீனப்படுத்துவதும், உணவளிக்காமலிருப்பதும், மருத்துவம் பார்க்கமல் நோயால் தவிக்க விடுவதும், இறுதி சடங்குகள் செய்யாததும், திதி தர்ப்பணம் தராததும் நம் முன்னோர்களை மோட்சமடையாமல் தடுக்கும். இதுவே நம் வாழ்வில் துன்பங்கள் தோன்றி நம்மை வாட்ட ஏதுவான துர்மோட்சமாகும்.
மேற்கண்ட இராசிகளில் உள்ள கிரகங்களின் தன்மையை பொறுத்து நாம் முற்பிறவிகளில் செய்த பாவ புண்ணியங்களின் சாரத்தை அறிந்து கொள்ளலாம். இந்த கட்டங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து தோஷங்களை தருமானால் அது நம் முற்பிறவியில் நாம் செய்த பாவம் என்று அறிக. தகுந்த பரிகாரங்கள் செய்வதன் மூலம் இந்த தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
"எழாமல் வாசனையை கொன்றோன் ஞானி
ஏகாமல் வாசனையை அடித்தோனே சித்தன்"
-சட்டை முனி நாதர்
இங்கு வாசனை என்பது கர்மவினை, இதன் இயல்பாவது பிறவிதோறும் தொடர்ந்து வருவது. #ஞானியானவன் இப்பிறவியில் இக்கர்மவினை #ஆன்மாவை பற்றா வண்ணம் தடுத்துக்கொள்பவன். ஆனால் சித்தனானவன் எப்பிறப்பிலும் தன்னை #கர்மவினை அனுகாத வண்ணம் விரட்டியடிப்பவன் ஆவான்.
இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும் நம்மில். #பாபா, #சாய்பாபா, #ரமணமகரிஷி, #வேதத்திரிமகரிஷி, #யோகிராம்சுரத்குமார், #பகவான்ரஜனீஷ் (#ஓஷோ), #சுவாமிவிவேகானந்தர் ஆகிய அனைவருமே ஞானிகள் என கொண்டாடப்பட்டவர்கள். இவர்கள் அனைவரும் இப்பிறப்பில் தங்களுடைய கர்மாவின் சூட்சுமத்தை அறிந்து கர்மவினையானது தன்னை பற்றிக் கொள்ளா வண்ணம் தடுத்துக் கொண்டவர்கள். இதை போல நம் சித்தர்கள் கர்மவினை எக்காலத்திலும் எப்பிறப்பிலும் தன்னை பற்றிக்கொள்ள முடியாதபடி விரட்டியவர்கள்.
கட்டுரையின் ஆரம்பத்தில் சொன்னது போல கர்மாவை இயக்கும் தெய்வம் உண்டு, அதை பற்றிக் கொண்டோமானால் கர்மாவில் இருந்து விடுபடலாம், இங்கு ஓர் மிகப்பெரும் உண்மையினை சுட்டிக்காட்டினால் உங்களுக்கு புரியும். கோவில்கள் நிறைந்த கேரளாவில் பிறந்த #ஆதிசங்கரர் எதற்காக தமிழகத்தில் #காஞ்சிபுரம் வந்து காமட்சியை பற்றினார், சிவ #ஸ்தலங்கள் நிறைந்த திருச்சுழியில் பிறந்த #ரமணமகரிஷி எதற்காக #திருவண்ணாமலை ஈசனை பற்றினார், #விவேகானந்தரின் குரு #இராமகிருஷ்ணர் எதற்காக #பத்ரகாளியை பற்றினார். இவர்கள் எல்லாம் யாரை நாம் பற்றிக்கொண்டால் நம் கர்மாவை கட்ட முடியும் என்று உணர்ந்த மகா ஞானிகள். பிறவிப்பயனை அடைந்து விடவும் இன்னல்களை தீரவும் தொழ வேண்டிய தெய்வ இரகசியத்தை தெரிந்து கொண்டவர்கள். ஆனால் இவர்கள் அறிந்து கையாண்ட உண்மையை இவர்களின் வழிவந்த சீடர்களுக்கோ பக்தர்களுக்கோ சொல்லித்தரவில்லை. தற்போதுள்ள ஞானிகளும் இந்த உண்மையினை உணர்ந்து தான் தங்களின் கர்ம #அதிதெய்வம் உள்ள இடங்களில் பீடம் அமைத்து பூஜித்து வாழ்வில் வளமடைகின்றனர். பக்தர்கள் மேலும் மேலும் அங்கு சென்று பூஜைகள் யாகங்கள் செய்வதால் சக்தி பலமடங்கு பெருகி அவ்விடம் சிறக்கிறது. அவர்களும் உயர்கிறார்கள். ஆனால் அங்கு வழிபட்ட உங்கள் கர்மா மறியதா.?
கர்ம தெய்வத்தினை பற்றி இன்னும் புரியும்படி சொன்னால், நம் நண்பர்களின் அன்னையரை நாம் அன்னையாகவே பாவிப்போம், வயது முதிர்ந்த பெண்களை அம்மா என்றே அழைப்போம். நண்பனின் இல்லம் சென்றால் ஒருவேளை உணவும் தேனீரும் நிச்சயம் கிடைக்கும், விஷேச நாட்கள் எனில் இரண்டொரு நாட்கள் கூட கிடைக்கும். ஆனால் தினந்தோறும் நண்பனது அம்மாவிடம் உணவு கிடைத்து விடுமா?. நீயும் எனக்கொரு பிள்ளை மாதிரி என்றுகூட சொல்லி இருப்பார்கள், ஆயினும் நிரந்தரமில்லை. ஏதேது விட்டால் ஆஸ்தியில் பங்கு கேட்பான் போல என்று துரத்தப்படுவோம். மாறாக நம்மை பெற்ற அன்னையிடம் அதை நாம் எதிர்பார்க்கலாம், தன் குருதியை பாலாக்கி தந்தவள் அல்லவா அவளது அனைத்துமே நாம் தானே. அது போலவே நாம் வழிபடும் தெய்வங்களும் அந்த நாளைக்கோ அந்த வேளைக்கோ பலன் தரலாம் ஆயுள் முழுவதும் நிரந்தர பலன் தர இயலாது, அந்த நற்பலன்களை தருவது இப்பிறவியில் உங்களது கர்மாவினை இயக்கி ஆளும், மேலும் ஈன்ற அன்னையை போல உங்களை படைத்து வழி நடத்தக்கூடிய கர்ம அதிதெய்வம் மட்டுமே.
நண்பர்களே, கர்மாவை பற்றியும் கர்மவினையின் இயக்கங்களை பற்றியும் ஜோதிட ரீதியில் கர்மவினைகளை எவ்வாறு கண்டுணர முடியும் என்பதெல்லாம் விரிவாக பார்த்தோம். இருப்பினும்
"குரு தொட்டுக்காட்டாத வித்தை சுட்டுப்போட்டாலும் வராது"
மற்றும்
"குருவருள் இன்றி திருவருள் வாய்க்காது"
என்பதனை உணர்ந்து குருவின் ஆலோசனை பெற்று கர்ம வினை பரிகார நிவர்த்தி செய்து கொள்வது நலம். இதைபற்றி மேலும் அறியவும் தகுந்த இலவச ஆலோசனைகளை பெறவும் தொடர்பு கொள்ளவும்
பாலசுப்ரமணியன்
9176256190
9176256190
கர்மவினை பலன்களை கொடுக்கும் பணியை #நவகிரகங்கள் செய்கின்றன, நவ கிரங்களையும் இயக்கும் #அதிதெய்வங்கள் உண்டு, நவ கிரகங்களை வழிபடுவதால் எந்த பலனையும் நவ கிரகங்கள் தாமாக மாற்றிவிட இயலாது, நவ கிரகங்களை இயக்கும் அதிதெய்வங்கள் மட்டுமே உங்கள் கர்ம பலனை மற்ற இயலும். இங்கு ஒரு உண்மையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எந்த சித்தர்களும், ஞானிகளும் வந்து நவ கிரகங்களை வழிபடவில்லை என்பது உண்மைதானே.