Tuesday, May 22, 2012

கடமைக்காக கோவிலுக்குச் செல்லாதீர்

கடமைக்காக கோவிலுக்குச் செல்லாதீர்!

 

“ஆடு காண், போகுது பார்…’ என்றார் ஒரு சித்தர். அப்படி என்றால் என்ன? ஆடு போகுது, அதைப் பார் என்று சொன்னாரா? இல்லை. சித்தர்கள் சொல்வ தெல்லாம் மக்களின் நன்மைக்குதான். ஆடு என்றால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடு;
காண் என்றால் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய், பகவானை தரிசனம் செய் என்று அர்த்தம். இப்படிச் செய்வதை, “போகுது பார்’ என்றனர். போகுது பார் என்றால், புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, கோவில்களுக்கு சென்று, பகவானை தரிசனம் செய்தால், பாவங்கள் தொலையும் என்று பொருள் கூறினர்.
நமக்கு அதில் ஈடுபாடு உண்டு தான். ஒரு டூரிஸ்ட் பஸ் கிளம்புகிறது. மூன்று நாட்களில், 40 ஸ்தலங்கள் என்கின்றனர். அவர்கள் சொல்லும் பணத்தைக் கொடுத்துவிட்டு அதில் செல்கிறோம். போகும்போதே நமக்கு கோவில், தெய்வ தரிசனம் இவைகளில் புத்தி போகிறதா? “அடுத்து நல்ல ஓட்டல் எப்போது வரும், பஸ் நிற்கும் இடத்தில் உள்ள ஓட்டலில், காபி நன்றாக இருக்குமா, மசால் தோசை கிடைக்குமா?’ என்று தான் யோசனை போகிறது.
எப்படியோ, ஒரு கோவில் வாசலை பஸ் அடைந்து விடுகிறது. உடனே எல்லாரும் இறங்குவர். “சார்… பஸ் இங்கே அரை மணி நேரம் நிற்கும். அதற்குள் கோவிலுக்குப் போய்விட்டு வந்து விடுங்கள்…’ என்பார் பஸ் கண்டக்டர். பஸ்சிலிருந்து இறங்கியவர்கள்,
முதலில், டாய்லெட் எங்கே இருக்கிறது என்று தேடுவர். அது முடிந்ததும், நல்லதா ஒரு காபி சாப்பிட வேண்டும் என்று தோன்றும். நல்ல ஓட்டல் எங்கே இருக்கிறது என்று தேடி போவர்.
காபி, டிபன் சாப்பிட்டுவிட்டு கோவிலுக்குள் போகிறவர், வெளியில் உள்ள குளத்தில் கொஞ்சம் தண்ணீர் எடுத்து, தலையில் தெளித்து; அவசர அவசரமாக போவர். இவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் சன்னிதி திறந்திருக்கும்; சுவாமி தரிசனம் செய்வர். அதிர்ஷ்டம் இல்லாவிட்டால், சன்னிதியில் திரை போட்டிருக்கும். “திரை விலக ஒரு மணி நேரமாகும்…’ என்று குருக்கள் சொல்வார்.
சரி… அவ்வளவு நேரம் இருக்க முடியாது என்று, திரையை தரிசனம் செய்துவிட்டு வெளியே வருவர். இதற்குள் பஸ் டிரைவர் மூன்று, நான்கு தடவை ஹாரன் அடிப்பார். கோவிலுக்கு வந்தவர்கள், அவசர அவசரமாக ஓடி வந்து பஸ்சில் உட்கார்ந்து விடுவர். பஸ் டிரைவரும், கண்டக்டரும் இலவச டிபன், காபி சாப்பிட்டு வந்திருப்பர்.
உடனே, பஸ்சை ஸ்டார்ட் செய்து, எல்லாரும் வந்தாச்சா என்று கேட்டு, பஸ்சை கிளப்பி விடுவர். இப்படி டூர் போனால், ஆடாவது காணாவது, பாவம் போவதாவது! எந்த ஷேத்திரத்துக்குப் போனாலும் அங்கே மூன்று நாட்கள் தங்க வேண்டும் என்பது சாஸ்திரம். இந்தக் காலத்தில் இது சாத்தியமா? எல்லாமே அவசரம் தான்!

1 comment:

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...