Sunday, December 29, 2013

கடகம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்






கடக ராசிக்காரர்களே, 2014 உங்களுக்கு ஒரு கலவையான பலன்களை அளிக்கப் போகிறது. 2014 ஜாதகத்தின்படி, முதல் அரையாண்டில் நீங்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். ராகுவும் சனியும் நான்காவது வீட்டில் இருப்பது உங்கள் மன அமைதியைப் பாதிக்கக் கூடும். 2014 ஜாதகத்தின்படி குடும்ப வாழ்க்கையால் நீங்கள் அழுத்தத்திற்கு ஆளாகக் கூடும். 2014-இல் நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் இலகுவாகப் பழக முடியாத சூழ்நிலை உருவாகும். அதனால் உங்கள் அழுத்தம் அதிகரிக்கும். உங்களுடைய ஆரோக்கியம், வேலை, படிப்பு மற்றும் பிரயாணம் ஆகியவற்றிற்கு இது உகந்த சமயம் அல்ல. இப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து நீங்கள் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 2014 ஜாதகத்தின்படி உங்களுக்குப் பணிமாற்றம் ஏற்படவும் வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. தேவையற்ற பயணத்தைத் தவிர்ப்பதுடன் மேலதிகாரிகளிடம் வீண் விவாதங்களில் ஈடுபடாமல் இருப்பதும் நல்லது. இருப்பினும், வருடத்தின் இரண்டாம் பகுதி சிறப்பானதாக இருக்கும். மெல்ல மெல்ல உங்கள் பிரச்சினைகள் குறையும். 2014 ஜாதக கணிப்பின்படி மத சம்பந்தமான மற்றும் ஆன்மீக நடவடிக்கைகள் உங்களுக்கு சமாதானத்தைக் கொண்டுவரும். வருடத்தின் பின் பாதியில், உங்கள் கல்வித்தகுதி உயர்வதோடு மேற்கல்வி முயற்சிகள் வெற்றி பெரும். ஒரு பசுங்கன்றுக்கு அதன் தாயின் பாலுடன் சாதத்தைக் கலந்து தருவது உங்கள் பிரச்சினைகளைத் தடுத்து நிறுத்தும்.

மிதுனம் இராசிக்குரிய 2014 ஜோதிடப்பலன்கள்


 



மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வருடம சாதகமானதாக இருக்கும் என்று 2014 ஜாதகக் கணிப்பு சொல்லுகிறது. உங்கள் குடும்பத்தில் முக்கியமான நிகழ்வுகள் இந்த 2014-ஆம் வருடத்தில் நடைபெறும். இல்லத்தில் திருமணம் அல்லது குழந்தை பிறப்பு நிகழ வாய்ப்புள்ளது. இருப்பினும், உங்கள் ஆரோக்கியத்தின் மேல் ஒரு கண் வையுங்கள். பெரிய நோய்கள் எதுவும் வராது என்றாலும், பருவகால நோய்கள் சில நேரங்களில் தொல்லை தரக்கூடும். காதல் தொடர்பான விஷயங்களில் பிடிவாதம் தேவையில்லை என்று 2014 ஜாதகக் கணிப்பு சொல்லுகிறது. இல்லாவிட்டால், உங்கள் காதல் துணைவர் மற்றொருவரை நாடிச் செல்ல வாய்ப்புள்ளது. உங்களுடைய 2014 ஜாதகத்தின்படி நீங்கள் உங்களிடமிருந்து மாறுபட்ட சமுதாயத்தில் ஒருவரிடம் ஈர்க்கப்படுவீர்கள். வேலை மற்றும் தொழிலுக்கு இது நல்ல நேரம். வேலையில்லாமல் இருந்த நிலை மாறி வேலை கிடைக்கும் அல்லது பதவி உயர்வு கிடைக்கும். நிதிநிலைமை சாதகமாக இருக்கும். 2014 ஜாதகக் கணிப்பின்படி, வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். ஆபத்தான முதலீடுகளிலிருந்து விலகியிருங்கள். மாணவர்களுக்கு, 2014 சிறப்பானது. 2014 ஜாதகத்தின்படி மேற்படிப்புக்கு இது மிகச் சரியான நேரம். ஒரு கோயிலுக்கு பாதாம் பருப்புகளை தானமாகக் கொடுப்பது இந்த ஆண்டில் நல்ல பலன்களை அளிக்கும்.

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...