Saturday, November 2, 2013

பெண்ணாசை

மனிதனுக்கு இருக்க கூடாத குணங்களாக மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என பெரியவர்கள் சொல்வார்கள்.எல்லாவற்றையும் விட ஒரு மனிதனை வீழ்த்துவது பெண்ணாசைதான்.

புராணத்தில் சொல்லப்பட்ட ராவணன்,12 உலகத்துக்கு தலைவன்,5 கிரகங்கள் உச்சம் பெற்றவன்,சிறந்த சிவ பக்தன் அப்படிபட்டவன் வீழ்ந்தது சீதை என்ற பெண்ணினால்தான்.ராமனை பழிவாங்க தூக்கிவரப்பட்ட சீதை,அவர் மீது சபலப்பட்டதால் அதாவது அடுத்தவர் மனைவி மீது ஆசைபட்டதால் நேர்மையும்,பண்பும் கொண்ட ராவணன்,எல்லா சூழ்ச்சிகளும் செய்யக்கூடிய ராமனிடம் வீழ்ந்தான்.

பெண்ணாசை கொண்ட மனிதனுக்கு,ஆபத்து நேரத்தில் யாரும்
துணை வரமாட்டார்கள்.எவ்வளவு புகழ்,செல்வாக்கு இருந்தாலும் அவனது நிலை தலைகீழாகிவிடும்.

இன்னும் சொல்லபோனால் ஒருவன் மிகப்பெரிய பிரச்சினையில் சிக்கும்போது,அவனுக்கு உதவ எல்லோரும் முன் வரும்போது,பிரச்சினையை மற்றொருவனிடம் கேட்டால் ஏதோ பெண் பிரச்சினையாம்(லேடீஸ் மேட்டர்) அப்படி என்கின்ற ஒரு வார்த்தை,அவன் பக்கம் இருக்கும் நியாயம்,நீதி,நேர்மை,புகழ் எல்லாவற்றையும் சரித்துவிடும்.உதவ வந்தவர்களும் பின் வாங்கிவிடுவார்கள்.

எதையும் எளிதாக தொடர்புகொள்ளமுடியும் இந்த காலத்தில் ஆணாக இருந்தாலும்,பெண்ணாக இருந்தாலும் சுயகட்டுபாட்டுடன் இருக்கவேண்டும்.மனதில் இருக்கும் கவலைகளையும்,சஞ்சலங்களைடும் குறைப்பதற்கு எதிர்பாலினருடன் அந்தரங்க விசயங்களை பகிர்ந்துகொள்வது நனமையை கொடுக்காது.மேற்கொண்டு தீமையைத்தான் கொடுக்கும்.

உடலெனும் பிரபஞ்சம்... பிரபஞ்சம்

ஐம் பூதங்களின் மொத்த உருவே பிரபஞ்சம். இதுபோல் மனித உடலும் ஐம் பூதங்களால் ஆன சிறிய பிரபஞ்சம் என்கிறார்கள் சித்தர்கள். இதைத்தான் அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்கின்றனர்.

இந்த பஞ்ச பூதங்கள் எவ்வாறு மனித உடலை தீர்மானிக்கின்றன, அவற்றின் செயல்பாடுகள் என்ன என்பதை விரிவாக அறிந்துகொள்வோம்.

மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவையே பஞ்ச பூதங்கள்.

இவையனைத்தும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவானது தான் மனித உடல் எனும் பிரபஞ்சம்.

நிகழ்ந்த சீர்ப் பிருதிவியும் அப்பு நானும்

நேரான தேயுவோடு வாயுமாகும்

அகழ்ந்தவா காயத்தோ டைந்து பூதம்

அரிதான பிருதிவியு மண்ணு மாகும்

தகழ்ந்தவப்பு சலமாகும் நெருப்பாற் தேயு

தாக்கான வாயுவது காற்றுமாகும்

இகழ்ந்தவா காயமது சத்தமாகும்

ஏற்றபிரு திவியும் பொன்னிறமதாமே

யூகி வைத்திய சிந்தாமணி

மண்ணின் கூறுகள்

மண்ணை பிருத்திவி என்று அழைக்கின்றனர். எலும்பு, தோல், நரம்பு, தசை, மயிர் இவை அனைத்தும் மனித உடம்பின் மண் கூறு கொண்டவை.

பிருத்திவியில் பிருத்திவி அதாவது மண்ணில் மண் சேர்ந்ததால் உருவானதுதான் எலும்பு என்றும், மண்ணுடன் நீர் சேர்ந்து உருவானது தசை என்றும், மண்ணுடன் நெருப்பு சேர்ந்து உருவானது தோல் என்றும், மண்ணுடன் வாயு சேர்ந்து உருவானது நரம்பு என்றும், மண்ணுடன் ஆகாயம் சேர்ந்து உருவானது மயிர் என்றும் குறிப்பிடுகின்றனர்.

நீரின் கூறு (புனலின் கூறு)

நீரின் தன்மை கொண்டவை இரத்தம், விந்து (வெந்நீர்), சிறுநீர், மூளை, கொழுப்பு. நீரினை புனல் என்று அழைக்கின்றனர். நீருடன் நீர் சேர்ந்து வெளியேறுவது சிறுநீர் என்றும், நீருடன் மண் (பிருத்திவி) சேர்ந்து உருவானதுதான் உமிழ்நீர் என்றும், நீருடன் நெருப்பு சேர்ந்துதான் வியர்வையானது எனவும், நீருடன் வாயு சேர்ந்துதான் இரத்தம் (குருதி, செந்நீர்) உண்டானது எனவும், நீரின் கூறுடன் ஆகாயம் சேர்வதால் உருவானதுதான் சுக்கிலம் எனப்படும் விந்து எனவும் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நெருப்பின் கூறு

உணவு, தூக்கம், அச்சம், சேர்க்கை, சோம்பல் முதலியவை நெருப்பின் கூறாகும். நெருப்பை தேயு (தீ) என அழைக்கின்றனர்.

நெருப்பு கூறுடன் நெருப்பு சேரும்போது தூக்கம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் மண் சேரும் போது பசி உருவாகிறது எனவும், நெருப்புடன் நீர் சேரும்போது தாகம் ஏற்படுகிறது எனவும், நெருப்புடன் வாயு சேரும்போது அச்சம், சோம்பல் உருவாகிறது எனவும், நெருப்புடன் ஆகாயம் சேரும்போது ஆசை, சேர்க்கை உருவாகிறது எனவும் குறிப்பிடுகின்றனர்.

வளியின் (காற்று) கூறு

ஓடல், நடத்தல், நிற்றல், உட்காருதல், படுத்தல்.

வாயுவுடன் வாயு சேரும்போது ஓடுதல் நடைபெறும் என்றும், வாயுவின் கூறுடன் மண் (பிருத்திவி) சேரும்போது படுத்தல் எனவும், வாயுடன் நீர் சேரும்போது நடத்தல் நடைபெறும் என்றும், வாயுவுடன் நெருப்பு இணையும்போது உட்காருதல் நிகழும் என்றும் வாயுவுடன் ஆகாயம் சேரும்போது தாண்டுதல், குதித்தல் நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

விண்ணின் (ஆகாயம்) கூறு

இன்பம் (காமம்), உட்பகை (குரோதம்), ஈயாமை (உலோபம்), பெருவேட்கை (மோகம்), கொழுப்பு (மதம்)

விண்ணின் தன்மையுடன் ஆகாயம் சேரும்போது மோகம் உண்டாவதாகவும், ஆகாயத்துடன் மண் சேரும்போது இராகம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் நீர் சேரும்போது துவேசம் ஏற்படுவதாகவும், ஆகாயத்துடன் நெருப்பு இணையும்போது பயம் உருவாவதாகவும், ஆகாயத்துடன் வாயு சேரும்போது நாணம் ஏற்படுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

மனித உடலில் ஐம்பூதங்களின் செயல்பாடுகளை சித்தர்கள் இவ்வாறு விளக்கியுள்ளனர்.

மண்ணின் தன்மையால் மயிர் வளர்கிறது. எலும்பு வலுவடைகிறது. நரம்புகள் அதிக வேகத்துடன் செயல்படுகின்றன. தசைகள் இறுக்கம் கொள்கின்றன.

இவ்வாறு பஞ்ச பூதங்களின் செயல்பாடுகளால் தான் மனித உடல் உருக்கொண்டுள்ளதாக சித்தர்கள் கூறுகின்றனர்.

இதே கருத்தையே ஆன்மீகம் தெரிவிக்கிறது. சைவ சமயத்தில் பஞ்ச பூதங்களுக்கும் கோவில்கள் அமைத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மண் (பிருத்திவி)

திருவாணைக்கால் நீர்

திருவண்ணாமலை நெருப்பு

காளஹஸ்தி காற்று

சிதம்பரம் ஆகாயம்.

பஞ்ச பூதங்களையே தெய்வ வடிவமாக வணங்கி வரச் செய்துள்ளனர்.

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா?

நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? 
----------------------------------

விரல்களில் மோதிர விரலில் அணியப்படும் மோதிரம், இருதய நோய், வயிற்றுக்கோளாறுகள் போன்ற வியாதிகளை நீக்குகிறது. ஆண் பெண் இன விருத்தி உறுப்புகளுக்கு சக்தி அளிக்கிறது. சுண்டு விரலில் மோதிரம் அணியக் கூடாது. இதனால் இதயசக்தி ஓட்டம் தடைபடும்.

மேலும் நம்முடைய நான்காவது விரலை ஏன் மோதிர விரல் என்கிறோம் தெரியுமா? அதாவது ஆள்காட்டி விரல் உங்களின் சகோதரங்களை குறிக்கிறது, நடு விரல் உங்களை குறிக்கிறது, மோதிர விரல் உங்களின் வாழ்க்கை துணையை குறிக்கிறது, சிறிய விரல் உங்களின் பிள்ளைகளை குறிக்கிறது பெருவிரல் உங்களின் பெற்ரோளைர குறிக்கிறது.

உங்களின் இரு உள்ளங்கைகளையும் நேருக்கு நேராக இருக்க செய்யுங்கள், நடு விரலை மடித்து ஒட்ட வையுங்கள், மற்றைய விரல்களை நிமிர்த்தி ஒட்ட வையுங்கள்

பெருவிரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பெற்ரோர் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.
பெருவிரலை பழையப்படி ஒட்டி வைத்து சுட்டு விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்க முடியும், அதாவது உங்களின் சகோதரங்கள் உங்களுடன் எப்போதும் இருக்க மாட்டார்கள்

இதுபோல் உங்களின் சிறிய விரலை பிரித்துப்பாருங்கள், பிரிக்கமுடியும், அதாவது உங்களின் பிள்ளைகள் உங்களுடன் எப்போதும் இருக்கமாட்டார்கள்.

ஆனால் உங்களின் மோதிர விரலை பிரித்துப்பாருங்கள், பிரிப்பது மிகவும் சிரமமாக இருக்கும், அதாவது கணவன் மனைவி எப்போதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டும் என்பதற்க்காகவே திருமண சடங்ககுளில் மோதிரம் அணிகிறோம்.

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.
நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு

இதில்,

நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.

மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.

சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.

வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.

யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது.

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...