Monday, August 12, 2013

மச்ச சாத்திரம்-ஆண்களுக்கு



Ø  இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
Ø  நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.
Ø  வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.
Ø  வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.
Ø  வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.
Ø  வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.
Ø  இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.
Ø  இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.
Ø  இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.
Ø  இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.
Ø  இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.
Ø  இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.
Ø  மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.
Ø  மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.
Ø  மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.
Ø  மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.
Ø  மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.
Ø  நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.
Ø  மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.
Ø  மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.
Ø  மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.
Ø  மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.
Ø  வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.
Ø  இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.
Ø  வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.
Ø  இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.
Ø  இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.
Ø  தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.
Ø  கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.
Ø  கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.
Ø  இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.
Ø  வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.
Ø  மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.
Ø  வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.
Ø  வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
Ø  வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.
Ø  தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.
Ø  வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.
Ø  வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.
Ø  இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்
Ø  முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.
Ø  முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.
Ø  முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

ஆண் பெண் வசியம் உண்மையா பொய்யா?


வசியம்


வசியம்
வசியம் என்பது ஐந்து விதங்களிலே செய்யப்படுகின்றது இதனை செய்பவர்கள் தம் முழு நம்பிக்கையும் அதன் மேல் செலுத்தியே செய்கின்றனர். அவ்வைந்து வசியங்களையும் கீழ்வருமாறு நோக்கலாம்.
1. ராஜவசியம்
தேவைப்படும் நபர்களின் பெயர்களைப் பதித்து, அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனும் நோக்குடன் செய்யப்படுகின்றது. அநேகமாக யாரேனும் ஒருவர் எதிரியாக இருந்தால் அவரை தம்முடன் நன்றாகியிருக்க வேண்டுமென வசியம் செய்யப்படும்.
2. லோக வசியம்
இது ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர்.
3. சர்வ வசியம்
இது இந்துக்களின் தெய்வங்களை வசீகரித்தலாகும். அதாவது அசுத்த ஆவிகளான 33 கோடி ஆவிகளையும் வசீகரித்து வைத்து, காரியங்களையும் செய்யும்படிக்கு செய்யும் வசியமாகும். 33 கோடி ஆவிகளையும் வசீகரப்படுத்தினால் மந்திரம் செய்யலாம்.
4. மிருக வசியம்
இது மனிதர்கள் தெய்வங்களை வசீகரப்படுத்தப்படுவதைப்போல மிருக ஜீவன்களையும் வசிகரித்தலாகும். உதாரணமாக எடுத்துக் கொண்டால் மிகவும் கொடூரமான நாய் இருக்கும் வீட்டில் களவு செய்ய வேண்டுமானால் அந்த நாயிலிருந்து தப்பும் முகமாக அதனை வசப்படுத்தச் செய்யும் வசியமாகும்.
5. ஆண் பெண் வசியம்
இது தமது காதல், திருமணம் என்பன தடைப்பட்டிருப்பவர்கள் ஆண் பெணையோ பெண் ஆணையோ வசியம் செய்து தமது காதல் ஆசையை அல்லது திருமணத்தினை நடாத்தும்படி வசியப் படுத்துவதாகும். இவ்வசியம் செய்யவதற்கு குறிப்பிட்ட நபரினதும் பாவனைப் பொருட்கள் தலைமயிர் என்பனவற்றுள் ஏதேனும் இருந்தால் தான் நல்லது இல்லாவிட்டாலும் வசியம் செய்யலாம். இவ்வசிய முறையானது இரண்டு முறைகளிலே செய்யப்படுகின்றது
1. சாதாரண தரம் 2. உயர்தரம்



சாதாரண தரம்
இதனைச் செய்ய நாட்கள் சற்று அதிகம் தேவைப்படும் இதற்கான பொருட்கள் சாப்பாடு, விபூதி, எண்ணெய், என்பவற்றைப் பயன்படுத்தி, சாப்பிடக் கொடுத்தால் அல்லது எண்ணெய் உடுப்புகளில் தேய்த்தால் அல்லது தலைமயிரில் தேய்த்தால் இது நாளடைவில் பலனளிக்கும் .இச்சாதாரணதர வசியமானது சற்று செலவு குறைந்தாக காணப்படுகின்றது.
உயர்தரம்
இவ்விசயம் செய்வதற்கு பணச்செலவானது சற்று அதிகமாகும். ஓர் ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால் அந்த ஆணின் வலது காலில் ஒரு துளி இரத்தம் எடுத்து, அதனை மந்திர வசியம் செய்வதற்காக பயன்படுத்தும் ஐவகை எண்ணெய், மூலிகையுடன் கலந்து இரவு நேரத்திலே, வசியம் செய்பவரினதும் (யாருக்கு) செய்யும்படி சொன்னாரோ அவரின் பெயரையும் உச்சரித்து, மோகினி ஆவியின் பெயரைக் கூறி ஒரு நாளுக்கு 1008 தடவையாக முறையாக 7 நாட்களுக்கு எந்திரம் வைத்து தேசிக்காய் எடுத்து எண்ணெயின் மேல் கொண்டு போகையில் எண்ணெயில் அசைவுகள் தென்படும். (இது ஆண் செய்ய வேண்டும்) இவ்வெண்ணெயினை பெண் சுண்டு விரல், உடுப்பு, நெற்றியில் வைத்து பார்த்தால் சாப்பாட்டில் கலந்து முதுகில் எந்திரம் வைத்து நினைத்தால் அவளுக்கு அது தெரியும். அப்போது வா என்று கூறினால் அவள் வருவாள். இதுதான் உயர்தர வசியமாகும்.
அசுத்த ஆவிகள்
வசியம் செய்யப்படுகையில் அசுத்த ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகின்றது. அசுத்த ஆவிகள் எனும் போது இந்து மத்த்திலுள்ள 33 கோடி தேவர்களையும் குறிக்கின்றது. ஆவிகளுடன் பேசுதல் என்பது தெய்வங்களின் ஆவிகளுடன் பேசுதல் என்று கூறுவர். இங்கு தெய்வத்தின் ஆவிகளாக இந்து தெய்வங்களையே குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவதாக செத்த மனித ஆவிகளுடன் பேசுதல் ஆவிகளோடு பேசுதல் எனப்படும்.
ஏவல் பில்லி சூனியம்
ஏவல் பில்லி சூனியம் என்பன தெய்வங்களின் ஆவிகளை ஏவி விடுதல் எனப்படும். இது பின்வரும் மூன்று முறைகளில் செய்யப்படும்.
தெய்வம் எனும் ஆவிகளை ஏவி விடுதல் – உம் – முனி, காளி,
செத்த ஆவிகளை ஏவி விடுதல் –
மிருகங்கள், ஊர்வனவற்றை ஏவி விடுதல்
நாய் – கடிக்கும்படி
மாடு – முட்டும்படி
பாம்பு – கொத்தும்படி
மந்திரம் பில்லி சூனியம் வசியம் எனபவற்றால் ஏற்படும் விளைவுகள் யாவை?
1. பணவிரயம்
2. ஏமாற்றம்
3. மரணம் ஏற்பட வாய்ப்புண்டு

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...