வசியம் |
வசியம்
வசியம்
என்பது ஐந்து விதங்களிலே செய்யப்படுகின்றது இதனை செய்பவர்கள் தம் முழு நம்பிக்கையும்
அதன் மேல் செலுத்தியே செய்கின்றனர். அவ்வைந்து வசியங்களையும் கீழ்வருமாறு நோக்கலாம்.
1.
ராஜவசியம்
தேவைப்படும்
நபர்களின் பெயர்களைப் பதித்து, அவர்களை வசியப்படுத்தி வைத்திருக்க வேண்டும் எனும் நோக்குடன்
செய்யப்படுகின்றது. அநேகமாக யாரேனும் ஒருவர் எதிரியாக இருந்தால் அவரை தம்முடன் நன்றாகியிருக்க
வேண்டுமென வசியம் செய்யப்படும்.
2.
லோக வசியம்
இது
ஜனங்களையும், தெய்வங்களையும் ஆவிகளையும் வசியம் செய்து கொள்வதை குறிக்கின்றது. லோக
வசியம் அநேகமானேரால் நடைமுறையில் செய்யப்பட்டு வருகின்றது. கூடுதலாக இதனை பலரும் விரும்புகின்றனர்.
3.
சர்வ வசியம்
இது
இந்துக்களின் தெய்வங்களை வசீகரித்தலாகும். அதாவது அசுத்த ஆவிகளான 33 கோடி ஆவிகளையும்
வசீகரித்து வைத்து, காரியங்களையும் செய்யும்படிக்கு செய்யும் வசியமாகும். 33 கோடி ஆவிகளையும்
வசீகரப்படுத்தினால் மந்திரம் செய்யலாம்.
4.
மிருக வசியம்
இது
மனிதர்கள் தெய்வங்களை வசீகரப்படுத்தப்படுவதைப்போல மிருக ஜீவன்களையும் வசிகரித்தலாகும்.
உதாரணமாக எடுத்துக் கொண்டால் மிகவும் கொடூரமான நாய் இருக்கும் வீட்டில் களவு செய்ய
வேண்டுமானால் அந்த நாயிலிருந்து தப்பும் முகமாக அதனை வசப்படுத்தச் செய்யும் வசியமாகும்.
5.
ஆண் பெண் வசியம்
இது
தமது காதல், திருமணம் என்பன தடைப்பட்டிருப்பவர்கள் ஆண் பெணையோ பெண் ஆணையோ வசியம் செய்து
தமது காதல் ஆசையை அல்லது திருமணத்தினை நடாத்தும்படி வசியப் படுத்துவதாகும். இவ்வசியம்
செய்யவதற்கு குறிப்பிட்ட நபரினதும் பாவனைப் பொருட்கள் தலைமயிர் என்பனவற்றுள் ஏதேனும்
இருந்தால் தான் நல்லது இல்லாவிட்டாலும் வசியம் செய்யலாம். இவ்வசிய முறையானது இரண்டு
முறைகளிலே செய்யப்படுகின்றது
1. சாதாரண தரம் 2. உயர்தரம்
சாதாரண
தரம்
இதனைச்
செய்ய நாட்கள் சற்று அதிகம் தேவைப்படும் இதற்கான பொருட்கள் சாப்பாடு, விபூதி, எண்ணெய்,
என்பவற்றைப் பயன்படுத்தி, சாப்பிடக் கொடுத்தால் அல்லது எண்ணெய் உடுப்புகளில் தேய்த்தால்
அல்லது தலைமயிரில் தேய்த்தால் இது நாளடைவில் பலனளிக்கும் .இச்சாதாரணதர வசியமானது சற்று
செலவு குறைந்தாக காணப்படுகின்றது.
உயர்தரம்
இவ்விசயம்
செய்வதற்கு பணச்செலவானது சற்று அதிகமாகும். ஓர் ஆணுக்கு வசியம் செய்ய வேண்டுமானால்
அந்த ஆணின் வலது காலில் ஒரு துளி இரத்தம் எடுத்து, அதனை மந்திர வசியம் செய்வதற்காக
பயன்படுத்தும் ஐவகை எண்ணெய், மூலிகையுடன் கலந்து இரவு நேரத்திலே, வசியம் செய்பவரினதும்
(யாருக்கு) செய்யும்படி சொன்னாரோ அவரின் பெயரையும் உச்சரித்து, மோகினி ஆவியின் பெயரைக்
கூறி ஒரு நாளுக்கு 1008 தடவையாக முறையாக 7 நாட்களுக்கு எந்திரம் வைத்து தேசிக்காய்
எடுத்து எண்ணெயின் மேல் கொண்டு போகையில் எண்ணெயில் அசைவுகள் தென்படும். (இது ஆண் செய்ய
வேண்டும்) இவ்வெண்ணெயினை பெண் சுண்டு விரல், உடுப்பு, நெற்றியில் வைத்து பார்த்தால்
சாப்பாட்டில் கலந்து முதுகில் எந்திரம் வைத்து நினைத்தால் அவளுக்கு அது தெரியும். அப்போது
வா என்று கூறினால் அவள் வருவாள். இதுதான் உயர்தர வசியமாகும்.
அசுத்த
ஆவிகள்
வசியம்
செய்யப்படுகையில் அசுத்த ஆவிகளுடன் தொடர்பு ஏற்படுகின்றது. அசுத்த ஆவிகள் எனும் போது
இந்து மத்த்திலுள்ள 33 கோடி தேவர்களையும் குறிக்கின்றது. ஆவிகளுடன் பேசுதல் என்பது
தெய்வங்களின் ஆவிகளுடன் பேசுதல் என்று கூறுவர். இங்கு தெய்வத்தின் ஆவிகளாக இந்து தெய்வங்களையே
குறிப்பிடப்படுகின்றது. இரண்டாவதாக செத்த மனித ஆவிகளுடன் பேசுதல் ஆவிகளோடு பேசுதல்
எனப்படும்.
ஏவல்
பில்லி சூனியம்
ஏவல்
பில்லி சூனியம் என்பன தெய்வங்களின் ஆவிகளை ஏவி விடுதல் எனப்படும். இது பின்வரும் மூன்று
முறைகளில் செய்யப்படும்.
தெய்வம்
எனும் ஆவிகளை ஏவி விடுதல் – உம் – முனி, காளி,
செத்த
ஆவிகளை ஏவி விடுதல் –
மிருகங்கள்,
ஊர்வனவற்றை ஏவி விடுதல்
நாய்
– கடிக்கும்படி
மாடு
– முட்டும்படி
பாம்பு
– கொத்தும்படி
மந்திரம்
பில்லி சூனியம் வசியம் எனபவற்றால் ஏற்படும் விளைவுகள் யாவை?
1.
பணவிரயம்
2.
ஏமாற்றம்
3.
மரணம் ஏற்பட வாய்ப்புண்டு
No comments:
Post a Comment