Sunday, February 9, 2014

மாந்திரீகமும் மனநிலையும்



  பொதுவாக மாந்திரீகம் என்ற வார்த்தையே பலருக்கு ஒருவித அச்சமும், வியப்பும் கொடுப்பதாக அமைகிறது. பலர் மாந்திரீகத்தின் மூலமாக எதிரிகளை அழிக்கவேண்டும் என்று அலைவார்கள். அவ்வாறு செய்வதற்கு பதிலாக எதிரிகளை திருந்தி ஒற்றுமையாக்க வாய்ப்புக் கொடுக்கலாம். செய்தார்க்கு செய்தவினை என்பார்கள்.

           நாம் ஒருவருக்கு மாந்திரீகத்தின் மூலம் தீமை செய்தால் அந்த வினை உங்களுக்கு நிச்சியமாக துன்பத்தைக் கொடுக்கும். பலர் மாந்திரீக சக்திக்காக பயப்படுவது கண்டுள்ளோம். உண்மையில் தன்னம்பிக்கையுடன், நேர்மையுடன் தெய்வ சங்கல்ப்பத்துடன் வாழ்பவர்களுக்கு மாந்திரீகம் எந்த ஒரு தீமையான பலனையும் செய்யாது
.
           மாந்திரீகத்தின் மூலம் எந்த ஒரு காரியத்தையும் செயல்படுத்த முயற்சி செய்யும் குடும்பங்கள் அவ்வளவு செழிப்பாகவும், சீராகவும் இருக்காது. நன்மையைச் செய்து நன்மையை பெறுங்கள். எனக்குத் தெரிந்த ஒரு காவல்துறைக்காரர் ஒருவர் உண்டு. அவர் மாந்திரீகத்தில் அதிக நாட்டமும், நம்பிக்கையும் உள்ளவர். அவர் அவரின் வாழ்நாள் முழுவதையும் தான் மாந்திரீகத்தால் பாதிக்கப்பட்டவராக எண்ணி தன் பணத்தை பலவாறு மந்திரவாதிகளுக்குதான் சாகும்வரை செலவு செய்து வந்தார். இதனால் அவர் மனநிலையும் கூட ஓரளவு பாதிப்புக்கு உட்பட்டு இருந்தது. இதைப்போல நீங்களும் இத்தகைய மன பாதிப்புக்கு உட்படாமல் இருங்கள்.

மாந்திரீகம்



பலர் மாந்திரிகம் என்ற பெயரில் ஏமாற்றப்படுகின்றனர். யாறும் கடவுளுக் இடைத் தரகராக இருக்க முடியாது. ஏன் நீங்களே முயற்சி செய்து பார்க்க கூடாது?.    கடவுளை பணத்தாலோ, பொருள்களை கொடுத்தோ ஏமாற்ற முடியாது. மாந்திரீகத்தை விற்கவும் முடியாது, வாங்கவும் முடியாது.  
     மாந்திரீகம் என்ற பெயரில் ஒரு தகவல் பரிமாற்ற பகுதியா? இந்த பரிமாற்ற பகுதியை பார்த்த உடன் உங்களுக்கு வியப்பு ஏற்படலாம். இந்த தகவல் பரிமாற்றம் உங்களை ஒரு மந்திரவாதி ஆக்கவேண்டும் என்பது நோக்கமல்ல. இங்கு கொடுக்கப்பட்ட பல காரியங்கள்  உங்களுக்கு ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கொடுக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
  ஆன்மீகமும். மாந்திரீகமும் ஒரு மதத்தின் இரு பகுதிகள் ஆகும். எல்லா மதங்களிலும் மாந்திரீக பகுதி உள்ளது. மாந்திரீகம் என்றதும் மூன்று  தன்மையை அடிப்படையாக கொண்டது.
      1)     மனதிரத்தால் செய்யப்படும் மந்திரங்கள் சார்ந்தது,
              2) தனது திறத்தால் செய்யப்படும் தாந்திரம் கைப்
         பிறட்டு வேலை,
                3) எந்திரம் சார்ந்த தாந்திரீக வேலைகள்.
           மாந்திரீகத்தில் வெள்ளை மாந்திரீகம், கருப்பு மாந்திரீகம் என்ற இரு வகை உள்ளது. உலகெங்கிலும் மாந்திரீகம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. டிவி சேனல்களில் மாந்திரீகம் உண்டா? இல்லையா? என்ற சர்ச்சைகள் உருவாகி மாந்திரீகம் இல்லை என்ற தீர்ப்போடு முடித்திருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.
             அறியாமை, இயலாமை, பய உணர்வுகள், பேராசை ஆகியவைகள் மனிதன் கடவுளைத் தேடும் காரணங்களாக அமைந்துள்ளது. இதேக் காரணங்கள் மாந்திரீகத்தின் மீதும் நாட்டம் அடையச் செய்கிறது. ஆன்மிகம் என்பது ஒரு சரியானத் தேர்வு. மாந்திரீகம் கூட ஆன்மீகத்தின் ஒரு அங்கம் என்று கூறலாம். இத்தகைய மாந்திரீகத்தில் மூன்று வகையான வேண்டுதல்கள் உள்ளன.
  
   1) ஒருவர் சுகமடைய வேண்டும் என்று வேண்டுதல். இது
    நன்மையைச் சார்ந்த வேண்டுதல் ஆகும்.

  2)ஒருவர் நோய்வாய்ப்பட வேண்டும் அல்லது வறுமை
        அடைய வேண்டும் என்ற தீமையான காரியங்களைச்  சார்ந்த
   வேண்டுதல்  ஒரு வகையாகும்.

   3) தான் விரும்பியதை அடைய வேண்டும் போன்ற
   காரியங்களை    அடைய விரும்புவது மூன்றாவது
   வகையாகும்   சுயநலம் காரியங்களைச் சார்ந்த வேண்டுதல்.
   பொதுவாக மாந்திரீகம் என்பது ஒருவரின் விருப்பு வெறுப்பைச் சார்ந்தே இருக்கும். 
                           ஒரு அமெரிக்க யூதர் முனைவர் பட்டத்திற்க்காக மாந்திரீகத்தை கரு பொருளாக எடுத்து ஆய்வு (P.hd) செய்து கொண்டிருந்தார். அவர் உலகின் பல பாகங்களுக்கு மாந்திரீகம் பற்றி தெரிய சென்றிந்தார். அவ்வாறு தமிழ்நாடு வரும் பொழுது தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள பல மந்திரவாதிகளை சென்று பார்த்தார். அவர்களிடம் இருந்து பல கருத்துக்களை பரிமாறிக் கொண்டார். அவரிடம் மாந்திரீகம் என்ற ஒரு கலை உண்டா? என்று கேட்டார். அதற்கு அவர் தற்பொழுது இது ஒரு அழிந்து வரும் கலை. இந்த யுகத்திற்கு ஏற்புடையது அல்ல. மாந்திரீகம் என்பது மனிதன் தன் மனதில் உள்ள அதி தீவிர சக்தியால் செயல்படுவது ஆகும். அதற்கு அதிக உடல், உள்ள பயிற்சிகள் தேவை என்று கூறினார். இப்பொழுது கூட சிலர் வாம சார தெய்வங்களை வழிப்பட்டு மனசக்தியுடன் நெருப்பில் இறங்குவது ஏன் ஒருவித மாந்திரீகம் என்று எடுக்கக் கூடாது? என்று கூறினார்  இன்று அறிவியலாக  இறுப்பது நாளை  அறிவியலாக  இருப்பதில்லை.  அணுவைப் பிரிக்க முடியது என்று கூறிய  அறிவியல் என்ன ஆகிவிட்டது?.  நிருபிக்க பட்ட பல உண்மைகள் தோல்வியைச்  சந்தித்து உள்ளன. அதேபோல் ஆன்மீகமும் பல இடங்களில் ஆன்மீகமாக இருப்பதில்லை. “ஒரு மனிதன் இறக்கிறான் என்றால்" அங்கு அறிவியலும் ஆன்மீகமும் தோல்வி அடைகிறது. உண்மையில் ஆன்மீகமும்,  அறிவியலும் எப்பொழுது ஒரு தேடலாகவே அமைகிறது.. 
   வாருங்கள்  தேடுவோம்" கடவுள் யார்? கடவுளின் பரிமானம் என்ன?
      ஒரு பாதிரியார் என்னிடம் பேசும்பொழுது கூறியவைகள் அப்படியே உங்களுக்கு கொடுக்கிறேன். அவர் சபையைச் சார்ந்த ஒரு நபருக்கு பக்கத்து வீட்டுக்காரர் பல தொந்தரவுகள் கொடுத்தார். அதன் பொருட்டு அவர்கள் சபையைச் சார்ந்த எல்லோரும் ஒன்றுகூடி பக்கத்து வீட்டுக்காரர் தண்டிக்கப்படவேண்டும் என்று வேண்டுதல் செய்தோம். அதன் பலன் ஒரு  வாரத்திலேயே அவர் இறந்து விட்டார் என்று கூறினார். அதற்கு நான் நீங்கள் ஏன் அவர் திருந்துவதற்காக வேண்டுதல் செய்து இருக்கலாமே என்று கூறினேன். இந்த நிகழ்வு உங்களுக்கு மாந்திரீகம் என்றால் என்ன என்று தெரிந்து இருக்கும் என்று எண்ணுகிறேன்.
                      எனக்குத் தெரிந்த சாமியார் ஒருவர் உண்டு. அவர் எப்பொழுதும் என்னை பகைத்தான், அதனால் அவன் பக்கவாதத்தில் விழுந்தான். என்னை தவறாக பேசினான் அதனால் அவன் விபத்தில் அடிப்பட்டு ஆஸ்பத்திரியில் இருக்கிறான் என்று எதிர்மறையான கருத்துக்களை எப்பொழுதும் கூறுவார். இவ்வாறு தீய உணர்வுடைய ஆன்மீகவாதிக்கும், மாந்திரீகம் செய்வதாக கூறி பணம் பறிக்கும் மந்திரவாதிகளுக்கும் வேறு எந்த வித்தியாசமும் கிடையாது.
       வாமசார தெய்வங்களுக்கு படைக்கப்படும் பூஜை, பூஜைப் பொருள்கள் ஆகியவைகள் வேண்டுதல் செய்பவரின் நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு வைதீகக் கருமமாகும். வாமசார தெய்வங்கள் சக்தி உள்ளவை என்று கருதப்படுகிறது. அப்படி இருக்க அவர்களுக்கு அடிபணிய வைக்க பூஜை பொருள் கொடுப்பது என்பது ஒரு வேடிக்கையின் வினோதமான நிகழ்வாக தெரிகிறது. கடவுளை பணத்தாலோ, பொருள்களை கொடுத்தோ ஏமாற்ற முடியாது. மாந்திரீகத்தில் உயிர் பலி என்பது ஒரு சர்வ சாதாரண காரியமாகி விட்டது. சிறு பையன்கள், பிள்ளைகளை பலி இடுவது என்பது கண்கூடாக பார்க்கின்றோம். இப்படி இருக்க சிறு குழந்தைகளை நரபலி இடுதல் போன்றவைகளை தெய்வங்கள் ஏற்றுக் கொள்ளாது. தெய்வங்கள் அவ்வளவு கொடூரமானவர்கள் அல்ல. பொதுவாக மாந்திரீகம் என்பது மந்திர உச்சாடனங்கள் கொண்டதாக உள்ளது. 

        காளி,  சாமுண்டி,  துர்க்கை, முருகன் போன்ற எல்லா தெய்வங்களும் தீமை செய்யும் அரக்கர்களையும், அசூரர்களையும், சூரர்களையும், அழித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தத்துவத்தை மேல் நோட்டமாக பார்க்கக்கூடாது. அசூரர், அரக்கர், சூரர், எல்லோரும் மனிதனுக்குள்ளே இருக்கும் தீய குணங்களாம். இவற்றை ஒழிக்க வேண்டும் என்பதைத்தான் தத்துவார்த்தமாக கூறுகின்றனர். எங்கேயாவது நரபலியை ஆதரித்து இந்து மதத்தில் காண முடியுமா? மக்களை காக்க வேண்டிய கடவுள் யாரையாவது நரபலி கேட்குமா? அப்படி கேட்டால் அவைகள் தெய்வமே அல்ல.
            பொதுவாக சுடுகாடு என்பதற்கு வெறுமை என்பதாகும். பொதுவாக கொலை செய்யும் குடும்ப வாரிசுகளும் சிறப்பாகவும், செழிப்பாகவும் இருந்தது இல்லை. ஆகவே இத்தகைய தீமையான காரியங்கள் எங்கும் இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். மாந்திரீகத்தை விற்கவும் முடியாது, வாங்கவும் முடியாது.

        ஒருவரின் ஜாதகத்தை வைத்து அவருக்கு நன்மை செய்யும் கிரகங்களை செயல் படாதபடி ஆக்கி தனக்கும் எதிராளிக்கும் படுபச்சி நேரத்தை கணக்கிட்டு அஸ்டஅங்க இருதயத்தில் உள்ள பிரணவ சக்தியை எழுப்பி பஞ்ச காயம், பஞ்ச கவ்வியம், சுத்தி செய்து தனது பிராணனை கருவிற்கு கொடுத்து உயிரோட்டம் பெற வைத்து மந்திரங்களை உச்சாடனம் செய்து காரியத்தைச் சாதிக்கும் வாமசாரிகளாகிய மந்திரவாதிகளை இந்த யுகத்தில் காண்பது அரிதாகும். இவ்வாறு கூறிக் கொண்டு நான் சென்றால் முடிவில்லாத கதை ஆகிவிடும். ஆகவே மாந்திரீகம் என்று ஏமாறாதீர்கள்.  மாந்திரீகம் என்று ஏமாற்றாதீர்கள். நாம் அந்த யுகத்தைக் கடந்து அடுத்த யுகத்திற்கு வந்து விட்டோம். ஆகவேமாந்திரீகத்தைப்பற்றி சுவையான தகவல்களுடன் சில நல்ல காரியங்களைப் பற்றியும் காண்போம்.

#கர்மவினையைவெல்ல.....தொடர்சி..3

# கர்மவினையைவெல்ல .....தொடர்சி..3 # காலபுருஷதத்துவமும்  கர்மாவும் : கால புருஷ தத்துவப்படி 12 இராசிகளும் தர்ம, கர்ம, காம மற்றும் மோட்ச ...