மாந்திரீகத்தில் பெரும் அளவில் ஆண்பால், பெண்பால் சார்ந்த பிரச்சனைகள் தான் முன்
வைக்கப்படுகிறது. கணவன், மனைவி ஓன்று சேர்த்தல், தான் விரும்பிய பெண்ணையோ, ஆணையோ
அடைய முயற்சித்தல், தனது சுயநலத்திற்காக ஒரு ஆணை ஆண்மைத் தன்மை இல்லாமல் ஆக்குதல்
போன்ற பல பிரச்சனைகள் முன் வைக்கப்படுகிறது. இத்தகைய பிரச்சனைகளுக்கு ஆண், பெண்
வசியம், ஆண், பெண்ணை பிரிக்கும் பேதனம் போன்ற முறைகள் கடைபிக்கப்படுகிறது.
காம இயல்
நூல்களான ஆதிசங்கரர், வத்தியாசனர், அதிவீரபாண்டியன் போன்றவர்கள் எழுதிய காமஇயல்
நூல்களில் இத்தகைய மாந்திரீக முறைகள் ஆங்காங்கே சிதறப்பட்டுள்ளது. அவர்கள் மன்மதனையும்,
ரதியையும் காமத்திற்கு கடவுளாக வைத்து பல மந்திரங்கள்
கூறப்பட்டுள்ளன. மாம்பூ, அசோகம் பூ, மகிழம்பூ, ஆகியவற்றை மன்மதனுக்குறிய மலர்கனைப் பூவாக கூறி மன்மதனுக்கு எவ்வாறு பிரயோகித்து
காரியங்களை சாதிக்க முடியும் என்று தெளிவாக எழுதியுள்ளனர். அந்த நூல்களில்
உயிரோட்டமான பல மந்திரங்கள் மற்றும் ஈடு முறைகள் உள்ளன. பொதுவாக மன்மதனின்
மந்திரத்தில் லா, லூ, லோ, ஆகியவைகள் இடம் பெறும். நாம் இன்று கூட காம இச்சையுடன்
அலைபவனை லோ, லோ என்று அலைகிறான் என்று கூறுவது வழக்கம். முறையற்ற காமநெறி உள்ளவர்களை லோலாயி என்று அழைப்பது
வழக்கம்.
மேலும் இந்த
நூல்களில் ஆண்களின் காம இயல் சார்ந்த பல மருந்துகளும் ஈடு முறைகளும்
கூறப்பட்டுள்ளது. எல்லாவற்றையும் பூடகமாக எல்லோரும் அறிய முடியாத வகையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பெண்களைச் சார்ந்த மருந்துகளும்
ஈடு முறைகளும் உள்ளன. மேலும் சித்தர்கள் கூட ஆண், பெண் வசியம் சார்ந்த பல மைகள்,
மற்றும் ஈடு முறைகள்
கூறப்பட்டுள்ளது. அந்தக் காலங்களில் பணத்திற்காக அலையும் விலை மாதுகள் இத்தகைய
முறைகளில் பொட்டுக்கள் வைத்து எல்லோரையும் தன பக்கம் இழுத்ததாக தெரிய வருகிறது.
உதாரணமாக ஒரு வசியப்
பொட்டில் இரண்டு வரிகள் இங்கு கூறுகிறேன். விலை மாதரால் வஞ்சிக்கப்பட்டு வறுமையாகி
தர்மம் எடுத்துக் கொண்டிருப்பவர் தனது கதையை இவ்வாறு கூறுகின்றான். வாளுளுவை நொய்யில் சாதிலிங்கம் தான்
சேர்த்து “மாய” பொட்டிட்டால் மங்கை நான் இக்கதிக்கு ஆனேனே” என்று வசியப் பொட்டைப் பற்றி பாதிக்கப்பட்டவன்
கூறுகின்றான். இந்த பாட்டை பார்த்த உடன் சாதிலிங்கத்தை வாள்ளுவை அரிசி நெய்யில்
அரைத்து தயாரிக்க ஆரம்பித்து விடாதீர்கள். இதில் சேர்க்கவேண்டிய பல மருந்துகள்
மறைக்கப்பட்டுள்ளது. இத்தகைய காம இயல் சார்ந்த மாந்திரீகங்கள் வடநாட்டிலும்,
தென்னாட்டிலும் இருப்பினும் தமிழகத்தில் பல முறைகள் உயிரோட்டமானதாக
கூறப்பட்டுள்ளது.
இனவியல் சார்ந்த ஒரு நூலில் உள்ள மன்மத வணக்கத்தைப்
பாருங்கள். “நான் பிரிதொரு தெய்வம் வணங்கேன், நான் வணங்குவதும் மன்மதனே, நான்
சேவிப்பதும் மன்மதனே” என்று கூறப்படுவதிலிருந்து எந்த அளவுக்கு கோக்கோக நூல்கள்
இனவியலை ஒரு புனிதமாகவும் கருதியுள்ளனர். ஆண் பெண் செயற்கை ஒரு புனித செயலாக எண்ணப்படுகிறது.
“அ” ஆணும் "உ" என்ற பெண்ணும் "ம" என்ற மன்மத உணர்வுடன் சேர்வது பிரணவ யோகம். ஆண் பெண் செயற்கை இல்லாவில் ஏது உலகம். இத்தகைய காமநுகர்வு இல்லை ஏன் நீங்களும் நானும் ஏது?
ஆதிசங்கரர் எழுதிய கோக்கோக நூல் மூலம் அதன் காமவியலின்
முக்கியத்துவம் தெரியவருகிறது. மேலும் “பலமுனை” காமநுகர்வினால் ஏற்படும் உடல் உள்ளம் சார்ந்த சிதைவுகளையும்
கூறியுள்ளார். சித்தர்கள் சிலர் இத்தகைய “பலமுனை” காமநுகர்வுகள் ஆன்மீகத்தை பழுதாக்கிடும் என்று
கூறுகின்றனர். இந்திய காமநுகர்வு சார்ந்த மாந்திரீகத்தை எழுதினால் எழுதிக் கொண்டே
இருக்கலாம். இனி உலகளவில் காமம் சார்ந்த மாந்திரீகத்தை பார்ப்போம்.
உடு, மற்றும் ஐரோப்பிய மாந்திரீகங்களில் காமஇயல் சார்ந்த
பல மந்திரங்கள் உள்ளன. அவைகள் அனைத்தும் வேண்டுதல்களாக உள்ளது. இந்திய மாந்திரீக
மந்திரங்களைப் போல் பீஜ கோஜ மந்திரங்களுடன் உயிரோட்டமாக இல்லை. அவர்கள் இத்தகைய
மாந்திரீக நடைமுறைகளை தந்திர யோகா என்று கொச்சைப்படுத்தி உள்ளனர். தந்திரயோகம்
என்பது ஆண்,பெண் சார்ந்த (கணவன்,மனைவி) யோகமுரையாகும். அங்கு காமத்திற்கு இடமில்லை. ஆனால் இத்தகைய தந்திரமுரைகள் புனிதமானவை.
அவர்களிடம் ஆண், பெண் வசிய சேர்க்கை, பிரிவினை போன்ற பல முறைகள் உள்ளன. அவற்றில்
அவர்கள் நாட்டில் உபயோகப்படும் பொருள்களும் மெழுகுத்திரியும், வாசனைத்திரவியங்களும்
இடம் பெறுகிறது. அவர்கள் வாசனை திரவியங்களுக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கின்றனர், மஸ்கு, சிவிட் போன்ற வாசனைத் திரவியங்கள் உபயோகித்தால் எதிர்பால்
இனத்தவர் வசியமாவார் என்ற கருத்துண்டு. இத்தகைய ஐரோப்பிய காமம் சார்ந்த
பரிகாரங்கள் பலருக்கு தோல்வி அடைகிறது. அதற்காக அவர்கள் ஆப்பிரிக்க நாட்டு உடு
மந்திரவாதிகளை சந்தித்து இனவியல் சார்ந்த பிரச்சனைகளை தீர்க்க முயல்கின்றனர்.
இத்தகைய முயற்ச்சியில் பெரிய, பெரிய அரசியல்வாதிகள், செல்வந்தர்கள் சென்று
சந்திக்கின்றனர்.
ஐரோப்பிய
மாந்திரீகத்தில் ஆண், பெண் சேர்க்கையில் உச்சக்கட்டம் அடைதல், ஆண்கள் சார்ந்த,
மற்றும் பெண்கள் குறைபாடுகளைக் களைந்து வெற்றிகரமான வாழ்க்கை நடத்துவதற்கான நெறி
முறைகள், மந்திரங்கள், தந்திரங்கள் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் 1875-ஆம் ஆண்டில்
பிறந்த க்கிரவுலி பல மாந்திரீங்கள் சார்ந்த நூல்கள் எழுதியுள்ளார். அவர் ஒரு மாந்திரீகர், ஜோசியர், வித்தைக்காரர், மாந்திர தந்திரவாதி. அவர் கோல்டன் டான், புனித மந்திர புத்தகம், மாயவாதம் (4- புத்தகங்கள்), The
Lesser Key of Solomon the King நூல்கள் எழுதியுள்ளார். அந்த நூலில் மந்திரங்கள் சார்ந்த தியான முறைகளை கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு ஜெர்மன் விலைமாதுவின் பாலியல்
கவர்ச்சிக்காக செய்த மந்திர தந்திர மாந்திரீகத்தை கூறியுள்ளார். அவர் அந்த மேஜிக் என்ற நூலில் ஆண், பெண் சார்ந்த மாய ஜால மாந்திரீக
முறைகள் கூறியுள்ளார். அவைகள் வியப்பும், விந்தையும் அளிக்கிறது. இவர்கள் தங்கள் மாந்திரீகத்திற்கு அருங்கோணங்களை உபயோகித்துள்ளனர். பொதுவாக பிரிமேன்சன் என்ற வகையைச் சார்ந்தவர்கள் மற்றும் மனித மண்டையோடு, மற்றும் எலும்பு சார்ந்த
சங்கத்தினர்கள் சாத்தானை
வணங்குபவர்கள் பலர் காமம் சார்ந்த அமைப்பின் அடிப்படையில் இருந்துள்ளனர். இத்தகைய
சங்கத்தில் பல பெரிய ஆன்மீகவாதிகளும், அரசியல்வாதிகளும் அங்கத்தினராக இருந்தனர்
என்பது ஒரு வியப்புக்குரிய காரியமாகும். இத்தகையவர்களின் அடிப்படை வேதாந்தமே
காமநுகர்வைச் சார்ந்ததாகவே இருந்தது.
“ கார்ல்கெல்லர்” 1851-ஆம் ஆண்டு ஜெர்மினியில் பிறந்தவர். இவர் காமநுகர்வு சார்ந்த பல மாந்திரீக
கட்டுரைகள் எழுதியுள்ளார். இவர் பாலியல் சார்ந்த மந்திர, தந்திரங்களை கூறியள்ளார்.
அவைகள் இன்றும் பலரால் போற்றப்படுகிறது. இவரால் உயர்ந்த காம மந்திரவியல், மற்றும்
மந்திர நுற்பங்கள், உச்ச மந்திர உடலுறவு முறைகள் ஆகியவற்றை கூறியுள்ளார்.
மேலும் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த “ஐடா க்ரோடக்” என்ற பெண்மணி பிலடெல்பியா பிறந்தவர். 19 ஆம் நூற்றாண்டில், பாலியல் சீர்திருத்தவாதி. சிகாகோவில் திருமணம் ஜோடிகளுக்கு "விசித்திரமான" பாலியல் ஆலோசனை வழங்கும் அலுவலகம் திறக்கப்பட்டது. புனித பாலியல் சார்ந்த பல மந்திர தந்திரங்களை
கூறியுள்ளார். அவர் விசித்திரமான
பாலியல் உறவுகளையும், மாய, மந்திரவாத அமைப்பின்படி கூறியுள்ளார். அவர் காமநுகர்வு
சார்ந்த பல நூல்கள் எழுதியுள்ளார். அவற்றில் ஆண், பெண் உறவு சார்ந்த பல முறைகள் கூறப்பட்டுள்ளது. அவர் “ஹெவன்லி மாப்பிள்ளைகள்” , “மனம் ஒத்த மண வாழ்க்கை”, “ஆன்மீக இன்பம்”, “திருமண இரவு” மற்றும் “சரியான திருமண வாழ்க்கை” நூல்கள் எழுதியுள்ளார்.
ஐடா க்ரோடக் அவர்கள்
பெண்ணுரிமை சார்ந்த பல கல்வி முறைகளை உபதேசித்தார். அவருடைய வாழ்க்கை முறையும்
முற்றிலும் மாறுப்பட்ட அற்புதங்களும், மாந்திரீக சக்திகளும் நிறைந்ததாக இருந்தது.
அவர் உலகளவில் திருமணம் ஆகாதவர், ஆனால் அவரோ தனக்கும் ஷேபா என்ற தேவதைக்கும் திருமணம் ஆகிவிட்டதாக
கூறினார். அவர் தனது வாழ்கையை மிக மகிழ்ச்சியுடனும், திருப்திகரமாக
நடத்தியதாக கூறுவது ஒரு வியப்புக்குரிய நிகழ்வாக தோன்றியது. அவருடைய வித்தியாசமான
மாந்திரீக காமஇயல் எல்லோருக்கும் ஒரு வியப்பின் குறியாக இருந்தது.
1902 – ஆம் தேதி அக்டோபர் 10-ஆம் தேதி நியூயார்க் பேடரல் கோர்ட் ஐடா அவர்களின்
விசித்திரமான மாந்திரீக காமஇயல் காரணமாக அவருக்கு மூன்று மாத சிறைத் தண்டனை
கொடுத்தது. அவர் சட்டம் தனது தனிப்பட்ட காம வாழ்வில் ஈடுபடுவது முறையற்ற
செயல் என்று எண்ணினார். இது சம்பந்தமாக ஒரு கடிதத்தை தனது தாய்க்கு எழுதினார். அவர் அதில் மாந்திரீகம்
சார்ந்த காமஇயலை நீதிபதிகள் அசிங்கமானது, அழுக்கானது, கீழ்த்தரமான ஆபாசமானது என்று
வர்ணித்ததை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தனி மனிதன் சுதந்திரத்தில் அரசோ,
சட்டமோ, ஈடுபடுவதற்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என்று கருதி 1902-ஆம் வருடம்
அக்டோபர் 16-ஆம் தேதி சமையல் எரிவாயுவை திறந்து தன்னையே எரித்துக் கொண்டார்.
இன்றும் அவருடைய வாழ்க்கையில் நடந்த ஷோபா என்ற "வானலோக நபரின் திருமணம்" அவர்
அந்த நபருடன் வாழ்ந்த குடும்ப வாழ்க்கை மற்றும் ஐடா அவர்கள் கூறிய முற்போக்கான
கருத்துக்கள் மாந்திரீக உலகில் ஒரு வியப்பிற்க்குரியாக
உள்ளது. அவர் தனது தற்கொலை கூட சட்டத்தின் ரீதியில் நேர்மையானது என்று
கூறியுள்ளார். அவருடைய எல்லா நூல்களும் மற்றும் அவருடைய கட்டுரைகள், கடிதங்கள் எல்லாம்
அமெரிக்க பல்கலைகழகம் ஒருங்கிணைத்து தொகுத்து வைத்துள்ளது. இன்று வரை ஐடா அவர்களின் கட்டுரை வாழ்க்கை நெறி மனோதத்துவ
நிபுணர்களுக்கு ஒரு புரியாத புதிராக உள்ளது. ஏன் என்றால் ஐடா அவர்கள் மனோதத்துவம் தெரிந்த
ஒரு கல்லூரி பேராசிரியர்.