வசியம் என்பது காலம் காலமாய்
நடைமுறையில் உள்ளது. சித்தர்கள் காலம் முதல் சங்க இலக்கிய காலம் தொடர்ந்து இக்காலம்
வரை பெண் வசியம் ஆண்வசியம் இருந்து வருகிறது.
விரலி விடு தூது எனும் சங்க இலக்கியத்திலும்
பரத்தையர் குல முதியவர் தன் குல இள மங்கைக்கு ஆண் வசியம் பற்றி கூறும் செய்தி காணப்படுகிறது.
பெண்ணே! குலத்தொழிலான நம் தொழில்
குறித்து உனக்கு எதுவும் சொல்ல வெண்டியதில்லை."உன்னிடம் வருகின்றவர்கள் ஒரு சிலர்
தங்கள் இடுப்பில் மருந்து கட்டிக்கொண்டு வந்து உன்னை கசக்கி பிழிவார்கள்" என்கிறாள்.
நாயகி பிரேதமாக
தொங்கிக் கொண்டிருந்தவளின் குதிகாலில் உள்ள
குறிப்பிட்ட நரமைத் தேடிக் கண்டுபிடித்தாள்.கோழி ஒன்றை காவு கொடுத்தாள்.குதிகாலில்
இருந்து எடுத்த நரம்பில் விளக்கெரித்து எண்ணெய் வடித்துக்கொண்டு வீரமாகாளியை கும்பிட்டாள்.ஆள் அரவமில்லாத நரிகள்
ஊளையிடும் நெரத்தில் சுடுகாட்டிற்கு சென்று தலைச்சன்பிள்ளை மண்டை ஒட்டை எடுதுக்கொண்டாள்.
பிறகு
ஊமத்தம் சாறில் உழக்கு அரிசியை ஊறவைத்து முன் கண்ட மருந்து வகைகளின் நெய்யை ஊற்றி,அரைத்து
உருன்டையாக உருட்டிஎடுத்து வைத்துக்கொண்டாள்.பொழுது விடிந்ததும்,பாலில்,பானகத்தில்
கலந்து அவள் காதலனுக்கு கொடுத்தாள்.
வெறி
பிடித்து பைதியமாகி தன்னிடம் இருந்த எல்லாவற்றையும்
அவளிடம் கொட்டிக்கொடுத்தான்.
இது
கதையல்ல,இன்னும் பல குடும்பங்களில் ஆண்களை மயக்கவும்,பெண்களை மயக்கவும் நடைமுறையில்
பல வழிகள் உள்ளன.