Skip to main content

Posts

Showing posts from September, 2012

இயற்கை தரும் பாடம்!

“மரத்தையும், கல்லையும், விஷம் கக்கும் பாம்பையும் மனி தன் வணங்குகிறானே… மிருகங்களை இறைவனுக்கு வாகனமாக்கி யுள்ளானே… இதெல்லாம் மூடநம்பிக்கை இல்லையா?’ என்று கேட்பவர்கள் இருக்கின்றனர். தத்தாத்ரேயர் இவர்களுக்கெல் லாம் பதில் சொல்லி உள்ளார். இவர், அத்திரி முனிவர்- அனுசூயா தம்பதியின் புதல்வர். பெரிய ரிஷியாக விளங்கினார். தத்தாத்ரேயர் காட்டில் சுற்றிக் கொண்டிருந்த போது, யது என்ற மன்னனைச் சந்தித்தார். தத்தாத்ரேயர் மிக மகிழ்ச்சியாக இருந்ததைக்கண்ட அவன், அவரது மகிழ்ச்சிக்கான காரணத்தையும், அவரது குரு யார் என்பதையும் கேட்டான். “எனக்கு 24 குருமார்கள் இருக்கின்றனர்…’ என்றார். இந்தப் பதிலைக் கேட்டு ஆச்சரியப்பட்ட மன்னன், “சுவாமி! ஒரு வருக்கு ஒரு குரு தானே இருக்க முடியும்? தங்கள் பதில் வித்தியாசமாக உள்ளதே…’ என்றான். அவனிடம், “பஞ்சபூதங்களான ஆகாயம், நீர், நிலம், நெருப்பு, காற்று, சந்திரன், புறா, மலைப்பாம்பு, கடல், விட்டில்பூச்சி, வண்டு, தேனீ, குளவி, சிலந்தி, யானை, மான், மீன், பருந்து, பாம்பு ஆகியவையும், நாட்டியக் காரி பிங்களா, ஒரு குழந்தை, ஒரு பணிப்பெண், அம்பு தயாரிப் பவன், சூரியன் ஆகியோரு

தெய்வத்தை அணுகும் முறை

உலகத்திலேயே மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடியது அமைதியும், நிம்மதியுமே. பணம் வரலாம்; போகலாம். பல தாரங்களை மணந்து கொள்ளலாம்; வீடு வாங்கலாம்; விற்கலாம்; நிலம் வாங்கலாம்; சொத்தைப் பெருக்கலாம்; எல்லாம் இருந்தும் கூட நிம்மதி இல்லை என்றால் அவன் வாழ்ந்து என்ன பயன்? சேர்க்கின்ற சொத்து நிம்மதிக்காக. கட்டுகிற மனைவி நிம்மதிக்காகவே. தேடுகின்ற வீடும், நிலமும் நிம்மதிக்காக. எப்போது அவன் நிம்மதியை நாடுகிறானோ, அப்போது அவனுக்கு அவஸ்தை வந்து சேருகிறது. ஆரம்பத்தில் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ பல சிக்கல்களைத் தானே உண்டாக்கிக் கொள்கிறான். தானே கிணறு வெட்டுகிறான்; அதில் தானே விழுகிறான். தானே தொழில் தொடங்குகிறான்; தவியாய்த் தவிக்கிறான். தானே காதலிக்கிறான்; அதற்காக உருகுகிறான். தானே ஒரு பெண்ணை விரும்பிக் கல்யாணம் செய்து கொள்கிறான்; பிறகு இது பெண்ணா?, பேயா? என்று துடியாய்த் துடிக்கிறான். எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் மனித வாழ்க்கை துன்பகரமாகவே காட்சியளிக்கிறது. ஆகவேதான், மனிதன் ஏதாவது ஒரு புகலிடத்தை நாடுகிறான். தனக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர்க

கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது…

* கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது. * கோவில்களில் உள்ள பிரகாரத்தை சுற்றும்போது, பெண்கள் தலையில் துணியை கட்டிக் கொண்டு சுற்றுதல் கூடாது. தலைக்கு குளித்த பின் தலைமுடியின் பின் நுனியை முடிந்து போடாமல், விரித்து போட்டுக் கொண்டு சுற்றுவதும் தவறான முறை. * கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே செல்லும் முன்பு, சில நிமிடங்கள் உட்காந்து விட்டு செல்வது சிறப்பு தரும். அப்போது கோவில் கோபுரத்தை தரிசனம் செய்வதும் நல்லது. கோபுர தரிசனம் கோடி பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கக்கூடியது. * கோவிலில் உள்ள அரச மரங்களை சனிக்கிழமைகளில் தான் தொட்டு வணங்க வேண்டும். அதே போல் காலையில் அரச மரத்தை சுற்றுவது தான் மிகவும் நல்லது. பெரும்பாலும் பிற்பகல், மாலை நேரங்களில் சுற்றுவதை தவிர்த்து விடவும். * கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டு கோவிலை சுற்றி சிலர் உருண்டு வலம் வருவார்கள். அப்படி செய்கிறவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காலை வேளையை தேர்வு செய்வது நன்மையை தரும். * கோவிலை சுற்றும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒருமுறை இருக

சுவாமிக்கு அபிஷேகம் செய்வதால் பெறுகின்ற பலன்கள்:

சுவாமிக்கு அபிஷேகம் செய்வதால் பெறுகின்ற பலன்கள்: நல்லெண்ணை – சுகத்தைத்தரும் பஞ்சகவ்யம் – மனதை சுத்தகரிக்கும் நெய் – மோட்சத்தைக் கொடுக்கும் பால் – நீண்ட ஆயுளைத்தரும் தயிர் – மகப்பேறு உண்டாகும் பஞ்சாமிர்தம் – வெற்றியை அளிக்கும் கரும்புச்சாறு – ஆரோக்கியம் பெருகிடும் தேன் – கலைவாணியின் அருள்கிட்டும் பழரசம் – மரண பயத்தைப் போக்கும் இளநீர் – உயர் பதவி வாய்க்கும் சந்தனம் – இறைவனோடு இரண்டரைக் கலக்கச் செய்யும் கலசாபிஷேகம் : அஷ்ட லட்சுமி கடாட்சத்தை தரும் வஸ்திரம் : வறுமையைப் போக்கும்

அங்கீகாரத்தை அவன் தருவான்!

வாழ்க்கையில் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும், என்ன தான் எழுதினாலும், பேசினாலும், வெற்றிகளைக் குவித்தாலும், அதற்கான அங்கீகாரம் மட்டும் என்னவோ சிலருக்குக் கிடைப்பதில்லை. இதுபற்றி அவர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். ஆனால், எவனொருவன் நிஜமான உழைப்பாளியோ, அவனை ஆண்டவன் அங்கீகரித்தே தீருவான். இதோ... மன்னனாக வாழ்ந்தும், தன் வெற்றிக்கு அங்கீகாரம் அளிக்காத சமூகத்தை கண்டு வெறுத்த ஒருவருக்கு, ஆண்டவன் அங்கீகாரம் அளித்த கதையை கேளுங்கள்... திருக்களந்தை என்னும் பகுதி, சோழ நாட்டில் ஒரு சிற்றரசாக இருந்தது. இந்த நகரை ஆட்சி செய்தார் கூற்றுவர்; கூற்றுவன் என்றால் எமன். யாராவது எமனுடைய பெயரை வைத்துக் கொள்வரா? உண்மையில் இவரது பெயர் இதுவல்ல. நிஜப்பெயர் யாருக்கும் தெரியவும் இல்லை. இந்த மன்னர், எதிரிகளுக்கு எமன். போர் என்று வந்து விட்டால், வெற்றி இவருக்கே! எனவே, கூற்றுவர் என்ற பெயர் இவருக்கு நிலைத்து விட்டது. சிற்றரசராக இருப்பவர், பேரரசர்களை ஜெயிக்க முடியாதா என்ன? தன் வீரத்தை வெளிப்படுத்த, சேர, சோழ, பாண்டிய நாடுகள் மீதும் படையெடுத்தார். சாதிக்கும் திறனுள்ள

சிவம்

நாம் எப்படி வாழவேண்டும் என்பதை உணர்த்துவது - சிவசொரூபம். சிவனுடைய ஜாடமுடியிலிருக்கும் பிறை சந்திரன், நம்முடைய இன்பமும், துன்பமும் மாறி மாறி வளர்பிறை, தேய்பிறையாக வருவதை குறிக்கும். சிவனுடைய சிரசிலிருக்கும் கங்கை: மனதை, கங்கை போல, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கங்கையில் எத்தனை அழுக்குகள் வந்து சேர்ந்தாலும் அதன் தூய்மை கெடுவதில்லை. அதுபோல, ஆசாபாசங்கள் நம்மை வழித்தவறி போகச் செய்தாலும், நாம் தூய்மையை விட்டு அகலக்கூடாது. ஒவ்வொரு நிமிடமும் பாவக்குழியிலே தள்ள நச்சுப்பாம்பாக சூழ்நிலை நமக்கு காத்திருக்கிறது. இதையே சிவனுடைய கழுத்தில் இருக்கும் பாம்பு எச்சரிக்கிறது. மிருக உணர்ச்சிகள் நம்மை பாதிக்கா வண்ணம் உயர்ந்த உள்ளத்தோடு நாம் வாழவேண்டும் என்பதை சிவனுடைய புலித்தோல் ஆடை உணர்த்துகிறது. உடல் முழுவதும், சாம்பலை பூசியிருப்பது மனிதனுடைய முடிவு, பிடிசாம்பல்தான் ஆகவே அகங்காரத்தை விட்டொழிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. ஈசன் தன் உடம்பின் ஒரு பாகத்தில் தேவியை வைத்திருப்பது. வாழ்வில் நாம் காமத்தை வென்று, மோட்சத்தை அடையவேண்டும் என்பதற்காகத