Skip to main content

Posts

Showing posts from May, 2012

கடமைக்காக கோவிலுக்குச் செல்லாதீர்

கடமைக்காக கோவிலுக்குச் செல்லாதீர்!   “ஆடு காண், போகுது பார்…’ என்றார் ஒரு சித்தர். அப்படி என்றால் என்ன? ஆடு போகுது, அதைப் பார் என்று சொன்னாரா? இல்லை. சித்தர்கள் சொல்வ தெல்லாம் மக்களின் நன்மைக்குதான். ஆடு என்றால் புண்ணிய தீர்த்தங்களில் நீராடு; காண் என்றால் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போய், பகவானை தரிசனம் செய் என்று அர்த்தம். இப்படிச் செய்வதை, “போகுது பார்’ என்றனர். போகுது பார் என்றால், புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்து, கோவில்களுக்கு சென்று, பகவானை தரிசனம் செய்தால், பாவங்கள் தொலையும் என்று பொருள் கூறினர். நமக்கு அதில் ஈடுபாடு உண்டு தான். ஒரு டூரிஸ்ட் பஸ் கிளம்புகிறது. மூன்று நாட்களில், 40 ஸ்தலங்கள் என்கின்றனர். அவர்கள் சொல்லும் பணத்தைக் கொடுத்துவிட்டு அதில் செல்கிறோம். போகும்போதே நமக்கு கோவில், தெய்வ தரிசனம் இவைகளில் புத்தி போகிறதா? “அடுத்து நல்ல ஓட்டல் எப்போது வரும், பஸ் நிற்கும் இடத்தில் உள்ள ஓட்டலில், காபி நன்றாக இருக்குமா, மசால் தோசை கிடைக்குமா?’ என்று தான் யோசனை போகிறது. எப்படியோ, ஒரு கோவில் வாசலை பஸ் அடைந்து விடுகிறது. உடனே எல்லாரும் இறங்குவர். “சார்… பஸ் இங