Skip to main content

Posts

Showing posts from July, 2012

சாதுக்களோடு பழகினால்…

நல்லவர்களின், மகான்களின் சகவாசம் வைத்திருந்தால், நமக்கும் நல்லவர்களின் புத்தி ஏற்படும். அதனால் தான், “மகான்களை அண்டி இரு…’ என்றனர். மகான்களை தரிசித்தாலும், அவர்கள் இருந்த இடத்தில் இருந்தாலும், அந்த மகான்களின் குணங்கள் நமக்கும் ஏற்படும். கெட்டவர்களோடு சேர்ந்திருந்தால் கெட்ட புத்தி தான் ஏற்படும். காட்டு வழியே போய் கொண்டிருந் தான் ஒருவன். அவனை துரத்தியது ஒரு புலி. பயந்து ஓடி ஒரு மேடையை அடைந்தான். புலியும் அவனை துரத்தியபடி அந்த மேடைக்கு வந்தது. ஆனால், ஒன்றும் செய்யாமல், சாதுவாக அங்கே படுத்துக் கொண்டது. இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. மேடையில் இருந்து கீழே இறங்கி வந்தான். புலியும் அவன் கூடவே இறங்கி, அவனைத் துரத்த ஆரம்பித்தது. மீண்டும் அந்த மேடையில் ஏறினான். புலி அவனைப் பின் தொடர்ந்து வந்து மேடையில் ஏறியது. ஆனால், அவனை ஒன்றும் செய்யாமல், சாதுவாக மேடையில் படுத்துக் கொண்டது. இவனுக்கு ஆச்சரியமாக இருந்தது… “இந்த புலி கீழே இறங்கினால் நம்மைத் துரத்துகிறது; மேடைக்கு வந்ததும் சாதுவாக இருக்கிறதே… அப்படியானால், இந்த மேடையில் ஏதோ விசேஷம் இருக்க வேண்டும்…’ என்று எண்ணி, மேடை மீதிருந்த செட

ஞானத்தைத் தேடி… மவுனம்-கவியரசு கண்ணதாசன்

காற்றுக்கு இலைகள் அசைகின்றன; மலர்கள் அசைகின்றன; கொடிகள் அசைகின்றன; மரங்கள் கூட அசைகின்றன; ஆனால் மலைகள் அசைவதில்லை! அசைவது பலவீனத்தைக் காட்டுகிறது; அசையாதது உறுதியைக் காட்டுகிறது. சளசளவென்று பேசுகிறவன், எவ்வளவு பெரிய கெட்டிக்காரனாக இருந்தாலும், சொற்பொழிவாளனாக இருந்தாலும், தன் பலவீனத்தைக் காட்டிக் கொள்கிறான். மவுனி முட்டாளாக இருந்தாலும் பலசாலியாகக் காணப்படுகிறான். `சும்மா இருப்பதே சுகம்’ என்றார்கள். பேசாமல் இருப்பது பெரும் திறமை. பேசும் திறமையைவிட அது மிகப் பெரியது. அதனால் தான் ஞானிகளும் பெரிய மேதைகளும் குறிப்பிட்ட சில காலங்களில் மவுன விரதம் அனுஷ்டிக்கிறார்கள். ஒன்றைச் சொல்ல வேண்டும் என்று விரும்பி, அதைச் சுருக்கமாகத் தெளிவுபடுத்துகிறவன் பெரிய மரியாதையைப் பெற்று விடுகிறான். சிறிய விஷயத்தைக்கூட வளைத்து வளைத்துப் பேசுகிறவன், கேலிக்கு ஆளாகிறான். பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை, `மக்கட்பதடி’ என்றான் வள்ளுவன். `சுருங்கக் கூறி விளங்க வைத்தல்’ என்பார்கள். ஞானிகள் சில விஷயங்களைக் கூறுகிறார்கள். அவை பொன் மொழிகளாகி விடுகின்றன. பைத்தியக்காரர்கள் பதினாயிரம் பேசுகிறார்க

கேரள மாந்திரீக முறைகள்

           கேரள மாநிலம் ஆன்மீகத்திற்கு என்று பேர் போன்ற இடமாகும். அவர்கள் தங்கள் வாழ்க்கை நெறியை ஆன்மீகத்தோடு ஒன்றிணைத்து வாழ்பவர்கள். ஒரு காலத்தில் கேரள ஆன்மீகமும், மாந்திரீகமும் பின்னிக் கிடப்பதை நாம் காண முடியும், இந்தியாவிலேயே அதிக கல்வி கற்ற மாநிலம் என்றாலும் மாந்திரீகத்தில் நாட்டம் அதிகம் உள்ளனர். அவர்கள் ஆன்மீகத்தையும், மாந்திரீகத்தையும் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது என்று எண்ணி அமானுட வழக்கங்களையும்,  அமானுட நம்பிக்கைகளையும் மேற்கொள்கின்றனர். இந்த மாந்திரீக தாக்கம் அவர்களிடம் அதிகமாகவே உள்ளது. இந்த மாந்திரீகம் அன்றில் இருந்து இன்றுவரையில் அவர்கள் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் ஊறிகிடக்கிறது.            அவர்கள் இந்த மாந்திரீக முறைகளை ஒரு தொழில் முறைக் கலையாகவே கருதுகின்றனர். கேரளாவில்  65  சதவிகித மக்கள் கடவுள் மற்றும் மாந்திரீகத்தில் நம்பிக்கை உள்ளவர்களாக இருக்கின்றனர். அவர்களிடம் கண்திர்ஷ்டி என்ற பார்வை மூலமாக பெறப்படும் தீய பலனை அவர்கள் நம்புகிறார்கள். அத்தகைய பார்வையினால் வரும் கண்திர்ஷ்டியை திசை திருப்ப பல இடங்களில் கொடும்பாவி பொம்மைகள் வைத்திருப்பதை கேரளாவில