Skip to main content

Posts

Showing posts from March, 2012

மச்ச சாஸ்திரம்

சாஸ்திர, சம்பிரதாயங்கள் என்பது நம் பாரத நாட்டில் தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் விஷயம். அன்றாடம் செய்யும் ஒவ்வொரு செயலுக்கு ஒரு வழிமுறை வைத்திருக்கிறார்கள். இதை இப்படித்தான் செய்ய வேண்டும் என்று தீர்மானித்து அதற்கு சாஸ்திர, சம்பிரதாயம் என்று வைத்திருக்கின்றனர். ஆய கலைகள் 64&ல் ஜோதிட சாஸ்திரம் முக்கியமானது. ஜோதிடக் கலை ஒரு மரம் போன்றது. அதில் இருந்து பல சாஸ்திரங்கள் பல்வேறு கிளைகளாக பிரிந்துள்ளன. அதன் ஒரு கிளையாக விளங்குவது அங்க லட்சண சாஸ்திரம். நம் அங்கம், அதாவது உடலில் மச்சங்கள் தோன்றும் இடங்களின் அடிப்படையில் பலன்களை சொல்லி இருக்கிறார்கள். இது காலம்காலமாக நடைமுறையில் இருக்கும் சாஸ்திரம். பெரும்பாலான பலன்கள் ஒத்துப்போவதை நடைமுறையில் காண்கிறோம். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம், பதவி, சொத்து சேர்க்கை, ஆடம்பர வாழ்க்கை வரும்போது ‘அவன் மச்சக்காரன்’ என்பார்கள். பிறக்கும்போதே மச்சம் இருக்கும். நடுவே தோன்றுவதும் உண்டு. ஆனால் இது அபூர்வமான அமைப்பாகும். பிறக்கும்போது தோன்றும் மச்சங்கள் சிறுபுள்ளி, கடுகளவு, மிளகளவு மற்றும் அதைவிட பெரிதாகக்கூட இருக்கும். இவை மறையாது என்பதால் அங்க அடைய