Skip to main content

Posts

Showing posts from April, 2012

மாந்திரீகம் உண்மையா ?

சக மனிதர்களின் இன்ப துன்ப உணர்வுகள், ஒருவரையொருவர் மகிழ்விக்கிறது, பாதிக்கிறது.   உணர்வுப் பரிமாற்றங்கள் தான் மனிதர்களைப் புதுபித்துக்கொள்ளச் செய்கிறது. உணர்வுகளின் சங்கமம் மனிதன். உணர்வுகளுக்கு காந்த சக்தி அதிகம். மனித உணர்வுகளை வசப்படுத்த தெரிந்த அரசியல் வாதிகள், ஆன்மீகவாதிகள், கலைஞர்கள் பிரபலத்துவம் பெறுகிறார்கள். . பேச்சு, எழுத்து, மற்றும் செயல் வடிவில் வெளிப்படையாக பரிமாறப்படும் உணர்வுகள் கண்ணுக்கு தெரியும் வகையைச் சேர்ந்தது. மற்றொரு வகை எண்ணங்களில் மட்டுமே பரிமாறப்படும். வெளிப்படையாக அறிய முடியாது. மன எண்ணங்களின் பிதிபலிப்பு கண்களில் தெரியும். ’அகத்தின் அழகு முகத்தில் தெரியும்’ என்பதுபோல…ஒருவர் என்ன சொல்ல நினைக்கிறார் என்பதை, அவர் வாய் திறந்து சொல்ல முற்படுவதற்கு முன்பாக, அவரது கண்களைப் பார்த்த மாத்திரத்தில் சிலர் புரிந்துகொள்வர். இது அருகருகே இருக்கும் போது நிகழ்வது. . இதிலே இன்னும் முதிர்ந்த நிலை ”இப்பதான் உங்ககிட்ட போன் பேசனும் நினைச்சுகிட்டே இருந்தேன். நீங்களே போன் பண்ணிட்டிங்க.” என்பது போன்ற அனுபவங்கள்.  இது அருகில் இல்லாதபோதும் நிகழக்கூடியது. இவையெல்லாம் எண்ணங்