Skip to main content

Posts

Showing posts from 2012

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய)

மீனம் (பூரட்டாதி 4-ஆம் பாதம் முதல், உத்திரட்டாதி, ரேவதி முடிய) மீன ராசி அன்பர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9-ல் இருந்த ராகு இப்போது 8-ஆம்  இடத்திலும்; 3-ல் இருந்த கேது இப்போது 2-ஆம் இடத்திலும்  மாறியிருக்கிறார்கள். ஏற்கெனவே ராகு- கேது இருந்த இடங்கள் ஓரளவுக்கு பரவாயில்லை என்றே சொல்லவேண்டும். அதனால் ஒரு சில தடை தாமதமான பலன்களையும் காரியத்தடைகளையும் தவிர, பெரிய பாதிப்புகளைச் சந்திக்கவில்லை என்று சொல்லலாம். இன்னும் சொல்லப்போனால் ஒரு சில மீன ராசிக்காரர்களுக்கு சில நல்ல காரியங்களையும் கடந்த கால ராகுவும் கேதுவும் செய்திருக்கிறார்கள் என்பதும் உண்மைதான். ஒரு சிலருக்கு சொந்த இடம், வீடு, வாசல், மனை, புதிய வாகன யோகத்தையும் தந்துள்ளது. ஒரு சிலருக்கு நீண்டகாலமாகத் தடைப்பட்ட பிள்ளையின் கல்யாணமும் நடந்துள்ளது. நல்ல மருமகள், நல்ல மருமகன் ஆகிய பலனையும் சந்தித்துள்ளனர். ராகு-கேது இவற்றுக்கு துணை செய்வதுபோலவும் ஆதரவு காட்டுவது போலவும் 2-ஆம் இடத்து குருவும், 7-ஆம் இடத்துச் சனியும் நல்ல இடத்தில் இருந்து நல்ல இடங்களைப் பார்த்தார்கள். ஏற்கெனவே கேது இருந்த மூன்றாமிடம் அற்புதமான இடம்- ய

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய)

கும்பம் (அவிட்டம் 3-ஆம் பாதம் முதல், சதயம், பூரட்டாதி 3-ஆம் பாதம் முடிய) கும்ப ராசி அன்பர்களே! கும்ப ராசிக்கு இதுவரை 10-ல் இருந்த ராகு இப்போது 9-ல்  துலா ராசியிலும்; இதுவரை 4-ல் இருந்த கேது 3-ல் மேஷ ராசியிலும்  மாறியிருக்கிறார்கள். ராசிநாதன் சனி மூன்றாண்டு காலமாக 8-ல் நின்று உங்கள் தலையில் குட்டிக்கொண்டே இருந்தவர் இப்போது 9-ல் உச்சனாக மாறியிருக்கிறார். 2-க்குடைய குரு 11-க்கும் உடையவராகி 4-ல் அமர்ந்துள்ளார். குருவுக்கு 4-ஆம் இடம் சுமாரான இடம்தான் என்றாலும், 2-க்குடையவர் 10-ஆம் இடத்தைப் பார்ப்பதால் தொழில், வருமானத்தில் தடையில்லை. எனவே முக்கியமான மேற்கண்ட கிரகங்கள் கோட்சார ரீதியாக நல்லபடியாக சஞ்சரிப்பதால் ராகு- கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நல்லதாகவே அமையும். கடந்த மூன்றாண்டு காலமாக கும்ப ராசிக்கு அட்டமச்சனி நடந்த காரணத்தால் பலருடைய வாழ்க்கையில் எல்லாம் இருந்தும் எதுவுமே இல்லாமல் போனதுமாதிரி கஷ்டங்களே நிரம்பி இருந்தது. சாப்பாடு, துணிமணி, தங்கும் இடவசதிக்கு கேடு கெடுதி ஏற்படவில்லையென்றாலும், கொடுக்கல்- வாங்கல், வரவுசெலவு, பழைய கடன்பாக்கி ஆகியவற்றால் வாக்கு நாணயத்தை