Skip to main content

Posts

Showing posts from December, 2011

சித்தர்கள் சொன்ன வசியங்கள்...

மேன்மை பொருந்திய சித்தர்கள் அனைவருமே, உலக மக்கள் நெறி தவறாமல் வாழ வேண்டும் என்பதற்காக, யோக ஞானம், வைத்தியம், வாதம், சோதிடம், மாந்திரீங்கம் என்ற ஐந்து வகைக் காவியங்களை இயற்றித்தந்துள்ளனர். அந்த மாந்திரீக காவியத்தில் அட்டமாசித்துக்கள் என்ற பிரிவில், அட்டமா சித்துக்களை எட்டு பிரிவுகளாக பிரித்துள்ளனர். அவையாவன, 1. வசியம் :- இது மற்றவர்களைத் தன் வசப்படுத்தல். 2. மோகனம் :- இது பிறரை தன்மீது மோகம் கொள்ளச் செய்தல். 3. ஸ்தம்பம் :- இது எந்த வொரு இயக்கத்தையும் அப்படியே ஸ்தம்பிக்கச் செய்வது. 4. உச்சாடனம் :- இது தீய சக்திகள் அனைத்தையும் தன் இடம் விட்டு விரட்டுவதாகும். 5. ஆக்ருஷணம் :- இது துர் தேவதைகளை தன்முன் பணிய வைப்பது. 6. பேதனம் :- இது சுயநினைவற்றுப் பேதலித்துப் போகச் செய்வது. 7. வித்வேஷணம் :- இது ஒருவருக்கொருவர் பகையை உண்டாக்கிப் பிரிப்பது. 8. மாரணம் :- இது உயிர்கள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது. இதிலே நாங்கள் பார்க்கப் போவது வசியம் என்பதைப் பற்றி மட்டுமே. மற்றவைகளை பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம். இந்த வசியத்தையும் எட்டு